நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 20
திங்கட்கிழமை
திரு ஐயாறு
ஆடி அமாவாசை நாளில் ஸ்ரீ ஐயாறப்பர் ஸ்வாமியும் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியும் தீர்த்தவாரிக்கென காவிரி புஷ்ய மண்டபத்திற்கு எழுந்தருளிய காட்சிகள்..
நன்றி :
சிவ கணத்தார்., திரு ஐயாறு..
**
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
அம்மாடி.. மக்கள் வெள்ளம்... கண்ணதாசன் வரிகளில் "கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா"?
பதிலளிநீக்குபடங்கள் யாவும் சிறப்பு.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி ஸ்ரீராம்..
ஆடி அமாவாசை நாளில் திரு ஐயாறு சிறப்பு தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.( இங்கு இன்று தான்) அப்பர் பதிகம் படித்து வணங்கி கொண்டேன் அம்மை, அப்பனை.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி...
நலம் வாழ்க..
ஆடி அமாவாசை நாளில் ஐயாரப்பர் தீர்த்தவாரி காண்பது சிறப்பு.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருக்கின்றன.
பாடல் பாடி தரிசித்தோம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி மாதேவி...
திரு ஐயாறப்பர் தீர்த்தவாரி காட்சிகள் கண்டு ரசித்தேன். ஈசனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகள். கூட்டம் பார்த்தால் பிரமிப்பு.
பதிலளிநீக்கு