நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 29
சனிக்கிழமை
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றலொட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே.. 1/50/7
-: திருஞானசம்பந்தர் :3
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீஇம் மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே..6/95/1
-: திருநாவுக்கரசர் :-
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே.. 873
போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு
கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
என்செய்வான் தோன்றினேனே..
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-
**
ஆனிஹஸ்தம்
இன்று புதிதாய்ப்
பிறந்தேன்..
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
படங்களும், பாடல்களும் அருமை. பாடல்களை பாடை இறைவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குதங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
நலம் வாழ்க..
ஆண்டவனே.. உன் பாதங்களை சரணடைகிறோம்... காத்தருள்வாய்.
பதிலளிநீக்குதங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
ஆண்டவனே.. உன் பாதங்களை சரணடைகிறோம்... காத்தருள்வாய்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
ஆனி அத்தம் நாளில் தோத்திரப்பாடல்கள் பலவும் பாடி இறைவனை வணங்கிக் கொண்டோம்.
பதிலளிநீக்குஇறைவன் அனைவர் நலனையும் காக்கட்டும்.
தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி..
படங்களும் பாடல் வரிகளும் ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்கு