நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 13, 2025

நிறை ஞாயிறு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 30 
வருடத்தின்
 நிறை ஞாயிறு 


எளியேனின் பாமாலை அன்னைக்கு சமர்ப்பணம

கருத்தினில் கதிரொளி காட்டிய தாயே
வருத்தம் தீர்த்தெனை வாழ்த்திடுவாயே
மருந்தினில் மருந்தாய்வேம்பினைக் காட்டினை
பொருந்திடும் தமிழுடன் போற்றுகின்றேனே..


வருந்திடும் பொழுதில் வருகின்ற அருளே
தருகின்ற நலமும் நின் அருள் அமுதே
பெருகிடும் அருளினைச் சொல்ல வழி அறியேன்
உருகிடும் அடியவர் நடுவினில் எளியேன்..

அரும்பொடு அணிமலர் சூட்டிடும் பிள்ளைக்கு
ஒரு துயர் நேராமல் காத்திடுவாயே...
கரும்பினில் இனித்திடும் கனித்தமிழ்க் கவியை
தருகின்ற கவியென வைத்திடுவாயே..


பன்மலர் கொண்டு பரவிட அருள்வாய்
நன்மலர் எனவே வாழ்வினில் திகழ்வாய்
புன்மைகள் எல்லாம் வாழ்வினில் நீக்கி
நன்மைகள்  உடன் நிறை நலம் அருள்வாயே..

வருகின்ற நாட்கள் நலம் தர வேண்டும்
திருமிகு பொழுதென வளம் தர வேண்டும்
அருள்திரு அன்னை மாரியின் அருளால்
திருவளர் கவியும் தனம் பெற வேண்டும்..

வருக வருக வருகவே வருக
வரந் தரும் திருவே வருக
வருக வருக வருகவே வருக..
பொலிக பொலிக பொலிகவே பொலிக
வளமும் நலமும் மேருமலை யெனப்
பொலிக பொலிக பொலிகவே பொலிக..

ஓம் சக்தி ஓம் 

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. சொந்தக் கவி என்று நினைக்கிறேன். அருமை. அன்னையைப் பணித்து அருள் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. எளியேனின் பாமாலை

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அன்னையைப் போற்றும் பாமாலை அருமை.

    அன்னையவள் அனைவர் நலனையும் காக்க வேண்டுவோம்.

    ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..