நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 21
புதன்கிழமை
பச்சைப் பயறு
பாசிப்பயறு - சிறு பயறு என்றும்
அழைக்கப்படுகிறது...
நமது பாரத தேசத்தைத் தாயகமாகக் கொண்டது.
இக்கு (கரும்பு) அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் - என்று திருப்புகழில்
விநாயகப் பெருமானின் திரு முன்னர் பச்சைப் பயறையும் அருணகிரிநாதர் சமர்ப்பிக்கின்றார்..
பயற்றூர் என திருத்தலம் ஒன்று ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே
தமிழகத்தில் இருந்துள்ளது.. அவ்வூரின் ஈசனை அப்பர் ஸ்வாமிகள் தரிசித்துப் பதிகம் பாடியிருக்கின்றார்.. இன்றைக்கு அவ்வூர் பயத்தங்குடி என்று வழங்கப்படுகின்றது..
தஞ்சை மாவட்டத்தின் சிறப்புகளில் பச்சைப் பயறும் ஒன்று..
நன்செய் மானாவாரி நிலப்பரப்பில் தழைத்து வளரக் கூடியது..
பெரும்பாலும் இன்றைய
பயறு வகைகள் - உறுதியற்ற வளர்ச்சிப் பண்புகளுடன் எளிதில் நோய் வாய்ப்பட்டு விடுகின்றன..
எனவே இவற்றுக்கு ரசாயன வைத்தியம் சற்று கூடுதல்..
விதைத்த 45 நாட்களில் மேல் உரம் இடப் படுகின்றது..
பயிர் வளர்ந்து 60 - 65 நாட்களில் பூத்து காய் பிடித்து முதிர்ந்து காணப்படும்.
முதல் அறுவடைக்குப் பின்
அடுத்த 20 - 25 நாட்களில் இரண்டாம் முறை முதிர்ந்த காய்கள் காணப்படும்.
எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை செய்ய முடியும்.
வேளாண் செய்திகள் மற்றும் படங்கள் நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக இணையம்
பச்சைப் பயறு கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்கின்றது, நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றது, உடலில் கொழுப்பு எடையைக் குறைக்க உதவுகின்றது.
இதய நோய் அபாயத்தைத் தடுக்கின்றது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.. உடலுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது..
இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இது உடலுக்கு மிகுந்த வலுவை சேர்க்கிறது..
பச்சைப் பயறில் புரதச் சத்து, நார்ச் சத்து , ஆகியனவும் வைட்டமின் A , வைட்டமின் C ஆகியவையும் பொதிந்துள்ளன... பொட்டசியம், கால்சியம், மாங்கனீஸ் போன்ற கனிம சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.
நுண்ணூட்டச் சத்து விவரங்கள் : நன்றி விக்கி..
நவக்ரகங்களில் புதனுக்கு உரியது பச்சைப் பயறு.. புதன் கிழமைகளில்
பச்சைப் பயறைத் தானமளித்தல் நல்லது.. பல நன்மைகள் நம்மைத் தேடி வரும்..
முழு பச்சைப் பயறு மற்றும் உடைத்த பருப்பு கொண்டு
சத்து மாவு, தோசை, குழம்பு, கடையல்,
பாயசம், இனிப்பு சுண்டல், கார சுண்டல், இனிப்பு உருண்டை, - என, அனைவரும் கை வரிசையைக் காட்டலாம்..
எனவே இதன் (பச்சைப் பயிறு) சாகுபடியில் ரசாயனங்கள் சற்று கூடுதல்..
இப்படியிருக்க இதற்கு ஏன் இத்தனை கட்டுமானம்?..
அடுத்த பதிவில் சொல்கின்றேன்!....
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
பாசிபபருப்பு, பயத்தம்பருப்பு என அறியப்படும் இது எடுத்துக் கொண்டால் உடனே என் பாஸுக்கு வாய்வுத் தொந்தரவு வந்து விடுவதாக சொல்வார்!
பதிலளிநீக்குஎன் அம்மா சாம்பாருக்கு பருப்பு வைக்கும்போது துவரம்பருப்பு பெருமளவு எடுத்துக் கொண்டு பாசிப்பருப்பையும் ஒரு கைப்பிடி சேர்ப்பார்.
நானும் சேர்ப்பதுண்டு ஸ்ரீராம். அது தனியான சுவையும், ஒரு கன்சிஸ்டென்சியும் கொடுக்கும். ஹோட்டல்ல கூட அப்படிச் செய்வாங்கன்னு கேட்டிருக்கிறேன்
நீக்குகீதா
தங்கள்
நீக்குவருகையும் கருத்தும்
நன்றி ஸ்ரீராம்
சாம்பாருக்கு பருப்பு வைக்கும்போது துவரம் பருப்பு பெருமளவு எடுத்துக் கொண்டு பாசிப் பருப்பையும் ஒரு கைப்பிடி சேர்ப்பது நல்ல தீர்வு
நீக்குமகிழ்ச்சி..
நன்றி சகோ
பயறு நல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குநாங்கள் சிறுவர்களாக இருந்தகாலத்தில் பாசிப் பருப்பு, துவரம்பருப்பு தவிர்த்து வேறு பருப்புக்கள் எங்கள் அம்மா சமைப்பதில்லை.
உழுந்து,பயறு,எள்ளு, வீட்டு நிலத்தில் விதைத்தும் இருக்கிறார்கள்.
இப்பொழுது மைசூர், மஞ்சள் பருப்புக்கள் சமைக்க இலகு என்று , இங்கு பெரும்பாலும் சமைக்கிறார்கள்.
நானும் இப்படி சமைத்திருக்கின்றேன்..
நீக்குதங்கள்
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
சிறப்பான தகவல்கள். இங்கே பச்சைப்பயறு பயன்பாடு அதிகம் உண்டு.
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி வெங்கட்
இங்கு பச்சைப்பயறு முளைகட்ட வைத்துக் காய்கள் சேர்த்து எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவதுண்டு.
பதிலளிநீக்குபுட்டுக்குக் கூட்டும் செய்வதுண்டு. பெரும்பாலும் முளை கட்ட வைத்து...
நல்ல தகவல்கள்
கீதா
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
பச்சைப்பயிறு விவரங்கள் அருமை.
பதிலளிநீக்குபச்சைப்பயறு சுண்டலும் , பால் கஞ்சியும் அடிக்கடி செய்வது உண்டு காலை உணவாய்.
ராமநவமிக்கு பச்சைப்பயிறு முளை கட்ட வைத்து அதில் எலுமிச்சை பிழிந்து மாங்காய் போட்டு பச்சை மிளகாய் தாளித்து கொட்டி பிரசாதம்.
பாசிப்பருப்பை ஊற வைத்து மாங்காய், இஞ்சி, வெள்ளிரிக்காய் போட்டு பச்சைமிளகாய் தாளித்து போட்டு பிரசாதம் செய்வோம்.
பச்சை பயிரில் பேசரட் செய்யலாம்.
தங்களன்பின்
நீக்குவருகையும்
மேல் விவரக் கருத்தும்
நன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பச்சைப் பயிறின் சிறப்பை விவரித்த விதங்களை படித்து தெரிந்து கொண்டேன் ஆனால், இதிலும் ரசாயனம் கலந்திருப்பது வருத்தந்தான். பயிறும் எப்போதாவது பயன்படுத்தும் போது, கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால், வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்றவைகள் வருகிறது. ஆனால் பயிறு நல்ல சத்துள்ள ஆகாரந்தான்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
நன்றியம்மா