நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 32
செவ்வாய்க்கிழமை
தஞ்சை ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில்
ஆஷாட நவராத்திரி வராஹி அம்மன் வழிபாடு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..
கடந்த வெள்ளியன்று தரிசனம் செய்வதற்குச் சென்றோம்..
நெகிழி கொண்டு பல்வேறான அலங்காரங்கள் கொலு என்று வைத்திருக்கின்றனர்..
காலையில் யாகமும் மதிய்ம் மஹா அபிஷேகமும் நடந்து -
மாலையில் வெண்ணெய்க் காப்பு அலங்காரம்...
உற்சவத் திருமேனியும் அங்கே திகழ்ந்தது..
சிறு பொழுதில் கடும் மழை பிடித்துக் கொண்டது..
மழையின் ஊடாக சில காட்சிகள். இன்றைய பதிவில்..
ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!. 1072
-: திருமூலர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
மழைக்கு நடுவிலும் மனம் தளராது கண்கொள்ளா காட்சிகளை கேமிராவில் சிறையடுத்து எங்களுக்கும் காணக் கொடுத்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குமழையினூடான இரவுப் படங்களில் பல தெளிவாக இல்லை. பகலில் என்றால் சூப்பராக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குகாலையில் பக்தி உலா கண்டதில் மகிழ்ச்சி
ஆஷாட நவராத்திரிக்கு வராஹி அம்மன் அலங்கார படங்கள் அருமை.
பதிலளிநீக்குஇரவு எடுத்த கோவில் படங்கள் அருமை.
திருக்கயிலை காட்சி நன்று.
மழைக்கு நடுவே கொண்டாட்டம் - அழகான காட்சிகள். வராஹி அம்மன் படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குஅழகான காட்சிகளை அற்புதமாக படமாக்கி எங்கள் பார்வைக்கு பார்வைக்கு தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல அருமை.
பதிலளிநீக்குஓம் நமசிவாய
வாழ்க வையகம்
வராகி அம்மனின் வண்ணக்கோலங்கள் கண்கொள்ளாத காட்சி.
பதிலளிநீக்குமழையையும் பொழிய வைத்துவிட்டாள்
வராகி அம்மனை போற்றி வணங்குவோம்.