நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 12, 2025

செங்கண் மால்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 29
சனிக்கிழமை


செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் 
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற 
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திருவிரலால் இறையே ஊன்றி
அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிகள் இந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி 
வலம்புரமே புக்கு அங்கே மன்னி னாரே..6/58/10
-; திருநாவுக்கரசர் :-


சிவந்த கண்களை  உடைய
திருமால் ராமன் என்றாகி - வில்லை ஏந்தி வானர சேனையோடு, கடலில் அணை கட்டி இலங்கையைச் சென்றடைந்து , இராவணனுடன் போர் செய்து , தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்ரீவன், வீபீஷணன் ஆகியோர் உதவியுடன்  வென்றழித்தார்.. 

அத்தகைய
இராவணன் கயிலாய மலையைப் பெயர்த்த போது
அவனுடைய  பத்து மகுடங்களும் பொடிப் பொடியாய் விழுமாறு, தனது கால் விரல்களில் ஒன்றைச் சிறிது ஊன்றி, அவனை மண்ணில் அழுத்தி - பின் அவனுக்கே நல்லருளும் செய்தவர் சிவபெருமான்..


அப்பெருமான், இன்று கப்பல்கள் நிறைந்த கடலின் அருகிருக்கின்ற, மாடவீதிகளை உடைய வலம்புரத்தை  அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கி விட்டார்..
 நன்றி
பன்னிரு திருமுறை

ஸ்ரீராம ராம
ஓம் சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. ஓம் சிவாய நம. ஸ்ரீராம ஜெயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. படங்கள் நன்றாக உள்ளன.

    செங்கண்மால் போற்றி.

    ஓம் சிவாயநமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ராமர் பாலம் அமைத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திருநாவுக்கரசர் பாடிய பாலும், அதன் விளக்கமும் படித்து தெரிந்து கொண்டேன் ஸ்ரீராமரின் பாதங்களை பக்தியுடன் பணிவாக வணங்கிக் கொள்கிறேன். .
    ஸ்ரீராம ஜெயம்.ஸ்ரீராம ஜெயம் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
    மகிழ்ச்சி..
    நன்றியம்மா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..