நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 23, 2024

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 8
முதல் சனிக்கிழமை 

ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்னம்


லோக வீரம் மஹாபூஜ்யம் 
ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயா நந்தம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் .1

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் 
விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 2

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

மத்த மாதங்க கமநம் 
காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 3

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

அஸ்மத் குலேஸ்வரம் தேவம் 
அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 4

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ 
நித்யம் சுத்த படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் 
சாஸ்தா வஸதி மாநஸே..  5

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா


ஸ்ரீ சாஸ்தா தியான ஸ்லோகம்

பூதநாத சதானந்த
சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ  நம:
              
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..


ஏற்றிடும் விளக்கு திருவிளக்காக 
ஏற்றம் அளித்திடும் ஐயப்பா..

சாற்றிய மாலை சந்தனம் குங்குமம் 
சங்கர மைந்தன் திருவடிக்கே..

போற்றிய சரணம் பொன்மலர் என்றே 
பொற்றிரு வடியில் சாராதோ..

காற்றினில் கலந்து கானக வாசனின் 
திருச்செவி தன்னில் சேராதோ...

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

இன்று 
கார்த்திகையின் தேய்பிறை அஷ்டமி


க்ஷேத்ர பாலகர் என விளங்கும்
ஸ்ரீ வைரவ மூர்த்தி தோன்றிய நாள்..

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி, வழுவூர்..

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.. 4/73/6
-: திருநாவுக்கரசர் :-

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஓம் ஹரி ஓம் 
ஓம்  சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய படங்களுடன் ஸலோக வரிகளையும் பார்த்து, படித்து ஹரிஹர புத்திரனை , ஐயப்ப சாஸ்தாவை, வணங்கிக் கொண்டேன்.அவர் அனைவரையும் காத்து ரட்சிக்க வேணுமாய் பிரார்த்தனைகளும் செய்து கொண்டேன்.
    ஓம் சுவாமியே ஐய்யப்பா ..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. ஐயப்பா சரணம்... சரணம்... ஹரிஹர சுதனே சரணம்.. சரணம்...

    பதிலளிநீக்கு
  3. 'ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.' சனி நாளில் சுவாமி ஐயப்பா வணங்கிக் கொண்டோம்.
    எனது பேரனும் சென்ற மாதம் ஸ்கூல் சைவ சமய விழாவில் புலியின் மேல் ஐயப்பனாக வந்து சிறுவர் நாடகம் செய்தார். சரணம் ஐயப்பா என பாடல் பாடுவார். சிறுவர்கள் மனதில் இறைவணக்கங்கள் இப்படி வருவதும் மகிழ்ச்சிதான்.

    அவரருள் அனைவரையும் காக்கட்டும். பாதம் பணிந்து நிற்போம்.

    ஓம் வைரவாய நமக.

    கஜ சம்ஹார மூர்த்தி தரிசனம் பெற்றோம். பகிர்வுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..