நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 10
ஞாயிற்றுக்கிழமை.
தமிழமுதம்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.. 68
*
திவ்யதேச தரிசனம்
திருபுள்ளபூதங்குடி
ஸ்ரீ வல்வில் ராமன்
ஸ்ரீ பொற்றாமரையாள்
தலவிருட்சம் புன்னை மரம்
ஜடாயு தீர்த்தம்
கிழக்கே திருமுக மண்டலம்.
புஜங்கசயனம்.
சோபன விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
10 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.. 483
*
திவ்யதேசத் திருப்பாசுரம்
மையார் தடங்கண் கருங் கூந்தல்
ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த
நேமி அங்கை மாயன் இடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால்
நாரை சென்றணையும்
பொய்யா நாவின் மறையாளர்
புள்ளம்பூதங்குடிதானே..1352
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திருப்பழனம்
ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர்
பெரிய நாயகி
தலவிருட்சம் வாழை
வில்வம்
தீர்த்தம் காவிரி
குபேரன் வணங்கிய திருத்தலம்.
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
*
தேவாரம்
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை இருந்தார் தாமே
பிறர்க்கென்றுங் காட்சிக்கு அரியார் தாமே
ஊராரு மூவுலகத்து உள்ளார் தாமே
உலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத்து இடையார் தாமே
பழனநகர் எம்பிரானார் தாமே.. 6/36/8
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 10
புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.. 377
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
திருப்பள்ளியெழுச்சி இன்றுடன் நிறைவு
பெறுகின்றது..
**
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
ஸ்ரீ பொற்றாமரையாள் சகித ஸ்ரீ வல்வில் ராமன் மலரடி பணிவோம்.
பதிலளிநீக்கு// ஸ்ரீ பொற்றாமரையாள் சமேத ஸ்ரீ வல்வில் ராமன் மலரடி பணிவோம்..//
நீக்குஅன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஓம் நம சிவாய
நீக்குசிவாய நம ஓம்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஜி..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
ஆபத்சகாயேஸ்வரர் வரும் ஆபத்துகளிலிருந்து எல்லோரையும் இரட்சிக்கப் பிரார்த்திப்போம்!
பதிலளிநீக்குகீதா
ஆபத்சகாயேஸ்வரர் எல்லோரையும் ஆபத்துகளிலிருந்து இரட்சிக்கட்டும்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
ஹரி ஓம் .சிவாயநமக.
பதிலளிநீக்குஹரி ஓம்.. நம சிவாய..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
திருப்புள்ளப்பூதங்குடிக்குப் போனோமா என்னனு நினைவில் இல்லை.. என்றாலும் வல்வில் ராமரின் தரிசனம் கிடைத்தது. நன்றி.
பதிலளிநீக்குGeetha Sambasivam "மலர் 10” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
பதிலளிநீக்குதிருப்புள்ளப்பூதங்குடிக்குப் போனோமா என்னனு நினைவில் இல்லை.. என்றாலும் வல்வில் ராமரின் தரிசனம் கிடைத்தது. நன்றி.
அன்பின் வருகையும்
நீக்குதரிசனமும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியக்கா..