நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 25, 2024

நலங்கு மாவு 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 9
வியாழக்கிழமை


மலர்ந்த முகமே 
வாழ்க்கையின் இன்பம்

1) தாமரை (இதழ்கள்)
தெய்வீக மூலிகை..

2) சந்தனம் 
 மிக உயர்ந்த நறுமணப் பொருள்..

3) ரோஜா மொட்டு 
சருமத்திற்குப் பொலிவு..

4) கஸ்தூரி மஞ்சள் 
 அரிப்பு, தேமலை நீக்குகின்றது..

5)  மஞ்சள் கிழங்கு
சிறந்த கிருமி நாசினி..
மங்கையரின் தோலில் முடி வளர்ச்சியைத் தடுக்கின்றது..

6) வசம்பு 
நோய்த் தடுப்பு, கிருமி நாசினி..

7) கடலைப் பருப்பு 
தோல் மினுமினுப்புக்கு உகந்தது..

8) பாசிப் பருப்பு 
தோலின் கருமை (கருந்தேமல்) நீக்குவது..

9) சீயக்காய் 
அரிப்பு, சொறி நீங்கும்.. 

10) வெட்டி வேர் 
வியர்வையினால் உண்டாகின்ற  அரிப்பிற்கு நிவாரணம்..

11) நன்னாரி வேர் 
வியர்வை நாற்றம் தீரும்..

12) கோரைக் கிழங்கு 
உடற்பொலிவு உண்டாகும்..

13) பூலாங்கிழங்கு
முகப்பரு குறையும்... இதைத் தனியாக அரைத்துப் பூசினால்
பெண்களின் சருமத்தில் தேவையற்ற முடிகள் நீங்கிப் பொலிவு உண்டாகும்..

14) ஆவாரம்பூ
தோலின் பாதுகாப்பு.. 

15) வெந்தயம்
வியர்வை வாடை நீங்கும்.. தோலுக்கு மினுமினுப்பு ஏற்படும்..

16) பூவந்திக்கொட்டை
நுரை பெருக்கி.. கேச பாதுகாப்பு..

17) எலுமிச்சைத் தோல்
இதில் இருக்கும் எண்ணெய் சருமத்தைச் சுத்தப்படுத்தி தசைச் சுருக்கங்களை குறைக்கின்றது..

18) புதினா இலை 
முகத்தின்  திசுக்களுக்குப் பொலிவூட்டுகின்றது.. 

பூவந்திக்கொட்டையின் தோலை  சீயக்காயுடன் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து  அரைத்து  தலைக்கு குளித்து வருவதன் மூலமாக தலைமுடி பளபளப்பாகும். இளநரை ஏற்படாது.. முடி உதிராது.. பொடுகுப் பிரச்னை தீரும்.

மலர்களுள் தெய்வீகமானது தாமரை.. இதனை விலை கொடுத்து வாங்கினாலும் நாம் நேரிடையாக
பயன்படுத்தக் கூடாது.. கோயிகளில் இருந்து நிர்மால்யமாகவே பெற வேண்டும்..

இப்படிப் பெறப்பட்ட தாமரை, சண்பகப் பூக்களோடு அல்லது பூக்களின் இதழ்களோடு மல்லிகை முல்லை மருக்கொழுந்து இவற்றைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவுவதாலும் குளிப்பதாலும் உடல் இயற்கையாகவே நறுமணம் அடைகின்றது.. புத்துணர்ச்சி பெறுகின்றது..

குளிக்கும் முன்பாக நமக்குத் தேவையான அளவு எடுத்து நீரில் குழைத்து உடம்பில் பூசி குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் வைத்திருந்து குளிக்க வேண்டும்..

சருமத்தை பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது..

பொதுவாக வெயில் காலத்தில் வியர்வையும் அரிப்பும்  பிரச்னையாக உள்ளது. 

இந்தப் பிரச்னைக்கு,   செயற்கை வாசனைப் பொருட்கள் உகந்தவை அல்ல... 

கை கால் இடுக்குகளில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் போது, 
சிலருக்கு -  கட்டிகள், கொப்புளங்கள் உருவாகி அதனால் புதிய தொந்தரவு ஆரம்பித்து விடும். 

நலங்கு மாவை உடலில்  தேய்த்துக் குளிப்பதால், வியர்வையின் துர்வாடையையும் நோய்க் கிருமிகளையும் அகற்றலாம்.. 

நலங்கு மாவினை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. 

அழகு நிலையங்களுக்கு சென்று, ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை விட,  
அதிக விலையும் ரசாயனமும் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை   பயன்படுத்துவதை விட 

முன்னோர்கள் காட்டிய வழியில்,  மூலிகைப் பொருட்களை கொண்டு நாமே தயாரித்த நலங்கு மாவு சிறந்தது.. 

அழகு மற்றும் ஆரோக்கியம் காக்கப்படும் என்பது உறுதி..
ஃஃ

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!..
-: கவியரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. நலங்கு மாவுக்கு வேறு ஏதோ பெயர் உண்டோ?  நானும் அன்றிலிருந்து ஞாபகப் படுத்திப் பார்க்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு இது தான் பெயர் என்று நினைக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. காயம் பட்டால் கூட என் அம்மா மஞ்சள் இழைத்துதான் போடுவார்.  கட்டி கொப்புளம் போல இருந்தால் அது உடைய மஞ்சளுடன் உப்பு சேர்த்துக் கொள்வார்.  கல்லில் இழைத்து, கரண்டியில் வழித்து, தீபத்தில் சூடாக்கி  தடவி விடுவார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைக்கு இப்படியான திறமைகள் இருந்தன..

      இன்றைக்கு ஒன்றும்
      சொல்வதற்கு
      இல்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. ஆண்டாள் நலுங்கு மாவு பற்றி சொன்னதால், ஆண்டாள் நலுங்கு மாவு என்றே மதுரையில் கடையில் விற்பார்கள்.

    நல்ல பதிவு.

    நீங்கள் மூலிகைப்பண்ணை சிகிட்சைக்கு போய் வருவதாக சொன்னீர்கள் அங்கு விற்பார்கள் இல்லையா பொடி வகைகள்?
    தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் நலுங்கு மாவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூலிகைப் பண்ணையில் இதெல்லாம் கிடைக்கின்றதா என மறுமுறை தான் விசாரிக்க வேண்டும்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சிறப்பான பொடியாக இருக்கிறது! பயன்படுத்தத் தோன்றுகிறது. இங்கே இவற்றையெல்லாம் செய்ய வாய்ப்பு குறைவு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. இயற்கை தந்திருக்கும் அரிய பொக்கிசங்கள். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..