நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 2
சனிக்கிழமை.
தமிழமுதம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.. 7
*
திவ்யதேச தரிசனம்
திருக்கோழி (உறையூர்)
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள்
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ப்ரயோக சக்கரத்துடன்
நின்ற திருக்கோலம்,
வடக்கே திருமுகமண்டலம்
பெருமாளின் பக்கத்திலேயே
கமலவல்லி நாச்சியார்
தாயாருக்குத் தனியாக
சந்நிதி இல்லை.
திருமணத் தருண
திருக்கோலம்.
கல்யாண தீர்த்தம்,
சூரியபுஷ்கரிணி.
கல்யாண விமானம்.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
குலசேகராழ்வார்
இரண்டு பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை
பாசுரம் 2
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்..475
*
திவ்யதேசத் திருப்பாசுரம்
கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றமன்ன
பாழியந் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
மாகடல் போன்றுளர் கையில்வெய்ய
ஆழி ஒன்றேந்தி ஓர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா.. 1762
-: திருமங்கையாழ்வார்:-
(நன்றி: நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திருச்சாய்க்காடு
காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்று
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்
ஸ்ரீ குயிலினும் இன்மொழியாள்
தலவிருட்சம் கோரைப்புல்
ஐராவத தீர்த்தம், காவிரி.
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
**
தேவாரம்
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே.. 4/65
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 2
அருணன்இந் திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே..
-: மாணிக்கவாசகர் :-
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
சிறப்பு.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இறையின் படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகு. மார்கழி இரண்டாம் மலரில் அருமையான கோவில் தரிசனங்களும் , பக்தி பரவசமூட்டும் பாடல்களையும், கண்டு, பாடி மகிழ்வடைந்தேன். அனைத்திற்கும் என் மனம் நிறைவான நன்றி. தொடர்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குதரிசனம் நன்று
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஇரண்டாம் மலர் அருமை
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குபையத்துயின்ற பரமன் அடி போற்றி ...
பதிலளிநீக்குபோற்றி.. போற்றி..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ...
ஒவ்வொரு வருஷமும் அழகிய மணவாளர் (இப்போ நம்பெருமாள்) கமலவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்துக்க ரங்கநாயகிக்குக் தெரியாமல் ரகசியமாக இரவுப் பயணம் மேற்கொள்ளுவார். அப்போது நம்ம குடியிருப்பு வளாகத்தின் எதிரே சிறிது நேரம் ஒளிந்து கொண்டு யாரானும் தொடர்கிறார்களா என்று பார்த்துப் பின்னர் அம்மாமண்டபம் வழியாகக் காவிரியில் இறங்கி உறையூர் செல்லுவார். அந்தக் காலத்தில் எந்த மார்க்கத்தில் போனாரோ அதே மார்க்கத்தில் இப்போவும்! திரும்பும்போதும் அப்படியே! கலைந்த ஆடைகளுடனும் தொலைந்த மோதிரத்துடனும் பக், பக் என மனம் அடிச்சுக்க ஓடி வருவார். ரங்கநாயகிக்குத் தெரியாமல் கோயிலுக்குள் நுழைய முடியுமா? மாட்டிப்பார்! பின்னர் பிரணய கலகம் தான். அது முடிந்து மட்டையடி முடிந்து பின்னரே பெருமாளுடன் ரங்கநாயகி சேர்த்தி வைபவம்.
பதிலளிநீக்குஇந்த நிகழ்வினைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கின்றேன்..
நீக்குஅன்பின் வருகையும் தகவலும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
மனதுக்கு நிறைவான தரிசனம்.
பதிலளிநீக்குசாய்க்காடு இறைவா போற்றி.
பதிலளிநீக்குநினைவுகளை மீட்டுகிறது பதிவு.
இப்பதிவு இடும் போது தங்களை நினைத்துக் கொண்டேன்..
நீக்குஅன்பின் வருகையும் தகவலும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..