நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 4
திங்கட்கிழமை.
தமிழமுதம்
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு.. 20
*
திவ்யதேச தரிசனம்
திருவெள்ளறை
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
ஸ்ரீ செண்பகவல்லி
ஸ்ரீ பங்கயச்செல்வி.
தீர்த்தம்
கோயிலுக்குள்ளேயே
ஏழு தீர்த்தங்கள்
நின்ற திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
விமலாக்ருதி விமானம்
மங்களாசாசனம்
பெரியாழ்வார்
திருமங்கையாழ்வார்
24 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
*
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 04
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 477
**
திவ்யதேசத் திருப்பாசுரம்
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ
அமுதினைக் கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின்
அடிமையை அருள் எனக்கு
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்
தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்றணை திருவெள்ளறை நின்றானே.. 1373
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி: நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருவெண்காடு
காசிக்கு நிகரான தலங்களில் ஒன்று..
ஸ்ரீ ஸ்வேதாரண்யேசுவரர்
ஸ்ரீ பிரம்ம வித்யாநாயகி
ஸ்ரீ அகோரமூர்த்தி
ஆல் கொன்றை வில்வம்
சூரிய சந்திர அக்னி தீர்த்தங்கள்
ஐராவதம் வழிபட்ட தலம்.
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
**
தேவாரம்
கூடினான் உமையாள் ஒரு பாகமாய்
வேட னாய் விசயற்கு அருள் செய்தவன்
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்
காடனார் அடியே அடை நெஞ்சமே.. 5/49/6
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே..
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
தஞ்சை ஸ்ரீ சிறை காத்த ஐயனார் கோயிலில்
நேற்று காலை மண்டல பூஜை நடைபெற்றது..
ஓம் ஸ்வாமியே
சரணம் ஐயப்பா..
ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
மண்டல பூஜை படங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குபடங்களும் அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
தரிசனம் நன்று வாழ்க வையகம்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
பாழியன் தோளுடைப் பற்பநாபனை போற்றி பாடுவோம்
பதிலளிநீக்குபாழியந் தோளுடைப் பத்பநாபன் போற்றி..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? இன்றைய மார்கழி பதிவும், பாடலும் அருமை. ஹரியையும், ஹரனையும் தரிசித்ததோடு , ஹரிஹரசுதனின் தரிசனமும் கிடைக்கப் பெற்றேன். மண்டலபூஜை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இறைவனின் அருள் அனைவருக்கும் குறைவற கிடைக்கப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// மண்டலபூஜை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இறைவனின் அருள் அனைவருக்கும் குறைவற கிடைக்கப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
நீக்குநாளும் நலம் தான்..
தங்கள் அன்பினுக்கும் பிரர்த்தனைக்கும் நன்றி..
அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இனறு கூடவே ஐயப்ப சுவாமியும்! படங்களும் இன்றைய மலரும் நன்று.
பதிலளிநீக்குகீதா
அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குஹரி,ஹரன், ஹரிஹர சுதன் ஆகியோரின் தரிசனம் கிடைக்கப் பெற்றது. பாசுரங்களும், பதிகங்களும் படித்து மனமும் நிறைவுற்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி. எங்கே கோமதி அரசுவையும் காணோமே? உடல் நலம் தானே?
பதிலளிநீக்கு//எங்கே கோமதி அரசுவையும் காணோமே?..//
நீக்குஅவர்கள் கோவையில் இருப்பதாக பத்து நாட்களுக்கு முன்பு சொல்லியிருந்தார்கள்..
// பாசுரங்களும், பதிகங்களும் படித்து மனமும் நிறைவுற்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி. //
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..//
'ஆழிமழைக் கண்ணா ' 'திருவெண்காடு ' தல தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்கு
நீக்கு//தரிசனம் பெற்றோம்.//
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி
திருவெண்காடு அகோரமூர்த்தி தரிசனம் அருமை.
பதிலளிநீக்குதிருவெண்காடு என்றதும் கீதா சாம்பசிவத்திற்கு என் நினைப்பு வந்து விட்டது போலும். நன்றி கீதா.