நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 28, 2017

அதோ அந்த ஆப்பிள் - 2

கலோரிகள் குறைவாக இருப்பது - ஆப்பிள் பழத்தில்!..

அதனால், கொழுப்பினைக் கரைப்பதற்கும் குறைப்பதற்கும் ஆப்பிள் உதவுகின்றது - என்கின்றார்கள்...

தொடர்ந்து ஆப்பிள் பழத்தினை உண்டால் -

நினைவாற்றல் அதிகரிக்கின்றது...
நரம்பு சம்பந்தமான பிணிகள் விலகுகின்றன..
ரத்த அழுத்தம் சீராக இருக்கின்றது..

ஆகவே,
இதய நோய்கள் அணுகுவதில்லை...
அத்துடன் - புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது..

என்றெல்லாம் ஆப்பிள் பழத்தின் நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன...

Apple Juice
இத்தகைய நலன்களையெல்லாம் எண்ணியவாறு
ஆப்பிள் பழத்தைக் கையில் எடுத்தால் -

அதன் வழவழப்பும் மினுமினுப்பும் திகைக்கச் செய்கின்றன...

பழத்தின் மீதான மெழுகுப் பூச்சு வெளிப்படையாகவே தெரிகின்றது...

இருபதாண்டுகளாக Catering நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றேன்.. இங்கே
நாளொன்றுக்கு சராசரியாக இரண்டாயிரம் பழங்கள் கையாளப்படுகின்றது..

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் -
நூறு பழங்களை உடைய பெட்டியைப் பிரித்தால்
குறைந்த பட்சமாக பத்துப் பழங்களாவது அழுகியிருக்கும்..

இப்போதெல்லாம் பழங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன..
ஒரு பழங்கூட சேதமாக இருப்பதில்லை..

எப்படி இவையெல்லாம் சேதம் ஏதும் இல்லாமல்
ஆயிரக்கணக்காக மைல் தொலைவினைக் கடந்து வருகின்றன!?..

இந்த இடத்தில் தான் நவீன விஞ்ஞானம்
ஆப்பிள் பழ உற்பத்தியாளர்களுக்குக் கை கொடுக்கின்றது...

இங்கே - வளைகுடா நடுகளைப் பொறுத்தவரை -
விற்பனைக்காக முன்னிறுத்தப்படும்
பச்சைக் காய் கனிகள் முதல் உலர் தானியங்கள் வரை
குளிர் சாதன வசதியுடைய அறையில் தான் வைக்கப்படவேண்டும்...

இவற்றுக்கே இப்படியென்றால் -
இறைச்சி முட்டை மீன் வகையறாக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்..

Cavendish Bananas

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வரக்கூடிய வாழைப்பழங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக கெட்டுப் போகாமல் சில்லென்ற சூழ்நிலையில்
எந்த ஒரு கேடும் இன்றி சர்வ சாதாரணமாகக் கிடக்கின்றன..

எந்த ஒரு கேடும் இன்றி சர்வ சாதாரணமாகக் கிடக்கும்
இந்த வாழைப் பழங்கள் மனிதனுக்குக் கேடு விளைவிக்கின்றன என்கின்றனர்..

ஏனெனில், இந்த வாழைப் பழங்கள் மரபணு மாற்றப்பட்ட
கேவண்டிஷ் (Cavendish) வகைகளாகும்...

மரபணு மாற்றப்பட்ட கேவண்டிஷ் வாழைப் பழங்களைப் பற்றி
தனியாக ஒரு பதிவு எழுதக் கூடிய அளவுக்கு விஷயங்கள்..

அதே சமயம் நம்முடைய நாட்டிலிருந்து வரக்கூடிய பாரம்பர்ய வாழைப் பழங்கள் சில்லென்ற சூழ்நிலையில் இருந்தாலும் ஒரு சில நாட்களில் கறுப்பாகி விடுகின்றன...

பூவன் பழம்

நேந்திரம் பழம்

பாரம்பர்ய வாழைப்பழங்கள், மரபணு மாற்றப் பெற்றவை -
இவையிரண்டில் - எதனை நல்லதாகக் கொள்வது?...

ஆப்பிள் பழங்கள் பல்வேறு வகையாக நம் முன் கொட்டிக் கிடக்கின்றன..

ஆப்பிள் பழங்களும் நலம் தரக்கூடியவை தான்...
ஆனால், இன்றைய கால சூழ்நிலையில்
அந்நியப் பொருட்களின் மீதான மோகம் தலைவிரித்தாடுகின்றது...

உண்மையிலேயே எது நல்லதென்று அறியாமல் தடுமாறுகின்றோம்..

அதனாலேயே,
ஆப்பிள் கலாசாரம் நம் மீது திணிக்கப்பட்டது.. அல்லது -
நாமே வலிந்து நம் முதுகில் ஏற்றிக் கொண்டோம்..

Apple Pie 
Apple Sauce

நம்மை விடவும் -
ஆப்பிளை பலவகையில் கொண்டாடுகின்றனர் - மேலை நாட்டினர்...

பலவகையான பக்குவங்களில் ஆப்பிள் அவர்களது உணவு மேஜையில்!...

முழுப்பழத்தை உண்பதோடு சாறெடுத்துக் குடிக்கின்றனர்... அத்துடன் -
அனலில் வேக வைத்தும் நீரில் குழைய வைத்தும் வெயிலில் உலர வைத்தும் உண்டு மகிழ்கின்றார்கள்...

Apple Tarte
என்றாலும், ஆப்பிள் பழங்களின் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகைப் பற்றி அறிந்து கொள்ள - இதோ தகவல்கள் - இணையத்திலிருந்து !..

It is a fact that apple fruits are coated with wax, but the wax that is generally used is edible one and is safe to consume. However, some unscrupulous producers can coat apples with petroleum-based waxes that are harmful for human health.
Apples have natural wax coating on their surface, you can observe this when you pluck an apple from a tree and rub it with your hands. The whitish kind of powder that sticks to your palms is the natural wax on the surface of apple fruit. Likewise, when you scratch an artificially waxed apple, you will see a thin layer peeling off.
Apples are coated with wax for several reasons, like preservation, reduce loss of water, increase visual freshness and of course, replace the natural wax, because cleaning and processing of apples results in the loss of natural wax coat. This practice is very common, especially in supermarkets. 

Thin layer of wax is coated on apples, either by dipping, brushing or spraying with edible waxes like Carnauba or Shellac that are completely safe to consume and are not harmful. This edible wax is not digested, but is passed out through the digestive system.
On the other hand, some unscrupulous producers use the harmful petroleum-based waxes for coating of apples. If an apple looks very glossy and shiny, it is to be suspected. To avoid harmful wax coat, it is advisable to buy apples from markets and places where apples are grown. The chances that the farmers have not waxed apples will be good here. It is also a better idea to buy the dull apples that are fresh, without any kind of artificial coating.
More importantly, it is always a good practice to clean apples with lukewarm water thoroughly before eating. Also, you may use a paper towel with some vinegar (acetic acid) to wipe the apple before washing. Another obvious way to avoid harmful wax of apple fruits is to remove the entire peel, but you might lose on certain vitamins and also the crispiness of the peel. 

Waxing Materials
The waxing materials used depend to some extent on regulations in the country of production and/or export; both natural waxes (sugar-cane, carnaubashellac,resinor) or petroleum-based waxes (usually proprietary formulae) are used. 

Wax may be applied in a volatile petroleum-based solvent but is now more commonly applied via a water-based emulsion. Blended paraffin waxes applied as an oil or paste are often used on vegetables.

Glazing Agent:
A glazing agent is a natural or synthetic substance that provides a waxy, homogeneous, coating to prevent water loss and provide other surface protection for the substance.



Apples are coated with wax for several reasons, like preservation, reduce loss of water, increase visual freshness and of course, replace the natural wax, because cleaning and processing of apples results in the loss of natural wax coat. This practice is very common, especially in supermarkets. Thin layer of wax is coated on apples, either by dipping, brushing or spraying with edible waxes like Carnauba or Shellac that are completely safe to consume and are not harmful. This edible wax is not digested, but is passed out through the digestive system.
On the other hand, some unscrupulous producers use the harmful petroleum-based waxes for coating of apples. If an apple looks very glossy and shiny, it is to be suspected. To avoid harmful wax coat, it is advisable to buy apples from markets and places where apples are grown. The chances that the farmers have not waxed apples will be good here. It is also a better idea to buy the dull apples that are fresh, without any kind of artificial coating.
More importantly, it is always a good practice to clean apples with lukewarm water thoroughly before eating. Also, you may use a paper towel with some vinegar (acetic acid) to wipe the apple before washing. Another obvious way to avoid harmful wax of apple fruits is to remove the entire peel, but you might lose on certain vitamins and also the crispiness of the peel.

In addition to fruit, some vegetables can usefully be waxed, such as cassava; vegetables commonly waxed include cucumbers, and green tomatoes. 

A distinction may be made between storage wax, pack-out wax (for immediate sale) and high-shine wax (for optimum attractiveness) 
இந்நிலையில் -
ஆப்பிள் பழத்தினால் நோயாளிகளின் எண்ணிக்கையும் 
மருத்துவ மனைகளின் எண்ணிக்கை குறைந்து போனதா?..
- என்பதை எல்லாம் சிந்திக்க நமக்கு உரிமை இருக்கின்றது...

இப்போதெல்லாம், தமிழ் வழி ஊடகங்கள் -
ஆப்ரிகாட் சாப்பிடுங்கள்.. அவகாடோ சாப்பிடுங்கள்!..
ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்கள்.. ப்ளூபெர்ரி சாப்பிடுங்கள்!..

- என்று ஆரம்பித்திருக்கின்றன..

இவையெல்லாம் - 
மக்களின் மன மயக்கம் ஒன்றினையே விரும்புபவை!..

ஆப்பிளும் மற்றவைகளும் தருகின்ற நலன்களை விடவும்
நன்மைகளைத் தருகின்ற பழங்கள் மிகுந்திருக்கின்றன நம் நாட்டில்..


எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது அங்காடிகளில் கிடைக்கும் பழங்களில் குறிப்பாக ஆப்பிள் திராட்சை போன்றவைகளை நன்றாக நீரில் கழுவி விட்டு உண்பதே சாலச் சிறந்தது...



இன்றளவும் - உடல் நலக்குறைவுற்றவர்களைக் காணச் செல்வது என்றால்
ஆப்பிள் பழங்களுடன் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்...

உண்ணும் பொருட்களின் மீது - கடுமையான தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளின் வரிசையில் நம் நாடு இல்லை!..

அப்படியே நடைமுறைப்படுத்தினாலும் அவற்றைத் தூக்கிப் போட்டுவிட்டு
தம்முடைய இயற்கைக் குணம் ஒன்றையே செயல்படுத்தும்
அரசு அலுவலர்களையும் வணிகர்களையும் நாம் கொண்டிருக்கின்றோம்..

இயற்கையைக் கொடுத்தவன் இறைவன்..
அதை அடுத்துக் கெடுத்தவன் மனிதன்!..

எனவே,
நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில்
நமக்குத் தான் மிகுந்த கவனம் வேண்டும்!..

ஆயிரம் தான் இருந்தாலும், நம்முடைய - 
மாங்கனி, நாவற்பழம், இலந்தைப்பழம், 
நெல்லிக்கனி, விளாம்பழம் இவற்றுக்கு 
ஈடாக வேறொன்றில்லை என்பதே எண்ணம்!..

பாரம்பர்யம் மிக்க நம் நாட்டின் கனிவகைகள்
நம்முடைய நலத்தைக் காக்கும் என்பதே திண்ணம்!..

நலம் நம் கையில்..
வாழ்க நலம்!.. 
*** 

9 கருத்துகள்:

  1. நம் நாட்டின் தரம் அப்படி... ம்... என்னத்த சொல்ல...!

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    உணவு கட்டுப்பாட்டில் நமது நாடு அடிமட்டத்தில்தான் இருக்கின்றது என்ன செய்வது ?
    பயனுள்ள பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. அருமையான விழிப்புணர்வு பதிவு.
    நம் நாட்டில் ஒவ்வொரு சீஸனில் கிடைக்கும் பழங்களை உண்டாலே போதும்.
    கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயற்கை நமக்கு கொடுத்து இருக்கும் கொடையை அனுபவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. சில வாழைப்பழங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் கல் மாதிரி ஆகிறதே

    பதிலளிநீக்கு
  5. மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு அளிக்கும் பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    மாதுளம்பழம், சாத்துக்குடி மற்றும் கமலாரஞ்சு எனச் சொல்லப்படும் நாட்டுக் கொடாரஞ்சுகள்கூட வாய்க்கு ருசியாகவும் உடம்புக்குக் கெடுதல் இல்லாமலும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பயனுள்ள விழிப்புணர்வு பதிவு ஐயா ..பல பழங்களில் உள்ள பூச்சி மருந்து trace அலர்ஜியை உண்டுபண்ணும் ..
    முந்தி நம் நாட்டில் பழங்கள் இப்படி பூச்சி மருந்தில் முங்கியவையெல்லாம் நாம் பார்த்தே அறிந்தோ இருக்க மாட்டோம் ..இப்போதான் பேரா சையினால் என்னென்ன சேர்க்கிறாங்கன்னே தெரியலியே எல்லாம் உடலுக்கு கேடு :( இங்கிலாந்தில் கூட நானா உண்பது ஆர்கானிக் வகை உணவுகளை ...கொஞ்சம் மாற்றினாலும் உடனே ஒவ்வாமை வரும் எனக்கு

    பதிலளிநீக்கு
  7. சுவையான, மற்றும் உபயோகமான தகவல்கள். ஆனால் இயற்கையாகவே நான் ஆப்பிள் அதிகம் சாப்பிடுவதில்லை. பிடிப்பதில்லை!

    பதிலளிநீக்கு
  8. நம் நாட்டில் தரக்கட்டுப்பாடு என்பதே இல்லை என்றால் அது மிகையல்ல. நேந்திரம் பழத்தில் கூட நாடன் பழம் நல்லது. அதிலும் கூட குண்டாக நீளமாக பெரிதாகக் கிடைக்கும் பழங்கள் அவ்வளவு நல்லதல்ல என்றுதான் சொல்லப்படுகிறது.

    நல்ல தகவல்கள்! விழிப்புணர்வுப்பதிவு...

    --துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  9. இயற்கையைக் கொடுத்தவன் இறைவன்.... அதைக் கெடுத்தவன் மனிதன்! சரியாகச் சொன்னீர்கள்! எல்லாவற்றிலும் கேடுகளை விளைவிக்க மூளையைப் பயன்படுத்துகிறது மனித மனம்... என்ன சொல்வது!

    எல்லா பழங்களும் செயற்கையான முறையில் கார்பைடு கற்கள் கொண்டு பழுக்க வைத்து சந்தையில் வருகிறது. அதன் நச்சுத் தன்மை பழங்களிலும்! சாப்பிடும் அனைத்திலும் கலப்படம் எனும்போது எதைச் சாப்பிடுவது என்ற குழப்பம் தான் மிச்சம்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..