நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 18, 2025

கொழுப்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 4
செவ்வாய்க்கிழமை


நல்ல கொழுப்பு
High Density Lipoprotein
HDL 

கெட்ட கொழுப்பு
Low Density Lipoprotein
LDL

உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம் (HDL High Density Lipoprotein) நல்ல கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. 

இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..

நல்ல கொழுப்பு
நிறைந்த உணவுகளாக - ஆடு, மாடு, பன்றி - முதலானவற்றின் இறைச்சி நீங்கலான காய்கறி உணவுகள்,  மீன்கள், முழு தானிய உணவுகள் இவற்றுடன்



பழங்கள், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை அறியப்பட்டுள்ளன..

 உருளைக் கிழங்கு, கத்திரி, சோயா பீன்ஸ், சோளம் மற்றும் வெண்டை முதலானவை கொழுப்பு 
நிறைந்த காய்கள்.

கொழுப்பு சத்து நிறைந்துள்ள பாரம்பரிய கனி தேங்காய்.. மேலைத் தேச கனிகளில் அவகேடோ..

குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம்
(LDL Low Density Lipoprotein)  எனப்படுகிறது..  இது கெட்ட கொழுப்பு..

இரத்தத்தில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) இருந்தால், தமனிகளில் கொழுப்புப் படிவுகள் உருவாகின்றன.. ரத்த நாளங்கள் குறுகுவதற்கு இவையே காரணம்.

இதய நோய் மற்றும் பக்க வாதத்திற்கு கெட்ட கொலஸ்ட்ரால் (LDL)
 வழி வகுக்கிறது..

கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளாக - 
இறைச்சி வகைகள், முழு கொழுப்புள்ள பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் (Palm Oil) பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், 

வெப்ப மண்டல எண்ணெய்கள் வகைகளில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம். இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன

நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால், உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். அதிக எல்டிஎல் கொழுப்பு அளவுகள் உடலை தீவிரமாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கலாம்..

கண்ணில் கண்ட கடைகளில் எல்லாம் ஏதாவது பட்சணங்களை வாங்கித் தின்பது கெட்ட கொலஸ்ட்ராலுக்கு வழி வகுக்கும்..

காரணம் - தரமற்ற எண்ணெய்..

கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் வழிகள்:-

ஒருமுறை புகை எழும் அளவுக்குப் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மறுமுறை உபயோகிக்காமல் இருக்கவும்..

காய்கள், பழங்கள் மற்றும் பட்டை தீட்டப்படாத முழு தானிய உணவு 
வகைகளுக்கு மாறவும்..

கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்..

கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளவும்...

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும்
வெண்ணெய், நெய், கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காயெண்ணெய் கடுகு எண்ணெய்
சோயா எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய்  - இவை அளவாகப் பயன்படுத்தப்படுகின்ற போது - அனைத்தும் நல்லவையே..

மீள் சுழற்சி, மீள் சுத்திகரிப்பு நுண் சத்துகள் ஏற்றப்பட்ட எண்ணெய்கள் தவிர்க்கப்பட வேண்டியவை..


இன்றைய பால் பொருட்கள் பற்றி ஐயங்கள் பற்பல.. எனினும் நாட்டுப்பசுவின் பால் கிடைத்தற்கு அரிதாக இருக்கின்றது.. தயிரை நாமே வீட்டில் தயாரித்துக் கொள்வது நல்லது..

கெட்ட கொழுப்பு வகையில்
தேங்காய் எண்ணெய் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.. தேங்காய் எண்ணெயில் பலகாரங்கள் செய்வது இல்லை எனில், அதைப் பற்றிய கவலை வேண்டாம்.. 


இன்றைய நவீன மருத்துவம் தேங்காயைக் கெட்ட கொழுப்பு என்றாலும் - 
தேங்காய் நல்லது என்று சொல்லிச் சென்ற நமது முன்னோர்கள் அறிவாளிகள்!...

இன்றைய  கோழிகளும் முட்டைகளும் நல்லவையா கெட்டவையா?..

(வாழ்நாள் குறுகிய) செயற்கைக் கோழிகளும் நவீன முட்டைகளும் பற்றி  சொல்வதற்கு இல்லை.. 

வருடம் முழுக்க பட்டி மன்றம் நடத்தலாம்..

செயற்கைக் கோழியே சரியல்ல என்று சொல்லப்படும் போது - 
மேற்கொண்டு அதனை உண்பவர்  விருப்பம்...

நமது கையில்
நமது ஆரோக்கியம்
🍉🍐🥥🍆🥦

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

3 கருத்துகள்:

  1. நல்ல தகவல்கள்.  HDL, LDL வித்தியாசங்களை - எது நல்லது எது கெட்டது என்று நினைவில் வைத்துக் கொள்ள படிக்கின்ற காலத்தில் நான் வைத்திருந்த உபாயம், ஹை...  நல்ல கொழுப்பு...   சந்தோஷ வெளிப்பாடு!

    பதிலளிநீக்கு
  2. கோழிகளைக் கூட சீனர்கள் போல செயற்கை கோழிகளாக தயாரிக்கிறார்கள்.  கோழிக்கு வந்த சோதனை! 

    சீனர்கள் முட்டைகோஸை செயற்கையாக தொழிற்சாலையில் உருவாக்கியதாக ஒரு செய்தி முன்னர் படித்தது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  3. கொழுப்பு நல்ல கொழுப்பு,கெட்ட கொழுப்பு பற்றிய நல்ல தகவல்கள் நிறைவான பகிர்வாக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..