நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 28, 2023

அறுசுவை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 11
திங்கட்கிழமை


உணவு என்றால் - சுவை. 

அந்தச் சுவையையும் 
ஆறு வகையாக வகுத்தது நமது கலாச்சாரம்.. 

ஆறு சுவைகளுடன் கூடிய உணவே - உணவு. அதுவே மருந்து - என்றும் வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்..


பாயாசம் பந்திக்கு வரவே இல்லயே!..

இனிப்பு முதலில்.. அடுத்ததாக உப்பு, புளிப்பு, காரம், கசப்பு  இறுதியாகத் துவர்ப்பு..

கரும்பில் இனிப்பும்
கீரைகளில் உப்பும்
எலுமிச்சையில் புளிப்பும் மிளகில் காரமும் பாகற்காயில் கசப்பும் வாழைக் காயில் துவர்ப்பும் - விளங்குகின்றன..

விருந்துகள் இனிப்புடன் தொடங்கி துவர்ப்பான தாம்பூலத்துடன் நிறைவடையும் பாரம்பர்யம் நம்முடைய து.. 

இருப்பினும், விருந்துகளில் கசப்பு சேர்க்கப்படுவது இல்லை..

இவ்வாறு அறுசுவை கூடிய உணவை  உண்டு உறங்கி விட்டால் போதாது. உணவை அதற்கு உரிய காலத்தில்  உண்ண வேண்டும்..

நமது உடல் 
ஏழு தாதுக்களால் ஆனது என்கின்றது ஆயுர்வேதம்.. அவை - 

ரஸ தாது : நிணநீர்
ரக்த தாது : இரத்தம்
மாம்ச தாது : தசைகள்
மேதா தாது : கொழுப்பு
அஸ்தி தாது : எலும்பு 
மஜ்ஜ தாது :  மூளை 
(நரம்பு மண்டலம்)
சுக்ர தாது : ஜனனேந்திரியம் 
(விந்து, அண்டம்)
-: நன்றி: விக்கி :-

இந்த ஏழு தாதுக்களையும் வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்..

அந்தி சந்தி எனும் உதயாதி வேளைகளில் எந்த உணவையும் உண்ணக் கூடாது. 

கோபம் துக்கம் கவலைகளில்  உண்பதைத் தவிர்த்திட வேண்டும்.

வறட் .. வறட் .. - என்று அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடாது.. உணவை அப்படியே  விழுங்கக் கூடாது..

நின்று கொண்டு உண்ணக் கூடாது. கையை ஊன்றிக் கொண்டும் சாப்பிடக் கூடாது..

எவ்வகை உணவாயினும் அதை வாழை இலையில் உண்பது சாலச் சிறந்தது..

நோயுற்றவர்களைத் தவிர மற்றவர்கள் படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவு உட்கொள்வது கூடாது என்பது பொதுவான விதி.. 

உண்ணும் போது, கிழக்கு நோக்கி அமர்ந்து உண்பதனால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி உண்டால்  புகழ் வளரும். மேற்கு நோக்கி  உணவு உட்கொண்டால்  செல்வம் மேலோங்கும்.
வடக்கு நோக்கி உணவு உட்கொள்ளவே கூடாது என்று பெரியோர்கள் வகுத்து வைத்திருக்கின்றனர்.. 

வேறொரு முக்கியமான விஷயம் - காலணிகளோடு சாப்பிடக் கூடாது... இதை விடவும் முக்கியமானது உணவை வீணடிக்கக் கூடாது..

இதையெல்லாம் நவ நாகரீக நடைமுறையில் கடைபிடிப்பது மிகவும் சிரமம்..

உணவு உட்கொண்ட பின் நூறு அடி தூரமாவது நடக்க வேண்டும் என்பது சிலருடைய கருத்து.. 

உணவும் சுவையும் பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பு உடையவை..

இதை அறிந்து கொண்டால்,  நோய்களைத் தீர்ப்பதோடு நோய்கள் வராமலும் தடுக்கலாம்..

எப்போது  வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. 
எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. 
எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. 
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்..  
- என்றிருந்தால்  சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

நோய் நொடி இன்றி - நமது உடல் நலமாக இருந்து விட்டால் வாழ்க்கை இனிமை தான்..
 
ஒழுங்கு முறை தவறாமல் ஆறு சுவைகளுடன் உணவு உட்கொண்டு வந்தால், வாழ்வில் இனிமை என்றென்றும் நிலைத்திருக்கும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
"*"
திருக்குற்றாலம் 
ஸ்ரீ குற்றாலநாதர் திருக்கோயில் 
தெற்குப் பிரகாரத்தில்
தற்காலிக கடைகள்
 அமைக்கப்பட்டிருந்தன   
அவற்றுள் ஒன்றில் எரிவாயு உருளை வெடித்து
 ஆக.,25 பிற்பகல் 2:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது..





தீப்பிழம்புகளும் புகை 
மண்டலமுமாக காணொளியும் 
வந்துள்ளது.. எனினும், 
பதிவில் வைப்பதற்கு 
மனமில்லை..


இறைவா..
எம்பெருமானே..
***


10 கருத்துகள்:

  1. உணவை அதன் சரியான முறையில் உட்கொள்வது இந்தக் காலத்தில் சிரமம்தான்.  அறுசுவையும் கலந்து எப்போதும் சாப்பிட முடிவதில்லை.  ஒன்றிரண்டு பதார்த்தங்கள்தான் அன்றாட வாழ்வின் ஆகாரங்கள்.

    பதிலளிநீக்கு
  2. குற்றாலம் விபத்தும் சரி, மதுரை ரயில் நிலையத்தில் நடந்த விபத்தும் சரி வேதனையானவை.  மக்களின் அலட்சியத்தால், கவனக்குறைவால் ஏற்பட்டவை. 

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல்கள் ஜி.

    படங்கள் மனதை கலக்குகிறது.

    பதிலளிநீக்கு
  4. திருக்குற்றாலம் செய்திகள் வருத்தம் அளிக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. உணவை எப்ப்டி சாப்பிட வேண்டும் என்று பகிர்ந்து கொண்டது நன்று.
    என் மாமனார் உணவு உண்ட பின் சிறிது நேரம் நடப்பார்கள். 100 வயது வரை அப்படி நடந்தார்கள். 5 வருடம் சக்கர நாற்கலியில் உணவு உண்ட பின் படுக்காமல் அமர்ந்து இருப்பார்கள்.
    திருக்குற்றாலம் தீவிபத்து வருத்தம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. உணவு முறைக் குறிப்புகள் எல்லாம் சிறப்பானவை. சில பின்பற்றலாம் சில கொஞ்சம் சிரமம் தான் இப்போதைய காலகட்டத்தில், என்று தோன்றுகிறது துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மதுரை ரயில் யார்ட் தீவிபத்தும், குற்றாலம் தீவிபத்தும் ரொம்ப வேதனையானவை. இது கண்டிப்பாக மக்களின் கவனக்குறைவால் ஏற்பட்டவை என்றே தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆறு சுவைன்னு போட்டுட்டு ஏகப்பட்ட இனிப்புப் படங்கள்... சுவை

    பதிலளிநீக்கு
  9. உணவு பற்றிய நல்ல தகவல்கள்.

    விபத்துகள் கவலை தருகின்றது.

    பதிலளிநீக்கு
  10. எல்லாவற்றையும் பின்பற்றுவது ரொம்பக் கஷ்டம். முடிந்தவரை உணவை வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதே நன்மை தரும்.

    எரிவாயு உருளையினால் மதுரையில் ரயிலிலும், இங்கே கோயிலிலும் தீ விபத்து! மக்களின் அலட்சியமே காரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..