நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 13, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
வெள்ளிக்கிழமை

கந்த சஷ்டி நான்காம் நாள்

இன்று 
சுந்தரர் அருளிச் செய்த தேவாரம்...


நாயேன்பல நாளும்நினைப் 
  பின்றிமனத் துன்னைப்    
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற    
  லாகா அருள் பெற்றேன்    
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்துறையுள்    
ஆயாஉனக் காளாய் இனி     
  அல்லேன் எனலாமே..7/1/2


மூங்கில் வனங்கள் நிறைந்த  பெண்ணையாற்றின் தென்
கரையில் -  திருவெண்ணெய் நல்லூரின்  அருட்துறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, 

நாயைப் போல கீழ்மை உடையனாகிய நான் உன்னை எனது  நாள்கள் பலவற்றினும் மனத்தால் கூட நினைக்காமல்  பேயாய் அலைந்து திரிந்து  இளைத்தேன்; ஆயினும், இப்போது, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்று விட்டேன்..

இப்பேற்றை எனக்கு அளித்த உனக்கு, முற்காலத்தில்  அடியவனாக இருந்தவன் நான்..

இந்நிலையில்
'நான் உனது அடியவன் அல்லேன் ' என, இப்பொழுது உன்னுடன்
 எதிர்வழக்குப் பேசியது பொருத்தம் உடையதாகுமோ!..

நன்றி 
பன்னிரு திருமுறை
***

சஷ்டி கவசத்திலிருந்து சில வரிகள்


உன்னைத் துதிக்க உன்திருநாமம்
சரவணபவனே சைலொளிபவனே
திரிபுரபவனே திகழொளிபவனே
பரிபுரபவனே பவமொழிபவனே
அரிதிருமருகா அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப்பதி வாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத்தரசே...

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
***

10 கருத்துகள்:

  1. நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில்
    நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணி
    தன் தாள் வாழ்க!
    ஆகமம் ஆகிநின்று
    அண்ணிப்பான் தாள் வாழ்க!
    ஏகன் அநேகன்
    இறைவன் அடி வாழ்க!

    பதிலளிநீக்கு
  2. தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
    ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
    சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
    அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
    திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே

    ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
    அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
    அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
    வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
    வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமச்சிவாய. ஓம் முருகா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. சுந்தரர் பாடிய தேவாரத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    சஷ்டி கவசம் பாடி முருகனை வேண்டி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. திருவெண்ணை நல்லூர் இறைவன் பாடல் பாடி வணங்கினோம்.

    சஷ்டி நான்காம் நாளில் முருகன் பாதம் பணிகின்றோம்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..