நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 28
வெள்ளிக்கிழமை
பங்குனி உத்திரம்
திருப்புகழ்
சுவாமிமலை
தனதன தனதன ... தனதான
தனதன தனதன ... தனதான
நிறைமதி முகமெனு ... மொளியாலே
நெறிவிழி கணையெனு ... நிகராலே
உறவுகொள் மடவர்க ... ளுறவாமோ
உனதிரு வடியினி ... யருள்வாயே..
மறைபயி லரிதிரு ... மருகோனே
மருவல ரசுரர்கள் ... குலகாலா
குறமகள் தனைமண ... மருள்வோனே
குருமலை மருவிய ... பெருமாளே..
அருணகிரிநாதர்
முழு நிலவு போன்ற முகத்தின்
பிரகாசத்தாலும்,
அம்புகளை ஒத்த விழிகளாலும்,
அன்பு கொள்கின்ற பெண்களின் உறவு
உறவு ஆகுமோ? (ஆகாது)
உன்னிரு திருவடிகளை இனியாகிலும்
தந்தருள்வாயாக.
வேதங்களில் சொல்லப்படுகின்ற
ஹரி பரந்தாமனின் மருமகனே,
பகைவர்களாகி நின்ற அசுரர்
குலத்தை அழித்த காலனே,
குற வள்ளியை மணம் செய்து கொண்டவனே,
குருமலையாகிய சுவாமி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே..
முருகா
முருகா
லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்..
ஓம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
பதிலளிநீக்குஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா
முருகா முருகா
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் பாடல்கள் அனைத்தும் இனிமை. அருமை. திருப்புகழ் பாடி, இன்றைய பங்குனி உத்திரத்திர நன்நாளில் முருகனை, ஐயப்பனை வணங்கி அனைவரும் நலம் பெற பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா