நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 27, 2022

சஷ்டி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 10
வியாழக்கிழமை
சஷ்டி மூன்றாம் நாள்


கனகசபைத் திருப்புகழ்

தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ... தனதானா

கனகசபை மேவு மெனதுகுரு நாத 
கருணைமுரு கேசப் ... பெருமாள் காண்

கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் ... பெருமாள் காண்

வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் ... பெருமாள் காண்

விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் ... பெருமாள் காண்

சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் ... பெருமாள் காண்

சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் ... பெருமாள் காண்

இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் ... பெருமாள் காண்

இணையிலிப தோகை மதியின்மக ளோடு 
மியல்புலியுர் வாழ்பொற் ... பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி : கௌமாரம்


ஏ.. மனமே!..
பொன் அம்பலமாகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் 
நடனம் புரிகின்ற எனது குருநாதனாகிய
கருணை நிறைந்த முருகேசப் பெருமானைக் காண்..

பொன்னிறமுடைய நான்முகன்
அபயம் என்று  சரணடைய,
நான்முகனின் பிழை நீங்குதற்காகத்  தாமரை போன்ற கரத்தினால் தலையில் குட்டிய ஜோதிப் பெருமானைக் காண்..

அவன் புகழைக் காதாரக் கேட்டு உளமாறத் துதிக்கும்
அடியார்களிடம் ஆர்வம், மகிழ்ச்சி, அன்பு அனைத்தும்
கொண்டு இணைந்து விளையாடுகின்ற  பெருமானைக் காண்..

நான்முகன், முனிவர்கள்,தேவர்கள், அருணாசலேஸ்வரர், மற்றும் தூய்மையான காற்றினால் வாழும் உயிர்ப் பொருள் எல்லாமும் ஆகி விளங்கும் பெருமானைக் காண்..

ஜானகியின் மணவாளன் - ஸ்ரீ ராமனின் மருமகன் என்று, நூற்றுக் கணக்கான முறை வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமானைக் காண்.

அடைக்கலம் அருள்பவளாகிய சிவகாமி - போர்க் குணமுடைய அசுர குலத்தைச் சங்கரித்தவள்,
அவள் தந்தருளிய முருகன் என்னும் திருப்பெயருடைய  பெருமானைக் காண்.

இனிதாகிய  தினைப் புனத்தில் அமுதை ஒத்த குறமகள் வள்ளியுடன் அன்பு நிறைந்த காதல் கொண்ட பெருமானைக் காண்..

ஒப்பற்ற ஐராவதம் வளர்த்த மயிலாகிய  அறிவு நிறைந்த தேவயானை எனும் நங்கையுடன் திருமிகு புலியூரில் (சிதம்பரத்தில்) வாழ்கின்ற அழகின் பெருமாளைக் கண்ணாரக் காண்பாயாக!.. 
**
அன்பின் ஸ்ரீராம் அவர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.. 
அவர் பூரண நலம் அடைவதற்கு 
வேண்டிக்கொள்வோம்..

சிக்கலைத் தீர்த்து வைப்பாய் 
ஜகம் புகழ் சிக்கல் சிங்கார வேலா!..
*
அறுமுகனின் அருட்கோலங்கள் ..
நன்றி : Fb

சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலன்



கந்தா சரணம்
கடம்பா சரணம்
கார்த்திகை மைந்தா
சரணம்.. சரணம்..
***

14 கருத்துகள்:

  1. முருகா சரணம். சரணம் அடைந்திட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம். சரணம்..

      கவலை வேண்டாம்..
      கந்தனின் கை வேல் காத்து நிற்கும்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்கள் அருமை. சிக்கலை தீர்த்து வைக்கும் சிக்கல் சிங்காரவேலனை தரிசித்துக் கொண்டேன். திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. படித்து பரவசமானேன்.

    நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் உடல்நலக் குறைவும் வெகு விரைவில் அகன்று அவர் பரிபூரண நலமடைந்திட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவர் பரிபூரண நலமடைந்திட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  3. கலியுக தெய்வம் கந்தா சரணம்.. கருணையின் வடிவம் கடம்பா சரணம்.
    மலையெனப் பெரும் துயர் வந்திடும்போது மாயோன் முருகா எனச் சரண்டைவோம்.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம்ஜி நலம் பெற எமது பிரார்த்தனைகள்.

    முருகா சரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீராம்ஜி நலம் பெற பிரார்த்தனைகள்..//

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  5. திரு ஸ்ரீராம் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஸ்ரீராம் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.//

      நன்றி ஐயா நன்றி..

      நீக்கு
  6. சிக்கல் சிங்காரவேலன் அனைவரையும் நலமாக வைக்க வேண்டும்.
    திருப்புகழை பாடி வேண்டிக் கொண்டேன்.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிக்கல் சிங்கார வேலன் அனைவரையும் நலமாக வைக்க வேண்டும். //

      அன்பின் வருகைக்கு நன்றி.. நன்றி..

      நீக்கு
  7. என்ன ஆச்சு ஸ்ரீராமுக்கு? பழைய கதையா? புதுசா? எதுவாக இருந்தாலும் உடனடி கவனிப்புத் தேவை. கனகசபைத் திருப்புகழும் கேட்டதே இல்லை. பகிர்வுக்கு நன்றி. தீக்ஷிதர்கள் கூடச் சொன்னதாக நினைவிலும் இல்லை. :( குமரன் கோயில் அங்கே தனியா இருக்கு. போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..