நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 15, 2024

அன்னாபிஷேகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 29
 வெள்ளிக்கிழமை


சிவாலயங்களில்
அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமியில் தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்திலும் கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலிலும் நடைபெறுகின்ற அன்னாபிஷேகங்களை சிறப்பாகச் சொல்வர்..

அன்னாபிஷேக நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகிக்கப்படுகின்ற ஒவ்வொரு பருக்கையும்  சிவலிங்கம் ஆகின்றது.. 

இந்த வேளையில் சிவ தரிசனம் செய்வதால் எணணற்கரியதான கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்ணியம்  என்பது நமது நம்பிக்கை..


லிங்கத் திருமேனியாகத் திகழ்கின்ற பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், காய் கனிகளால் அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீப ஆராதனைக்குப் பின் அந்த அன்னம்  பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றது..

லிங்கத் திருமேனியில் சாற்றப்பட்ட அன்னத்தில் ஒரு பகுதி நீர்நிலைகளில் வாழ்கின்ற ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

சந்திரன் தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு கதிர்களையும் பூமியில் பொழிகின்ற நாள் ஐப்பசி பௌர்ணமி .. 
இது இன்றைய விஞ்ஞானம்  கூறுகின்ற தகவல்.. 

இந்த ஒளிக் கதிர்களை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே நமது முன்னோர்கள் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகத்தை வகுத்தனர் என்பதாகக் கொள்ளலாம்...

வீட்டிற்கு அருகிலுள்ள
சிவாலயத்தில்
அன்னாபிஷேகத்திற்கென இயன்ற வரை பச்சரிசியும் காய்கனிகளும் வழங்குதல் சிறப்பு..


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணைஅஞ்செழுத்துமே. 3/22/6
-: திருஞானசம்பந்தர் :-

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-

எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை
  தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
  காவிரி யதன் வாய்க்கரை
நல்லவர் தொழுதேத்துஞ் சீர்க்கறை
  யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும்
  சொல்லும் நா நம சிவாயவே.  7/48/4 
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. அன்னாபிஷேகப் படங்கள் சிறப்பு. தும்மல் இருமல்... பதிகம் மிக அருமை. தாயை விட உற்ற துனை நமசிவாய என்று சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      தங்களது
      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஐப்பசி மாதத்திய அன்னாபிஷேகத்தின் பலன்களை பற்றிய விபரங்களை அறிந்து கொண்டேன். படங்களின் வாயிலாக இறைவனை தரிசித்துக் கொண்டேன்.

    நால்வரில் மூவர் பாடிய பாடல்களை பாடி பரவசமானேன். எங்கும் சிவமயம். எதிலும் சிவமயம் என்றிருந்தால், சிவரூபத்துடன் ஒன்றி கலந்து விடலாம்.
    ஓம் நமசிவாய..
    ஓம் நமசிவாய..
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின் வருகையும்
      விரிவான கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி..

      நீக்கு
  3. எல்லா விளக்கும் விளக்கல்ல என்பது போல இங்கு நமச்சிவாயமே நல்விளக்கு.  போற்றுவோம், பணிவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேக சிறப்புகள் அறிந்தோம்.

    படங்கள் அலங்காரங்கள் அருமை.

    பாடல் பாடி வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..