நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 19, 2023

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 2 
சனிக்கிழமை


பூட்டிக் கிடந்த சிறைக்குள் சங்கு சக்ர கதாயுதங்களுடன் சர்வ அலங்கார பூஷிதனாகக் காட்சியளித்த ஸ்ரீ மஹா விஷ்ணு - வசுதேவ தேவகி தம்பதியரிடம் தேவ ரஹஸ்யங்களைச் சொல்லி விட்டு,  

தன்னை - யமுனைக் கரையில் இருக்கும் கோகுலத்தில் நந்தகோபன் இல்லத்தில் விட்டு விட்டு அங்கே ஜனித்திருக்கும் பெண் குழந்தையை இங்கே எடுத்து வரும்படி பணித்து விட்டு மீண்டும் குழந்தை ஆனார்.


அதன்படி,
வசுதேவர் - குழந்தையை  துணியில் சுற்றி, கூடையில் வைத்துத் தலையில் சுமந்து கொண்டு கோகுலத்தை நோக்கிச் சென்றார்... 

சிறைக் கதவுகள் தாமாகத் திறந்து கொள்ள அங்கிருந்த காவலர்களும் மயங்கிச் சரிந்தனர்..

நள்ளிரவு.. கோட்டையை விட்டு வெளியே வந்தார் வசுதேவர்.. மழை பெய்து கொண்டிருந்தது..

ஆதிசேஷன்  படம் விரித்து மழையைத் தடுத்துக் குடை பிடித்தான்.

யமுனை வெள்ளப் பெருக்குடன் ஓடிக் கொண்டிருந்தது. 

வசுதேவர் அருகே சென்றதும், ஓடிக் கொண்டிருந்த வெள்ளம்  வழிவிட்டு ஒதுங்கியது..

கோகுலத்தில் அனைவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்க  விடுகளின் கதவுகள் திறந்தே கிடந்தன.

நந்தகோபரின் வீட்டை உணர்ந்த வசுதேவர் வீட்டிற்குள் குழந்தையின் சத்தம் கேடடு நுழைந்தார்.. 

வீட்டிற்குள் யசோதாவின் அருகில் தன் குழந்தையை வைத்து விட்டு
அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்தை அடைந்தார்.. 

சிறைக்குள், குழந்தையின் குரல் கேட்டு விழித்த காவலர்கள்  ஓடிச் சென்று கம்சனிடம் தகவல் கூறினர்.. தகவல் அறிந்த கம்சன் விரைந்தோடி வந்தான்..

தேவகியின் கைகளில் பெண் குழந்தையைக் கண்டான்.. 

கோபம் தலைக்கேறியது.. 
தேவகியின் கரத்திலிருந்த குழந்தையின் கால்களைப்  பற்றி இழுத்தான் கம்சன்.. 

" பெண் குழந்தையை விட்டு விடுங்கள்.. அண்ணா.. " - என்று தேவகி கதறினாள்.. 
 
கேளாச் செவியன் ஆன கம்சன் குழந்தையை சுவரை நோக்கி எறிந்தான்.

கம்சனுடைய கையிலிருந்து விடுபட்ட அக்குழந்தை
 எட்டுக் கரங்களில் ஆயுதங்களுடன் வான் வெளியில் வெளிப்பட்டு விளங்கினாள்..


" அடே மூடனே!.. எனது கால்களைப் பற்றியதால் நீ பிழைத்திருக்கின்றாய்.. உனக்காக ஸ்ரீ ஹரி பரந்தாமன் பிறந்து விட்டான்.. அவனால் நீ அழிவாய்!.. "  - என்றபடி காற்றில் கரைந்தாள்..

நந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கிடந்த குழந்தை கால்களை அசைத்துக் கொண்டு
அழுதது.. 

கண் விழித்த கோபியர் விரைந்து சென்று நந்தகோபனிடம் சொல்லியதோடு ஊருக்கும் அறிவித்தனர்..


ஆனந்தக் கடலில் மூழ்கிய கோகுலவாசிகள் குழந்தை பிறந்ததைக் கொண்டாடத் தயாராகினர்..
**

ஓம் ஹரி ஓம்
***

14 கருத்துகள்:

  1. கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா... மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக்கவலைகள் மறைந்ததம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
      கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
      மெல்ல மெல்ல..

      நீக்கு
    2. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. மதுராவிற்குச் சில முறை சென்றதும், கோகுலம் யாத்திரைகளும் மனதில் வந்துபோகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை,
      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கண்ணன் பிறப்பை எத்தனை முறை கேட்டாலும், சலிப்பே வராது. அன்றுதான் புதிதாய் கேட்பது போல் மெய்சிலிர்ப்பூட்டும் வண்ணம் தோன்றும். இதோ கோகுலாஷ்டமி வரப்போகிறது.சின்னக் கண்ணன் தங்கள் பதிவில் வந்து விட்டார். படங்களில் கண்ணனையும், அவனை பெற்றெடுத்த தாய் தந்தையையும் வணங்கிக் கொண்டேன். 🙏. யசோதை கிருஷ்ணன்தான் என்ன அழகு...! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணன் பிறப்பை எத்தனை முறை கேட்டாலும், சலிப்பே வராது. அன்றுதான் புதிதாய் கேட்பது போல் மெய் சிலிர்ப்பூட்டும்..

      உண்மை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தாயே யசோதா உந்தன் ஆயர்குலத்துதித்த மாயன் கோபாலக்கிருஷ்ணன் . டக்கென்று இப்பாடல் நினைவுக்கு வந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஒரு இரவில் ஓருத்தி மகனாய் பிறந்து வேரொருத்தி மகனாய் வளர்ந்த கதை,,,,,, அருமை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்களுக்குப் பிறகு தங்கள் வருகை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கண்ணன் வருகை நெருங்கிக் கொண்டிருக்கே! ஒரு முறையோ இரு முறையோ இங்கே கோகுலாஷ்டமி கொண்டாடுவதைப் பார்த்த குஞ்சுலு வருஷா வருஷம் சரியாக இந்த ஆடி மாதம் லீவுக்கு வரும்போது மட்டும் நினைவாக என்னிடம், பாட்டி, எப்போ உன் குட்டிக் கிருஷ்ணா உம்மாச்சியின் பிறந்த நாள்? என்று கேட்கும். இந்த வருஷமும் வந்ததும் கிருஷ்ணாவை நலம் விசாரித்துட்டு என்னை அழைத்து இதான் கேட்டது. Patti! When are you going to celebrate baby krishna's birthday?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  7. கண்ணன் பிறப்பு கதை மிக அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..