நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 08, 2022

ஸ்ரீ மஹாலக்ஷ்மீம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று புரட்டாசி 21 
மூன்றாம் சனிக்கிழமை

இன்றைக்கு
ஸ்ரீ ரங்க மனோகரியாகிய
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தரிசனம்..

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

பத்ம புராணத்தில்
உள்ள இந்த ஸ்லோகம் 
இந்திரனால் துதிக்கப்பட்டது.


நமஸ்தேஸ்து மஹாமாயே 
ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
ஷங்க சக்ர கதா ஹஸ்தே 
மஹாலக்ஷ்மி நமஸ்துதே.. 1

படைப்பின் மூல காரணமாக இருப்பவளும், ஸ்ரீ பீடத்தில் தேவர்களால் வணங்கப்படுபவளும், அழகிய திருக் கரங்களில் சங்கு, சக்கரம், கதை இவற்றைத் தாங்கியிருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகின்றேன்..

நமஸ்தே கருடாரூடே 
கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி 
மஹாலக்ஷ்மி நமஸ்துதே.. 2

கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகின்றேன்..


ஸர்வக்ஞே சர்வ வரதே 
ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்க ஹரே தேவி 
மஹாலக்ஷ்மி நமஸ்துதே.. 3

அனைத்தையும் அறிந்தவளும், அனைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்கள் , துக்கங்கள் இவற்றை அழிப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகின்றேன்.. .

ஸித்திபுத்தி ப்ரதே தேவி 
புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி 
மஹாலக்ஷ்மி நமஸ்துதே.. 4

வெற்றியுடன் நல்ல முறையில் வாழ்வதற்கான புத்தியைத் தருபவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளது பாதக் கமலங்களை அடைவதற்கு அருள்பவளும், மந்திரங்களின் சூட்சுமமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகின்றேன்..


ஆத்யந்த ரஹிதே தேவி 
ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸ்ம்பூதே 
மஹாலக்ஷ்மி நமஸ்துதே.. 5

ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கும் ஆதாரமாக இருப்பவளும்,யோகத்தில் பிறந்தவளும், யோகத்தில் இணைந்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகின்றேன்..

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹா ரௌத்ரே 
மஹா சக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி 
மஹாலக்ஷ்மி நமஸ்துதே.. 6

அனைத்திலும் சூட்சும சக்தியாக விளங்குபவளும், துஷ்டர்களுக்குப் பயங்கர ருத்ரையாகத் திகழ்பவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும் அனைத்து பாபங்களையும அழிப்பவளுமாகிய மஹாலக்ஷ்மியை வணங்குகின்றேன்..


பத்மாஸன ஸ்திதே தேவி 
பரப்பிரஹ்ம ஸ்வரூபினி
பரமேஸி ஜகன்மாத: 
மஹாலக்ஷ்மி நமஸ்துதே.. 7

தாமரை ஆசனத்தில் பரப்ரம்மமாக  ப்ராம்ணியாக விளங்குபவளும், இப்பிரஞ்சத்தின்  தாயாக  விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகின்றேன்..

ஸ்வேதாம் பரதரே தேவி 
நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாத: 
மஹாலக்ஷ்மி நமஸ்துதே.. 8

தூய்மையான வெள்ளை உடையுடன் பலவிதமான ஆபரணங்களை அணிந்திருப்பவளும்,
பிரபஞ்சத்தில் தாய்க்குத் தாயாக காப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகின்றேன்..


மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் 
ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் 
ப்ராப்னோதி ஸர்வதா

எவர் ஒருவர் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கின்றார்களோ அவர்கள் சகலவிதமான செல்வங்களையும் பெற்று ராஜ்ய லக்ஷ்மியாகிய அன்னையின் நிழலில் வாழ்வார்கள்..

(படங்களை வழங்கியோர் 
நன்றி : ஸ்ரீரங்க அரங்கம் Fb)


ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:
***

8 கருத்துகள்:

  1. இன்னிக்கு மூன்றாவது சனிக்கிழமையோ? கொஞ்சம் சரி பார்த்துடுங்க. மாசம் பிறந்ததைக்கணக்கெடுத்தால் நான்காம் சனி என்பது சரியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று மூன்றாவது சனிக்கிழமைதான்.

      //புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை: தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் அலை மோதும் மக்கள் கூட்டம்//
      என்று தினதந்தி பேப்பரில் படித்தேன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அன்னை மஹாலக்ஷ்மியின் அருள் மிகும் தெய்வீக. படங்களை பதிவிலும், காணொளியிலும் தரிசித்து கொண்டேன். இந்த மஹாலக்ஷ்மியின் அஷ்டக ஸ்தோத்திரம் தினமும் மாலை விளக்கேற்றியவுடன் சொல்லி அன்னையை வணங்குவேன். இப்போது என் பேத்திக்கும் சொல்லித்தந்து அவளும் என்னுடன் சொல்வாள். ஸ்லோகம், மற்றும் அதன் விளக்கங்கள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. சிறிய வயதிலேயே பாட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்து மனப்பாடமான ஸ்லோகம் இது. உங்கள் விளக்கம் அருமை துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாடுவோம் சிறு வயது முதல்.
    பாடலுக்கு விளக்கம் அருமை.
    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  5. அன்னை மகாலட்சுமி தோத்திரம் விளக்கங்களுடன் படித்தோம். மகாலட்சுமியின் அருளை வேண்டி வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..