நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வெள்ளிக்கிழமை
திருத்தலம்
திரு ஆனைக்கா
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன ... தனதான
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண ... ரருள்பாலா
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு ... மணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி ... லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில் மங்கியெ யேழைப் பாவியெ ... னழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி குண்டலி யாலப் போசனி ... யபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி குன்றது வார்பொற் காரிகை ... யருள்பாலா
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை திண்புய மாரப் பூரண ... மருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய தென்திரு வானைக் காவுறை ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நிலவையும் கங்கையையும்
தரித்துள்ள செஞ்சடை மேல் தாவி நிற்கும்
ஐந்தலை நாகத்தை
ஆபரணமாகக் கொண்டுள்ள
சிவபெருமான் அருளிய திருக்குமரனே..
நாவாரப் பாடி உன்னை
தினமும் அன்புடன் பூஜை செய்கின்ற
வழக்கத்தை மேற் கொள்ளாமல்
கச்சு அணிந்து நல் ஆபரணம் பூண்ட
வஞ்சியரின் மாய அழகிலும்
வண்டுகள் திரிகின்ற
கூந்தலிலும், காதளவு ஓடி நெருங்கி
மை பூசிய கண்களின் பார்வையிலும்,
வெண் பட்டாடை அழகினிலும்,
அறிவு மயங்கிப் பாவம் புரிந்து
அடியேன் அழிந்து போவேனோ?..
பொற்கொடியை ஒத்த மெல்லியள்,
நீல நிறத்தவள், தாமரை மாலையணிந்த அழகி
சுத்த சக்தி,
ஆலகால விஷத்தை உண்டவள்,
பேரழகி,
கொஞ்சி மகிழ்கின்ற
ஆகாய கங்கையைப் போலத்
தூய்மை நிறைந்தவள்,
சங்கரி, வேதங்கள்
போற்றுகின்ற பார்வதி,
இமயமலை செய்த தவத்தின்
பயனாக வந்துதித்த அம்பிகை
ஈன்றளித்த திருமகனே
செம்பவள இதழ்களை உடையவளும்,
ஒளி பொருந்தியவளும்
ஆகிய குறப் பெண் வள்ளி நாயகியின்
அணி தவழும் தனங்களில் அணைந்து
நல்லருள் புரிந்தவனே
செந்தமிழ்ப் பாணர் யாழ் வாசிக்க
(திருஞான சம்பந்தர் பாடியபோது
திருநீலகண்டர் யாழ் வாசித்த நிகழ்வு)
அழகிய திரு ஆனைக்காவில்
வீற்றிருக்கும் பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
அருகில் வந்தும் அண்ணலைக் காணமுடியாமல் உருகி நிற்கும் எங்களைக் காத்தருள்வாய் முருகா...
பதிலளிநீக்குமுருகா முருகா
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமுருகா முருகா
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
முருகா முருகா
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஜி
ஆனைக்கா அண்ணல் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குமுருகா முருகா
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி வெங்கட்
முருகா சரணம். திருவானைக்கா பெருமானே போற்றி போற்றி.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருப்புகழ் பாடலையும், அதன் பொருளையும் படித்து அறிந்து கொண்டேன். முருகனை பணிந்து சரணடைவோம். திருவானைக்கா குமரன் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.