நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 23
செவ்வாய்க்கிழமை
திருக்கயிலாய மலையின் கிழக்கு முகம் ஸ்படிகம்
போலவும், தென்முகம் நீலமணி போலவும்,
மேற்கு முகம் ரத்தினம் போலவும் வடக்கு முகம் தங்கம் போலவும் திகழ்கின்றது..
ஈசனின் உச்சி முகமாகிய
ஈசானம் பளிங்கு நிறம். கிழக்கு முகமான தத்புருஷம் பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம் கருமை, வடக்கு முகமாகிய வாம தேவம் சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம் வெண்மை என ஐந்து நிறங்களுடன் பொலிவதாக வேதங்கள் புகல்கின்றன...
நிறங்களோர் ஐந்துடையாய்!.. - என்று மாணிக்க வாசகர் போற்றுவதும் இதைத்தான்..
திருக்கயிலாய மலையின் புனிதத் தன்மை சிவபுராணம், ரிக் வேதம், ராமாயணம், மகாபாரத இதிகாசங்களில் பேசப்படுகின்றது..
சிவனடியார்களுள்
காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், ஔவையார்,
பெருமிழலைக் குறும்ப நாயனார், சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகிய பெருமக்கள்
திருக்கயிலாயம் சென்று தரிசித்த திருக் குறிப்புகள் சைவத்தின் சிறப்பு..
கணவன் தன்னை தெய்வப் பெண் என்று சொல்லி வணங்கியதைக் கண்டு மனம் பொறுக்காத புனிதவதியார் தன் இளமையை உதறி உதிர்த்து விட்டு எலும்புருவம் வேண்டிப் பெற்றார்..
காரைக்கால் அம்மையார் எனப் பெயர் பெற்று என்புருவத்திலேயே கயிலை மாமலைக்கு ஏகினார்..
கயிலை மாமலையில் கால் வைக்க அஞ்சிய நிலையில் தலையைப் பதித்து கைகளால் ஊர்ந்து சென்றார்..
அவரது பக்தியைக் கண்டு வியந்த அம்மையப்பன் - அம்மையே.. - என விளித்து திரு ஆலங்காட்டில் திருநடன தரிசனம் நல்கி அருள் புரிந்தார்.. அம்மையார் திரு ஆலங்காட்டில் பங்குனி சுவாதியன்று முக்தி எய்தினார்..
தசைகள் தேய்ந்து எலும்புகள் முறிந்து நரம்புகள் அறுந்த நிலையில் நடந்தும் தவழ்ந்தும் உருண்டும் ஊர்ந்தும் வந்து கொண்டிருந்த திருநாவுக்கரசரை மானசரோருவ ஏரிக்கரையில் தடுத்து ஆட்கொண்ட அம்மையப்பன் அந்தத் தடாகத்தில் அவரை மூழ்கச் செய்து -
திரு ஐயாற்றில் கரையேற்றி கயிலாய தரிசனம் அருளி சிவசக்தி வடிவினராக திருக்காட்சி நல்கினார்..
திருநாவுக்கரசர் திருப்புகலூரில் சித்திரை சதயத்தன்று முக்தி அடைந்தார்..
திரு அஞ்சைக் களத்தில் இருந்து சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சேரமான் பெருமாள் நாயனாருடன் திருக்கயிலாயம் செல்கின்றார் என்பதை தனது தவத்தினால் உணர்ந்து கொண்ட பெருமிழலைக் குறும்ப நாயனார் - தனது யோக சக்தியினால் பிரம்மரந்திரம் வழியே கயிலாயம் சென்றடைந்தார்..
இதனை உணர்ந்த ஔவையார் - அகவல் பாடித் துதிக்க விநாயகப் பெருமான் தனது துதிக்கை கொண்டு ஔவையாரை திருக்கயிலையில் சேர்ப்பித்தார்..
சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் ஆடிச் சுவாதியன்று திருக் கயிலையில் சிவ தரிசனம் பெற்று உய்வடைந்தனர்..
திரு ஆரூரில் பரவை நாச்சியாரும் திரு ஒற்றியூரில்
சங்கிலி நாச்சியாரும் இருந்த நிலையிலேயே கற்பூரம் போல காற்றில் கரைந்து கயிலை மாமலையில் கலந்தனர்..
இவையெல்லாம் நமது தொன் மரபில் பயின்று வருபவை..
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவாய் அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 6/55/9
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
அவரவர் ஊபர் ஓலா போடுவது போல ஒரு வாகனம் பெற்று கயிலாயம் சென்று திரும்பியிருந்திருக்கிறார்கள். நமக்கு அப்படி வாய்க்க தவம் செய்யவில்லை...
பதிலளிநீக்குநமக்கும் வாய்ப்பு கிடைக்க பிரார்த்தனை செய்வோம்...
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
கயிலை மலை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமையான தேர்வு. போற்றி தாண்டகம் படித்து கயிலை மலையை தரிசனம் செய்து கொண்டேன்.
பொன்னார் மேனியன் தரிசனம் அருமை.
நேற்று போற்றி தாண்டகம் படித்தோம் கூட்டு வழிபாட்டில்.
கயிலை போன போது தினம் தங்கும் இடங்களில் இதை படிக்க சொல்வார் கயிலைக்கு அழைத்து போனவர்.
கால சூழ்நிலை காரணமாக கயிலை மலை தெரியாமல் போகலாம். இந்த பாடலை தோடர்ந்து பாடி வந்தால் நமக்கு தரிசனம் கிடைக்கும் என்பார். அப்படியே எல்லோரும் பாடுவோம்.
காவாய் கனக திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி.
இன்றைய தரிசனம் மனம் நிறைவு.
காவாய் கனகத் திரளே போற்றி..
நீக்குகயிலை மலையானே போற்றி! போற்றி!.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
ஓம் நமசிவாய வாழ்க வையகம்
பதிலளிநீக்குஓம்.நம சிவாய..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
திருக்கயிலாய மகிமை சிறப்பு
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஓம் நம சிவாய..
கயிலை செல்ல வேண்டும், கங்கோத்ரி செல்ல வேண்டும் என்பது என் நெடுநாளையா ஆசை. ஆனால் முடியுமா..
பதிலளிநீக்குகயிலை தரிசனம் அருமை .
கீதா
// நெடுநாளைய ஆசை. ஆனால் முடியுமா..//
பதிலளிநீக்குஈசன் மனம் வைக்க வேண்டும்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கயிலாய மலையை கண்குளிர கண்டு இறைவனை தரிசித்துக் கொண்டேன். ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய.. 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கயிலாய மலையை கண்குளிர கண்டு இறைவனை தரிசித்துக் கொண்டேன்.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
காணக் கிடைக்காத கைலாய தரிசனம் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குகயிலை மலையானே போற்றி போற்றி.
இரண்டாம் நாள் பரிக்ரமாவின் போது இத்தகைய தரிசனம் கிடைத்தது. பொன்னார் மேனியனைத் தரிசித்துக் கொண்டோம். அன்றைய ப்ரிக்ரமா தான் கடினமான ஒன்று. மிகுந்த மனோ தைரியம் இருந்தாலே மேலே ஏற முடியும். எப்படியோ போயிட்டு வந்தாச்சு. இன்னொரு முறை என நினைக்கக் கூட முடியாது.
பதிலளிநீக்கு