நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 11, 2022

ஸ்ரீ காத்தாயி அம்மன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 25
  ஞாயிற்றுக்கிழமை

இன்றொரு தரிசனம்..

கோயிலா!.. கோயில்களா?.. 
நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள்..
 
கோயில் வளாகத்தின் முன்பாகவே -
சப்பாணி வீரன்பத்ர காளி, முன்னோடியார்,
பட்டவர் - எனும் சந்நிதிகள்..

கூடவே,
காவல் நாய்களுடன் இரண்டு குதிரைகளும் 
ஒரு யானையும்..

அகன்று விரிந்த வேம்பும் நெடிதுயர்ந்த கூந்தல் பனையும் சுற்றுப் புறத்தை அழகாக்குகின்றன..









புற்று



இந்த சந்நிதிகளைக் கடந்ததும் - இரண்டாம் வரிசையில் -
மதுரை வீரன், நாக கன்னி, வீரனார்,
அகோர வீரபத்ரர், காத்தவராயன், சங்கிலிக் கருப்பர் - சந்நிதிகள்..

சங்கிலிக் கருப்பர் சந்நிதிக்குப் பக்க் வாட்டில் -
பேச்சியம்மன், காடேறியம்மன் சந்நிதிகள்..

எல்லா சந்நிதிகளிலும் அழகும் சாந்தமும் ததும்பும் சுதை சிற்பங்கள்..

இவை தவிர,
பட்டவர் சந்நிதிக்கு எதிரில் மேலும் இரண்டு சந்நிதிகள்
திருப்பணி ஆகிக் கொண்டிருக்கின்றன..

சங்கிலிக் கருப்பருக்கு எதிரில்







கோயிலுக்கு வடபுறமாக மிகப்பெரிய திருக்குளம்..

வெளிச் சுற்றில் பரிவார மூர்த்திகளைத் தரிசனம் செய்து விட்டு திருக்கோயிலினுள் நுழைகின்றோம்..

யாளி சிலைகளுடன் கூடிய தூண்கள்.. மண்டபத்தின் அழகு கண்களைக் கவர்கின்றது.. 

தென்புறத்தில் விநாயகர்.. வடபுறத்தில் பாலமுருகன்..

முன்மண்டத்தின் இருபுறமும் சுதை சிற்பங்கள்.. மூலஸ்தானத்தில் கையில் குழந்தையுடன் ஸ்ரீ காத்தாயி அம்மன்..

பச்சைப் பட்டு உடுத்தியவளாக
வெள்ளிக் கவசத்துடன் கண்கொள்ளாக் காட்சி.
தீப ஆராதனையில் கருணை ததும்புகின்றது.. 

விபூதி குங்குமம் பெற்றுக் கொண்டு உள் சுற்றில் வலம் வருகின்றோம்..

கருவறை முன்மண்டபத்தில் கண்ட சுதை சிற்பங்களும் திருச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ளன..

அவற்றின் நடுவே ஸ்ரீ காளி, ஸ்ரீ துர்கா, ஸ்ரீ மாரியம்மன் - ஏக பீடத்தில் காட்சி தருகின்றனர்..


திருச்சுற்றில் வலம் வந்து சந்நிதி முன்பாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தாயிற்று..

மேலும் சில காட்சிகள் - சப்த முனீஸ்வர தரிசனத்துடன் - அடுத்த பதிவில்..

சரி.. 
இந்தக் கோயில் எங்கேயிருக்கின்றது?.
சொல்லவில்லையே!..

செவ்வாய்க் கிழமை பதிவில் விவரம் காணலாம்!..

ஓம் சக்தி ஓம் 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. கூட்டுக குடும்பமாய் எல்லா கடவுளர்களும் ஒற்றுமையாய் ஒரு இடத்தில இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.  அருமையான ஏற்பாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  3. செவ்வாய்க்கிழமை பதிவினைக் காண ஆவலோடு உள்ளேன். கோயிலுக்கு நேரில் சென்ற உணர்வினைத் தந்த பதிவு.

    சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பணிகளுக்கு இடையே அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  4. என் புக்ககம் ஆன கருவிலியில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலுக்குச் சில வருஷங்கள் முன்னர் கும்பாபிஷேகம் செய்வித்துக் கோயிலையும் புதுப்பித்துள்ளார் மாணிக்க வேல் என்னும் காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற நண்பர் ஒருவர். அவருக்கு ஊர் பரவாக்கரையாக இருந்தாலும் காத்தாயிஅம்மன் குலதெய்வம் என்பதால் இங்கே கருவிலிக்கு அருகே கூந்தலூரிலேயே தங்கி இருந்து திருப்பணிகளை நிறைவேற்றித் தினசரி வழிபாடுகளையும் சிறப்பாக நடந்து வருமாறு செய்துள்ளார். அங்கே விநாயகர் இல்லை என்பதால் எங்கள் மைத்துனர் ஸ்வாமிமலையில் விநாயகரைச் செய்வித்து அங்கே எழுந்தருள உதவி செய்திருக்கார். நாங்க தான் ஸ்வாமிமலை போய்ப் பார்த்து ஸ்தபதியிடம் விண்ணப்பித்துக் கொண்டோம். இன்னமும் அந்த விநாயகரை நேரில் பார்க்கலை. பிரதிஷ்டை செய்யப்பட்ட விபரங்கள் காணொளியாகக் கிடைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் விவரமான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  5. என் புக்ககம் ஆன கருவிலியில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலுக்குச் சில வருஷங்கள் முன்னர் கும்பாபிஷேகம் செய்வித்துக் கோயிலையும் புதுப்பித்துள்ளார் மாணிக்க வேல் என்னும் காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற நண்பர் ஒருவர். அவருக்கு ஊர் பரவாக்கரையாக இருந்தாலும் காத்தாயிஅம்மன் குலதெய்வம் என்பதால் இங்கே கருவிலிக்கு அருகே கூந்தலூரிலேயே தங்கி இருந்து திருப்பணிகளை நிறைவேற்றித் தினசரி வழிபாடுகளையும் சிறப்பாக நடந்து வருமாறு செய்துள்ளார். அங்கே விநாயகர் இல்லை என்பதால் எங்கள் மைத்துனர் ஸ்வாமிமலையில் விநாயகரைச் செய்வித்து அங்கே எழுந்தருள உதவி செய்திருக்கார். நாங்க தான் ஸ்வாமிமலை போய்ப் பார்த்து ஸ்தபதியிடம் விண்ணப்பித்துக் கொண்டோம். இன்னமும் அந்த விநாயகரை நேரில் பார்க்கலை. பிரதிஷ்டை செய்யப்பட்ட விபரங்கள் காணொளியாகக் கிடைத்தன.

    பதிலளிநீக்கு
  6. அருமையான படங்களுடன் விவரிப்பு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  7. மிக அழகான் கோயில் போய் பார்க்க் காத்தாயி அம்மன் அருள் புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..