நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 08, 2024

தீந்தமிழில்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
எட்டாம் நாள்
திங்கட்கிழமை


தம்பியொடுங் கான் போந்து
சேர் அரணும் போர் முடியத் 
தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத 
செவி என்ன செவியே..
( திருச்சிலம்பு )

முத்து என்று முருகப்பெருமான் எடுத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் -

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ... என ஓதும்.. 

- என்று, தொடங்கிய முதற் பாடலிலேயே -

பத்துத் தலை தத்தக் கணை தொடு - என்றும்,

பத்தர்க்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல் - என்றும், 

ஸ்ரீ ஹரி பரந்தாமனின் பேரருள் திறத்தைப் பெருமையுடன் பாடி,

அப்பேர்ப்பட்ட திருமாலின் மருகனே என்று முருகப்பெருமானைக் குறித்து இறும்பூது எய்துகின்றார்..

இப்படி ஸ்ரீ ராமாயண சம்பவங்களைச் சொல்லி முருகப் பெருமானைத் துதிக்கின்ற  திருப்புகழ் பாடல்கள் நூற்றுக்கும் மேற்பட்டு இருக்கின்றன என்கின்றனர் ஆன்றோர்கள்..

இது குறித்த பழைய நூல் ஒன்றும் முன்பு என்னிடம் இருந்தது..

இன்று அப்படியான திருப்புகழ் சிலவற்றை கௌமாரத்தின் துணை கொண்டு நமது தளத்தில் குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

குறிப்பிலுள்ள - திருப்புகழின் எண்ணைச் சொடுக்கினால் முழுப் பாடலையும்  காணலாம்..

இதற்கு மேல் இவர்களை விட்டு வைக்கக் கூடாது. முடித்து விடுவோம்.. ஜாம்பவானாக நான்முகன் 
உருத்திரரில் சிறந்தவர் அனுமன் சூரியனின் அம்சமாக சுக்ரீவன், இந்திரனின் அம்சமாக வாலி அக்னியே நீலன்..
 
- என்றெல்லாம் வைகுந்தத்தில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தை திருப்பரங்குன்ற திருப்புகழில் ( 009 ) விவரிக்கின்றார்..

அதன்படி,
மேலை வானொருரைத் தசரற்கொரு பாலனாகி 
உதித்தொர் முனிக்கொரு வேள்விக் காவல் நடத்தி 
- என்றும்

ஞால மாதொடு புக்க வனத்தினில் வாழும் வாலி படக் கணை தொட்டவ நாடி ராவணனைச் செகுவித்தவன் மருகோனே..

- என்றும்
திருச்செங்கோடு திருப்புகழில் ( 597
குறிக்கின்றார்..

அகலிகை சாபவிமோசனத்தை -

கல்லிலே பொற்றாள் படவே அது நல்ல ரூபத்தே வர கானிடை கெளவை தீரப் போகுமி ராகவன்  மருகோனே..

- என்று 
தில்லை திருப்புகழில் ( 483 ) பாடுகின்றார்..

மிதிலையில் ஜனகரின் சபையில் சிவதனுசு ‘மொளுக்’ கென முறிபட்ட -

செய்தியை
திருவிடைக்கழி திருப்புகழ் பாடுகின்றது ( 799 )..

மகுடம் ஏற்கும் முன் வனம் சென்ற செய்தி -
ஜானகி தனங்கலந்த பின் ஊரில் மகுடங் கடந்தொரு தாயர் வசனஞ் சிறந்தவன் மருகோனே..

- என்று ஸ்ரீபுருஷ மங்கை  தலத்தின் 
திருப்புகழில் ( 968 ) வெளிப்படுகின்றது..

மூக்கறை மட்டை  மகாபல காரணி 
சூர்ப்பநகை படுமூளி உதாசனி 
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி  
- என்று 
திருத்தணிகை திருப்புகழில்  ( 272 )
சூர்ப்பனகை அடையாளம் காட்டப்படுகின்றாள்..

கர தூஷ்ணர் அழிவுக்குப் பின் மாயமான் அடிபட்டு வீழ 
வஞ்சக இராவணன் சீதா தேவியைக் கடத்துகின்றான்..

கமலாலய சீதையை மோட்டன் வளைத்தொரு தேர் மிசையே கொடு முகிலே போய்..

- இதுவும்
திருத்தணிகை திருப்புகழில்  ( 272 ) சொல்லப்படுகின்றது.. 

சீதையைத் தேடிக் கொண்டு
நாலா திசைகளிலும் வானரப்படை செல்கின்றது.. 

தென் திசையில் அநுமன் அன்னையைக் கண்டு கணையாழி அளித்த செய்தி -

அடிக்குத் திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும்
மலைக்கப் புறமேவி மாதுறு வனமே சென்று
அருட்பொற்றிரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்துக் கதிர்காமம் மேவிய பெருமாளே..

- என்று
கதிர்காம திருப்புகழில் (638) பேசப்படுகின்றது..

வாலியின் உரத்தில் சரம் தொடுத்து தாரையை மீண்டும் சுக்ரீவனுக்கே அளித்த ஸ்ரீ ராமனின் கையால்
ஜானகியின் கற்பு எனும் அக்னியில் 
- தனது குலத்தவர் அனைவரும் மாள வேண்டும் என்பதற்காகவே அசோக வனத்தில் சிறை வைத்தான் இராவணன்...

அப்படியானவனைத் தனது சரங்களால் துளைத்தெடுத்த ராகவனின் மருகனே.. - என்பது அருணகிரிநாதரின் திரு வாக்கு..

கடிது  உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகளூர் போய்க்
களமு றானை தேர் நு றுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் தத்தன் மருகோனே..

சானகி கற்பு தனைச் சுட - தன் அசோக வனத்தில் சிறைப்
படுத்திய தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள
சாலை மரித்த புறத்து ஒளித்து அடல் வாலி உரத்திற் சரத்தை விட்டொரு தாரை தனைச் சுக்ரிவர்க்கு அளித்தவன் மருகோனே.. 

இப்படிக் குறிப்பது திரு அருணை
திருப்புகழ் ( 437 )..



இராவணன் துளைக்கப்பட்டதை - பல திருப்பாடல்கள் காட்டினாலும் இது கழுகுமலைத் திருப்புகழ் ( 633 )..

தலை முடி பத்துத் தெறித்து ராவணன் உடல் தொளைப் பட்டுத் துடிக்கவே ஒரு தனுவை வளைத்துத் தொடுத்த வாளியன் மருகோனே..


 
திருப்புகழ் 














 


இணையத்தில்


 

இணையத்தில்


வீரவேல் போற்றி
வெற்றிவேல் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..