நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 21, 2017

வெற்றி வீரன்

பரந்தாமன்
பார்த்தனுக்கு அளித்த அருளுரை!..
-: Fb ல் வந்த செய்தி :-
***


மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், 
நிலை குலைந்து போகச் செய்யும் சூழ்நிலைகள்,
நயவஞ்சகங்கள், நம்பிக்கைத் துரோகங்கள்,
செய்யும் காரியத்தில் லாபங்கள்,
அதைப் போல நஷ்டங்கள்,
மாயப் புன்னகை வலை விரிப்புகள், எதிர்ப்புகள்,
உறவினர் மற்றும் நண்பர்களின் சூழ்ச்சிகள்,
அன்பின் வரவுகள், இழப்புகள்,
சுகங்கள், துக்கங்கள்..

- இவையெல்லாம் 
மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்..


இவற்றையெல்லாம் -
மன உறுதியுடனும் துணிச்சலுடனும்
பொறுமையுடனும் நிதானத்துடனும்
எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ
அவனே - வீரன்!..

மிகச் சிறந்த வெற்றி வீரன்!..
***

பரந்தாமனின் அருளுரை 
இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றது..


வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சானூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்..

ஓம் ஹரி ஓம்..
*** 

17 கருத்துகள்:

  1. ஆம்! என்ன அற்புதமான அருளுரை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நிதர்சனமான உண்மை.. நாம் தான் உணராமல் தேடியலைந்து கொண்டிருக்கின்றோம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான நன்னுரைகள் சிந்திக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வஸுதேவ சுதம் தேவம்
    கம்ச சானூர மர்த்தனம்
    தேவகி பரமாநந்தம்
    கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகை தந்து மங்கலகரமாகப் பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. காலையில் எழுந்ததும் உங்கள் பக்திமயமான கருத்துரையைப் படிக்கிறேன். நன்றி. ('ராமம் வந்தே ஜகத்குரும்' என்ற தலைப்பில் யாராவது ஆராயலாமே!)

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (மே 25 முதல் சென்னை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தேவம் விட்டுப் போச்சே என்று பார்த்தேன். ஜி எம் பி ஸார் சொல்லி விட்டார். அது என் காதில் எஸ் பி பி குரலில் ஒலிக்கிறது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தேவம் நம்முடனேயே இருக்கின்றது...
      கருத்தினுள்ளே பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றது..

      ஆயினும், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. இன்று ஏகாதசியில் கண்ணனின் அருளுரை படித்தேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  8. அன்புடையீர்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான பகிர்வு. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா17 டிசம்பர், 2022 12:46

    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..