நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 11
வெள்ளிக்கிழமை
கச்சித் திருப்புகழ்
தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன ... தனதான
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன் ... மலராலுங்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு ... மதனாலும்
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல ... இனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது ... தரவேணும்
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி ... லுறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல ... கதிர்வேலா
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய ... திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட வெட்டித்
துணிசெய்த ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-
கச்சையுடன் கூடிய தனங்களைத்
தைத்துக் கொண்டு ஊடுருவிய
மீன் கொடி மதனுடைய
பூங்கணைகளாலும்,
கறைகள் உடைய கலைகளுடன் கூடிய சந்திரன்
ஆலகால விஷத்தை உடைய கடலின் இடையே இவள் அச்சப்படும்படி எழுந்துள்ளதாலும்,
இந்தத் தலைவி பித்துப் பிடித்து மனம் இளைத்துத் தளர்ச்சி அடைவது சாமானியமானது அல்ல..
ஆதலால், முருகா
இனிமை தரும் ஜாதி மல்லிகையின் புது மலர்களை வைத்துத் தொடுக்கப்பட்ட வெட்சி மாலையை இவளுக்கு நீ தந்தருள வேண்டும்...
பச்சை நிற உமையம்பிகை அன்புடன் பூஜை செய்தருளிய காஞ்சி மா நகரத்தில் உறைபவனே,
உனைப் பற்றிப் பணிபவர்களது
குற்றங்கள் ஒழியவும்
அவர்களது பகைவர்கள் அழிந்து போகவும்
வந்தருளி போர் புரிகின்ற கதிர் வேலனே,
இன் மொழி பேசுகின்ற வள்ளி நாயகி காதலுடன்
மெச்சித் தழுவுகின்ற அழகுத் திரு மார்பனே,
குலகிரி ஏழுடன் கிரெளஞ்ச மலையையும் சேர்த்து
அதுவும் பொடியாகும்படிக்குச் செய்தவனே...
அசுரர்களை வெட்டித் துணித்த பெருமாளே..
திருப்புகழைப் பாடி, முருகன் திருவருளை நாடி பணிகிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
செச்சைச் தொடையது - இதன் அர்த்தம் வெட்சி மாலையா?
பதிலளிநீக்குஆமாம்...
நீக்குசெச்சைச் தொடை- இதன் அர்த்தம் வெட்சி மாலை..
நெல்லை அவர்களுக்கு நன்றி
மகிழ்ச்சி
கச்சித்திருப்புகழைப்பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குதிருப்புகழ் பதிவு இனிமை. நன்றி.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
திருப்புகழ்பாடி முருகனை வணங்கிக் கொண்டோம்.
பதிலளிநீக்குமுருகா சரணம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. திருப்புகழ் பாடலும், விளக்கமும் நன்று. நன்மைகள் பலவும் தர வேண்டுமென முருகனை பணிந்து வணங்கிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..