நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 27
வெள்ளிக்கிழமை
இன்றைய பதிவில்
ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிச் செய்த
அருணகிரி திருப்புகழ்
தலம்
அருணகிரி
திரு அண்ணாமலை
தனன தனனா ... தனதான
இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ ... அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா ... னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் ... மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா ... கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா ... கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா ... கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் ... விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் ... பெருமாளே..
-:ஸ்ரீ அருணகிரிநாதர்:-
நன்றி: கௌமாரம்
பாடலின் விளக்கம் :
வள்ளி தேவயானை ஆகிய, தேவியர் இருவர் மீதும்
நீ கொண்ட ஆசையோ?
அல்லது உனது திருக் கோயில்களில் விதம் விதமாக நடத்தப்படும் திருவிழாக்களின் ஆரவாரங்களோ?..
வேறு என்னென்ன நிகழ்வுகளோ?.. (எனக்குத்
தெரியாது)
உன்னை அணுக முடியாத முனிவர், பிரமன், மால், தேவர், மெய்யடியார் -
இத்தனை பேரும் முறையிடும் ஒலிகள் செவியில் விழாதபடி (இருக்கும் நிலையில்)
நான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறிக் கொண்டு இருப்பது பற்றி,
யாரேனும் ஒருவர் அன்புடன்
வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ?..
உனது பாதத்திலுள்ள தூசியானது பூமியில் உள்ள மலைகளுக்குச் சமம்..
அப்படியென்றால் உனது திருவருள் எத்தனை
பெரிதோ?.. (யான் அறியேன்).
பரம குருமூர்த்தியாகவும்
அணுவில் அசைவு ஏற்படுத்துபவனாகவும்
காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களையும் படைக் கலன்களாக உடையவனே,
அனைத்து வடிவங்கள் ஆகிய பின்னும் பழமையான வடிவத்தில் திருக்கோலம் கொண்டு அமர்ந்திருக்கும் வேலவனே,
திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புகுந்த நிலையில்
இருளாகி நின்ற சூரபத்மனின் மீது
உனது வேலாயுதத்தை விடுத்தவனே,
இவ்வடியேனுக்கு ஏற்பட்ட கொடிய நோயைத் தூளாக்கியவனே,
திரு அண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே!..
ஸ்ரீ அருணகிரியார்
திருவடிகள் போற்றி
கந்தா சரணம்
கடம்பா சரணம்
கார்த்திகை மைந்தா
சரணம் சரணம்..
***
படித்து மகிழ்ந்தேன். முருகா சரணம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
நீக்குமுருகா.... முருகா.... வாழ்க வையகம்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
முருகா...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
அருணகிரிநாதர் என்று குறிப்பிடுவதுதான் வழக்கம். வெறும்ன அருணகிரி என்று எழுதியுள்ளது என்னவோபோல் இருக்கிறது.
பதிலளிநீக்குபதிவில் அருணகிரி என்று சொல்லப் பட்டிருப்பது ஊர்ப் பெயர்..
நீக்குதிரு அண்ணா மலைக்கு வழங்கப்படும் பெயர்களுள் ஒன்று..
திருப்புகழ் பாட்டிற்குக் கீழாக ஸ்ரீ அருணகிரி
நாதர் என்று குறிப்பிட்டிருக்கின்றேனே!..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
அவனடியே சரணம் .வணங்குகிறோம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குகருத்துரைக்கு நன்றி..
திருப்புகழ் பாடலும் விளக்கமும் அருமை.
பதிலளிநீக்குகந்தா சரணம்.
கந்தா சரணம்
நீக்குமுருகா சரணம்..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கு நன்றி..
கந்தா சரணம், ஷண்முகா சரணம். திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்குக் கந்தன் அருளிய இடத்தைப் பார்க்கும் பேறு கிட்டியது ஒரே ஒரு முறை. பின்னர் போக வாய்க்கவில்லை.
பதிலளிநீக்குநானும் இரண்டு முறை சென்றிருக்கின்றேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கு நன்றியக்கா..
திருப்புகழுக்கும் விளக்கத்துக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றியக்கா..