நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 27
செவ்வாய்க்கிழமை
உடலில் நோயினை எதிர்க்கின்ற அமைப்பானது நமது உடலை பல்வேறு பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கின்றது.. இதனால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது..
நோய்க் கிருமிகளுக்கு எதிரான உணவுகள் உடலுக்கு கிடைக்காவிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வது அவசியமாகின்றது...
நோய்க்கிருமி ஒன்று உடலுக்குள் நுழையும் போது, நமது நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு, எதிர்வினைகளை வெளியிட்டு நோய்க் கிருமிகளைத் தாக்குகிறது. இந்த ஆன்டிபாடிகள் நோய்க் கிருமிகளை அழிக்கின்றன...
நோய் எதிர்ப்பு சக்தி குறித்து இணையத்தில் தேடிய போது கிடைத்தவற்றில் இருந்து சுருக்கமான தகவல்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்ற உணவுகள் -
நன்றி : விக்கி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற உணவுகளின் மூலக்கூறுகள் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
மஞ்சள் :
பாரம்பரிய மஞ்சள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.. தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கின்றது.. இதிலுள்ள குர்குமின் நோய் எதிர்ப்பில் முன் நிற்கின்றது..
பழங்கள் :
வைட்டமின் C நோய் எதிர்ப்பில் முக்கிய பங்காற்றுவதுடன்
- இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றது, இது தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியம்.. பெரும்பாலான சிட்ரஸ் பழங்களில் புளிப்புச் சுவையே
நிறைந்துள்ளது..,
நெல்லிக்காய், அரிநெல்லி,
எலுமிச்சை, நாரத்தை, ஆரஞ்சு முக்கியமானவை.. சளி மற்றும் இருமலுக்கு எதிரான சக்தியைத் தூண்டுகின்றன..
சீதாப்பழம் செவ்வாழை மற்றும் பப்பாளிப் பழங்களும் உகந்தவை..
ப்ரோக்கோலி :
காலிஃப்ளவரைப் போன்றது.. பச்சை நிறமுடையது..
இதிலும் வைட்டமின் C அதிகம் உள்ளது..
தயிர் :
வைட்டமின் D மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ள தயிர் சிறப்பானது.. செரிமான மண்டலத்தைக் காப்பதுடன்..
உடலில் இயற்கையான பாதுகாப்பினை அதிகரிக்கின்றது..
இஞ்சி :
ஜலதோஷம் மற்றும் இருமலால் அவதிப்படுகின்றவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதம்.. தொண்டைப் புண் தொற்றுகளை அழிக்கின்றது.. கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றது..
பூண்டு :
உணவுக்கு தனித்துவமான சுவையைச் சேர்ப்பது பூண்டு.. இதிலிருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்காக பண்டைய நாட்களில் இருந்தே சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது..
பசலைக் கீரை :
பசலைக் கீரை
மற்றொரு அற்புதமாகும்.. இதில் பல அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.. வைட்டமின் A வைட்டமின் C வைட்டமின் E, பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன.. கண் மற்றும் தோல் ஆரோக்கியத்தைக் காக்கின்றது..
இந்தக் கீரை நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த உணவாகும்..
சூரியகாந்தி விதைகள் :
பல ஊட்டச் சத்துக்களை கொண்ட சிறந்த ஒன்றாகும்..
சூரியகாந்தி விதைகளில்
வைட்டமின் B6, வைட்டமின் E, பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் செலினியம் ஆகியன நிறைந்துள்ளன..
இதனால், சூரியகாந்தி விதைகள் நோய்களைத் தடுப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் சிறப்பிடம் பெறுகின்றன..
ஆரோக்கிய வாழ்வு
அவரவர் விருப்பம்..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
சிறப்பான தகவல்கள். சூரியகாந்தி விதைகள், சீத்தாப்பழம் தவிர மற்றவை நானும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பதிவில், நல்ல தகவல்களை அறிந்து கொண்டேன்.மஞ்சள் ஒரு கிருமி நாசினி. மஞ்சளில் இப்போது கலப்படமென அனைவரும் தினசரி பூசிக் குளிப்பதில்லை. ஆனால், அப்போது அதை தினசரி பூசி குளிக்காவிடில் அமங்கலமென நினைத்தார்கள். தவிரவும் இந்த மாதிரி பச்சை மஞ்சள் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் கிடைக்கிறது. , அதையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், மனித சோம்பேறிதனம் அதை மறுக்கிறது.
உடல் நலத்திற்கு தோதான பல ஊட்டசக்தி மிகுந்த காய், பழம் ஆகியவற்றை பற்றித் தெரிந்து கொண்டேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல தகவல்கள். நாம் செய்துகொண்டிருப்பது சரியா என நம்மையே கேட்டுக்கொள்ளும்படி அமைந்த பதிவு
பதிலளிநீக்குமஞ்சள் மகத்துவம்,
பதிலளிநீக்குபழங்கள்,சூரியகாந்தி விதையின் நன்மைகள்,இஞ்சி, பூண்டு புரக்கோலி, தயிர் என அனைத்தின் நன்மைகளும் கண்டோம்.