நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

பதிவு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 23
ஞாயிற்றுக்கிழமை


எபியின் (6/9) வெள்ளிப் பதிவில் ' துரை அண்ணாவைக் காணவில்லையே .. '-  என்ற, சகோதரி கீதா அவர்களது தேடுதலைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்..

ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களும் விசாரித்து இருந்தார்கள்..
 
அவர்களது அன்பிற்கு கைம்மாறு செய்வது எங்ஙனம்?..

திட்டமிடப்பட்டிருந்த பதிவுகளை ஒதுக்கி வைத்து விட்டு அவர்களது அன்பினுக்காக இப்பதிவு..

உண்மையில் 
உடலால் மிகவும் பலவீனப்பட்டுள்ளேன்..

சமீப காலமச்க 
பார்வையில் சற்றே குறைபாடு.. 

என்றால் சிறிய எழுத்துக்களை இயல்பாக வாசிக்க இயலவில்லை.. கைத்தல பேசியில் எழுத்துக்களைப் பெரிதாக்கி உருட்ட வேண்டியதாக இருக்கின்றது..

கண்ணாடி மாற்ற வேண்டும் என, 
பாரம்பரியக் கடை என்று இங்கு பீற்றிக் கொள்கின்ற
 கடைக்குச் சென்ற போது ஏதேதோ  வித்தைகளுக்குப் பிறகு ஒன்றைக் கொடுத்து கெடுத்தான்..

அது ஒரு மதிய நேரம்... 
 
கண்ணாடியை அணிந்து கொண்டு சிறிது தூரம் சென்று வருவதற்குள் அப்படியும் இப்படியுமாக இருந்தது..

திரும்பவும் கன்ணாடிக் கடைக்கு வந்து விவரம் கூறினேன்..

நீங்கள் சொல்லிய அளவு தானே... என்றான் எனது கண்களைப் பரிசோதித்தவன்..

பார்வை மங்கலாக இருக்கும் போது தெளிவாகத் தெரிகிறது என்று சொல்வதற்கு நான்
என்ன மடையனா?.. எவனாவது  அப்படிச் சொல்வானா?.. எனக் கேட்க நினைத்தேன்... 

ஆனால் கேட்கவில்லை..

கண்ணாடியைக் கழற்றக் கூடாது .. செட் ஆவதற்கு ஒரு வாரம் ஆகலாம்.. - என்று அங்கிருந்த அறிவாளிகள் அறிவுரை கூறினர்.. 

அடடா... இது நமக்கான இடம் அல்லவே.. தவறாக வந்து கிடைத்தற்கரிய பணத்தை இழந்து விட்டோமே என்று மனம் வருந்தியபடியே வீடு வந்து சேர்ந்தேன்..

கண்ணாடிக் கடைக்காரன் கொடுத்துக் கெடுத்ததற்கு மாற்றாக இன்னும் வேறு பதிய கண்ணாடி அமையவில்லை...

இதைத்தான் 
தலைக்கு வந்து தலைப்பாகையோடு போயிற்று என்பார்கள்..

தற்சமயம்
நல்லதொரு கண் மருத்துவரிடம் செல்லாதது என் தவறு..

ஆறு ஏழு மாதத்திற்கு முன்பு சென்றதும் பிரச்னை ஆகி விட்டது..

எப்படி என்றால் -
ஆறு மாதத்திற்கு முன்
கண்ணுக்காக தஞ்சை அரசு கண் மருத்துவ மனைக்கு சென்று பரிசோதித்துக் கொண்ட போது சுகர் இருக்கா?.. என்றார்கள்..  

இருந்தது.. இப்போது இல்லை.. என்றேன்..

அது எப்படி இல்லாமல் போகும் - என்று சோதித்தார்கள்..  சோதனையின் முடிவில் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருப்பதைக் கண்டு -

எப்படி டா?.. - என்று ஆச்சர்யம்..

சித்த மருந்துகள்!.. என்றேன்..

சித்தா மருந்துகளையும் அலோபதியையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது... அதை முதலில் நிறுத்த வேண்டும் - என்றார்கள்...

அதன் பின் அந்தப் பக்கமே போகவில்லை நான்...

2022 ல் சிவப்பணுக்கள் குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டது..

இப்படியான நிலையில் உணவு ஒவ்வாமையும் சேர்ந்து கொள்ள  பிரச்னைகள்.. 

நான் கவலைப்படாமல் உல்லாசமாகக் கதைகளில் கரடி விட்டுக் கொண்டிருந்தேன்..

மூன்று வருடங்களாக
வெண்பெங்கல் மட்டுமே எனது உணவு..

தப்பித்தவறி உளுந்து வடையின் மிளகாய்த் துணுக்கு நாவில் பட்டு விட்டால் உடலில் அரிப்பு தான்..

கவனத்துடன் ஒதுங்கியிருந்த நிலையில் பாலும் ஒத்துக் கொள்ளாமல் போயிற்று..

எல்லாம் முன் ஜென்ம வினை!..

இந்நிலையில் வலக்கை விரல்களின் வலி குறையாத நிலையில்
இடக்கை விரல்களிலும் கூடுதலாக கழுத்திலும் வலி..

நாளும் ஒரு பதிவு...
அவ்வப்போது கதைகள் கட்டுரைகள்..

இது எனது தமிழிடத்தில் நான் நேர்ந்து கொண்டது..

உடல் நலன் கருதி   குறைத்துக் கொண்டிருக்கின்றேன்..

இந்நிலையில் எனது தளத்தில் மட்டும் தற்சமயம்  வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றேன்... அது நேர்ச்சை..
  
நன்பர்களது தளங்களுக்கு வர இயலவில்லை.. Fb ல் இருப்பது போல இங்கும் முத்திரையிடும் வசதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் மன்னிக்கவும்...

இந்தப் பதிவு கூட வரி வரியாக தட்டச்சு செய்து தொகுக்கப்பட்டது தான்.

இப்படியாக எதிர்வரும் வாரத்திற்கு பதிவுகளை ஒப்பேற்றி வைத்துள்ளேன்  என்பதும் மகிழ்ச்சி..

விரைவில் வருகின்றேன்...
 நன்றி.. நலம் வாழ்க..

வாழ்க்கை என்றால் 
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்..

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை..
-: கவியரசர் :-

சக்தி கொடு தமிழே
சக்தி கொடு!..
*
ஓம் சிவாய நம ஓம்
***

20 கருத்துகள்:

  1. பதிவை படித்து மனம் வருத்தபட்டேன்.
    இறைவன் அருளால் விரைவில் நலம் பெறுவீர்கள்.
    நான் குலதெய்வம் , திருச்செந்தூர் போய் விட்டு இன்னும் ஊரிலிருந்து வரவில்லை அதனால் தான் பதிவுகளுக்கு வர முடியவில்லை என்று நினைத்தேன்.

    கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடி போட்டால் நல்லது.
    உடல் துன்பங்களை பொறுத்துக் கொண்டு தினம் இறைஉணர்வை தரும் பதிவுகளை போட்டு கொண்டு இருப்பது அவன் அருளே!
    நலமாக வைப்பார் இறைவன் நம்பிக்கையோடு இருங்கள்.
    கண்ணதாசன் பாடல் நமக்கு ஒரு நல்ல பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நலமாக வைப்பார் இறைவன் நம்பிக்கையோடு இருங்கள்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  2. சகோ துரை செல்வராஜூ அவர்கள் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
    விரைவில் நலம் பெற வேண்டும். குலதெய்வம், திருச்செந்தூர் முருகனை வணங்கி வந்து இருக்கிறீர்கள் வழி காட்டுவார்கள்.

    வெள்ளிக்கிழமை பதிவில் போட்ட கருத்து.
    நான் மகள் ஊரிலிருந்து மகன் ஊருக்கு வந்த அன்று படிக்கவில்லை இன்று தான் பார்த்தேன். பதிவுகளை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. கவலை வேண்டாம் ஜி
    தங்களுக்கு பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்....

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  4. உங்கள் பகிர்வை படித்ததும் கவலையாகிவிட்டது. நல்ல கண்மருத்துவரிடம்காட்டி கண்ணாடி பெற்றுக்கொள்வது நன்று.

    இக்குறைகளுடன் தொடர்ந்து பகிர்வுகள் தரும் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    எல்லாம் வல்ல ஆண்டவன் இக்குறையையும் நீக்குவான். நீங்கள் விரைவில் நலம் அடைய அவன்பாதம் பணிந்து வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் வல்ல ஆண்டவன் இக்குறையையும் நீக்குவான்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    உங்கள் உடல் நலக்குறைவு பிரச்சனைகளைப் படித்ததும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது. தங்கள் கண்பார்வையை பரிசோதனை செய்து சரி செய்து கொள்ளுங்கள். கண்ணாடி புதிதாக மாற்றியமைத்துக் கொண்டால், சரியாகி விடும் என்றால் நல்லதுதானே..! அப்படியே நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தங்களது இறை நம்பிக்கை அனைத்தையும் குணமாக்கி விடும். கவலை வேண்டாம். தங்களது ஆன்மிக பதிவுகள் எங்களுக்கு மனதில் தைரியத்தை தந்து வழி நடத்துகின்றன. தொடர்ந்து இறையருளுடன் பதிவுகளை தாருங்கள். தாமதமாக இந்தப்பதிவை படிக்கிறேன். மன்னிக்கவும்.

    எனக்கும் இந்த சுகர்தான் பாடமாகப் படுத்துகிறது. அலோபதி மாத்திரைகள் ஒத்து வரவில்லை. அனைவரும் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்கள். என்ன செய்வதென தெரியவில்லை. இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு ஏதோ நடமாடி கொண்டிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்த சுகர்தான் பாடாகப் படுத்துகிறது. அலோபதி மாத்திரைகள் ஒத்து வரவில்லை. அனைவரும் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்ளுங்கள்..

      ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்ளுங்கள்... விரைவில் குணமழ்கி விடும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  6. சர்க்கரை அரசு மருத்துவமனையில் சோதித்தீர்கள் சரி, கண்ணை சோதிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோதித்தார்கள்...
      இதிலும் பெரிய மருத்துவர் ஒரு கருத்தும் அடுத்த நிலை மருத்துவர் வேறொரு கருத்துமாக இதுந்தனர்..

      ஆக மொத்தம் கண்ணில் பிரச்னை இல்லை..

      நீக்கு
  7. // எல்லாம் முன் ஜென்ம வினை //

    சத்தமாக சொல்லாதீர்கள்.  சட்ட பிரச்னையாகிவிடும்!

    பதிலளிநீக்கு
  8. விரைவில் கண்கள் சீராகி, உடலும் உள்ளமும் கலகலப்பாக மாற பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பான கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  9. துரை அண்ணா மிக்க நன்றி, எங்கள் அன்பினைக் கருத்திற் கொண்டு பதிவிட்டமைக்கு

    உங்கள் உடல் நலம் விரைவில் சரியாகிடும். இப்போது மேலே சில வரிகளை மட்டும் வாசித்துக் கருத்து சொல்கிறேன் நன்றி சொல்லிவிடலாம் என்று. மீண்டும் வருகிறேன் துரை அண்ணா முழுவதும் வாசிக்க

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எங்கள் பிளாக் வலைத்தளத்தில் உங்கள் பதிவை படித்து விட்டு இங்கே வந்து முழு பதிலையும் படித்தேன். விபரங்களறிய வருத்தமாக இருந்தது. நீங்கள் கண் மருத்துவர் யாரையும் பார்க்கவில்லையா? ரோகிணி என்னும் கண் மருத்துவரைப் பற்றி நல்ல விதமாக சொல்லுவார்கள். அவரிடம் சென்று கண்களை பரிசீலித்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அண்ணா கண் மருத்துவரைக் கண்டு சரியான கண்ணாடி அணியலாம். நிறைய உடல் உபாதைகளாக இருக்கிறதே.

    எனக்குமே முதலில் கண்ணாடி மாற்றும் போது ஓரிரு நாட்கள் அப்படி ஆகும் ஆனால் அதன் பின் சரியாகிவிடும். அது போலத்தான் காது மெஷினும். அவர்கள் சொல்லித்தான் கொடுக்கிறார்கள்.

    எதற்கும் கண் மருத்துவரைப் பார்த்துவிடுங்கள்.

    விரைவில் எல்லாம் சரியாகிட பிரார்த்தனைகள்! துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் பூரண குணம் பெற எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..