நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 18, 2022

மலர் 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 3 
   ஞாயிற்றுக்கிழமை.

தமிழமுதம்
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் 
வானம் வழங்கா தெனின்.. 19
*
திவ்யதேச தரிசனம்
திருக்கரம்பனூர்
(உத்தமர் கோவில்)

 ஸ்ரீ புருஷோத்தம நம்பி
 ஸ்ரீ பூர்வாதேவி
ஸ்ரீ பூர்ணவல்லி

தல விருட்சம் வாழை
கதம்ப தீர்த்தம்.

புஜங்க சயனம்
கிழக்கே திருமுக மண்டலம்.
உத்யோக விமானம்.

மங்களாசாசனம் 
திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 3


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.. 476
*
திவ்யதேசத் திருப்பாசுரம்



பேரானை குறுங்குடி எம் பெருமானை  திருத்தண்கால் 
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக்  கண்டது தென் அரங்கத்தே.. 1399
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி: நாலாயிர திவ்யப்ரபந்தம்)
*

சிவதரிசனம்


திருத்தலம்
திரு ஆக்கூர்
தான் தோன்றி மாடம்

ஸ்ரீ தான்தோன்றியப்பர்
ஸ்ரீ வாள்நெடுங் கண்ணி

தலவிருட்சம் சரக்கொன்றை
 குமுத தீர்த்தம்

கோச்செங்கட் சோழரால் 
எடுப்பிக்கப்பட்ட மாடக்கோயில்.

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
**

தேவாரம்
கண்ணார்ந்த நெற்றி உடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்சம் உண்டார் போலும்
ஊழித்தீ யன்ன ஒளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே..6/21/8
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 3


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே..
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. தரிசனம் நன்று வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  2. உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம் ...

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணம்.. சரணம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இறைவனின் அழகான படங்களும், அவனுக்கு அடியவர்கள் சூடிய பாமாலைகளும் மனதுக்கு மகிழ்வை தருகின்றன. இறைவன் நம் அனைவரையும் நலமுடன் காத்தருள பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி ..

      நீக்கு
  4. இந்த வருஷம் இன்று வரை காலை ஒலிக்கும் பக்திப்பாடல்களின் சப்தமே கேட்கவில்லை. அரசாங்கத்தின் தடை உத்தரவு போலும். காலை எழுந்து வாசலில் விளக்கு வைக்கையில் ஒரே அமைதி! இங்கே பாசுரங்களும், பதிகங்களும் படித்து நல்ல தரிசனமும் செய்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காலை ஒலிக்கும் பக்திப்பாடல்களின் சப்தமே கேட்க வில்லை..//

      இங்கும் அப்படித்தான் அமைதியாக இருக்கின்றது..

      என்னவோ செய்து விட்டுப் போகட்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா.. ..

      நீக்கு
  5. அருமையான பதிவு.
    ஆக்கூர் அடிக்கடி போன கோயில்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..