நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 18
செவ்வாய்க்கிழமை
திரு ஐயாறு ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் நடைபெற உள்ள சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய் புதன் கிழமைகளில் காவல் தெய்வங்களின் காப்பு கட்டுதல் விழாவில் முதல் திருநாள் -
ஊர் காவல் தெய்வமான ஸ்ரீ பூர்ண புஷ்கலை சமேத ஸ்ரீ ஐயனார் திருக்கோயிலில் ஸ்ரீ ஐயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் காப்பு கட்டுதல் நடைபெற்றது..
இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்களின் உத்தரவுப்படி திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்..
நன்றி
தருமபுர ஆதீனத்தார்
திருத்திகழ் மலைச்சிறுமி
யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை
வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புத
ரிருக்குமிடம் ஏரார்
மருத்திகழ் பொழிற்குலவு
வண்திருவை யாறே. 2/32/1
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
திருவையாரின் புகழ் பாடுவோம். ஐயாறப்பனை பணிவோம், அருள் பெறுவோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. . காவல் தெய்வங்களின் காப்பு கட்டுதல் விழாவில் முதல் திருநாள் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஐயாறப்பனையும், அகிலாண்ட நாயகியையும் பக்தியுடன் வணங்கி தரிசித்து கொண்டேன். என் இஷ்ட தெய்வமாகிய பிள்ளையாரை படத்தில் தரிசித்து பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
ஐயாரப்பரை வணங்கிக் கொள்கிறோம்
பதிலளிநீக்குஓம் சிவாய நமக..