நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று புரட்டாசி 26
வியாழக்கிழமை
குரு வாரக் கிருத்திகை
சங்கடஹர சதுர்த்தி
இன்றைய பதிவில்
ஸ்ரீ அருணகிரி நாதர்
அருளிச் செய்த அற்புதத்
திருப்புகழ்
தந்ததனத் தானதனத் ... தனதான
தந்ததனத் தானதனத் ... தனதான
உம்பர்தருத் தேனுமணிக் ... கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் ... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ... பலகாலும்
என்றனுயிர்க்கு ஆதரவுற் ... றருள்வாயே..
தம்பி தனக்காக வனத் ... தணைவோனே
தந்தை வலத்தால் அருட்கைக் ... கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் ... பொருளோனே
ஐந்து கரத்தானை முகப் ... பெருமாளே..
விண்ணுலகிலுள்ள கற்பக மரம், காமதேனு, சிந்தாமணி
இவைகளைப் போல் வாரி வழங்குதற்கு உள்ளம் நெகிழ்ந்து,
ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற உணர்வு என் உள்ளத்தில் ஊறி - இன்பச் சாற்றினைப் பலகாலம் நான் அருந்தும்படி எனது உயிருக்கு ஆதரவாக இருந்து அருள் புரிவாயாக..
தம்பி முருகனின் பொருட்டு தினைப் புனத்திற்கு வந்தவனே..
தந்தையாகிய சிவ பெருமானை வலம் செய்த காரணத்தால் அருளப் பெற்ற கனியினை உடையவனே..
அன்பர்களுக்குப் பெரும் பொருளாக நிலைத்து
விளங்குபவனே..
ஐந்து திருக் கரங்களையும் யானை முகத்தையும் உடைய விநாயகப் பெருமானே..
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 22
-: கந்தலங்காரம் :-
வண்டுகள் மொய்க்கும் பூங்கொத்துகளைக் கூந்தலில் சூடியுள்ள வள்ளி நாயகியை விரும்பி மணம் செய்து கொண்டவனே..
முத்தமிழால் வசை பேசியவருக்கும்
(பேசுபவர்க்கும்)
நல்வாழ்வினை நல்குபவனே..
கொடிய மத யானையைப் போன்ற வலிமையையும் இருபது கரங்களையும் உடையவனாகிய இராவணனின் பத்துத் தலைகளும் அறுபட்டு
வீழ்வதற்காக ஸ்ரீராமன் என்று அவதரித்து கணை தொடுத்து அருளிய ஸ்ரீ ஹரி நாராயணனின் திருமருகனே..
உமையாள் பெற்றெடுத்த செல்வனே..
அரிதினும் அரிதான அழகனே!..
முருகா சரணம்
அழகா சரணம்
முத்துக் குமரா
சரணம்.. சரணம்..
***
முருகனை, மால் மருகனை கந்தக் கடம்பனை சரணடைவோம்,
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
நீக்குசிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பதிவு. திருப்புகழ் பாடலும், கந்தலங்கார பாடலும், அருமை. பாடி மகிழ்ந்தேன். அதன் விளக்கமும் தெளிவாக தந்தமைக்கு நன்றி. அண்ணன் தம்பி இருவரின் பாச மிகுந்த படங்களை தரிசித்துக் கொண்டேன். முருகன் தம்பதி சமேதராக காட்சியளிக்கும் படத்தையும் கண்டு மனதாற வணங்கி கொண்டேன். அருள் மிகும் அண்ணன் கணபதியும், அவன் தம்பி முருகனும் நம் வினைகள் யாவற்றையும் நீக்கி காத்தருள வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டேன். 🙏. அழகான பாசம் நிறைந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// அருள் மிகும் அண்ணன் கணபதியும், அவன் தம்பி முருகனும் நம் வினைகள் யாவற்றையும் நீக்கி காத்தருள வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டேன். //
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கு நன்றி
அருமை....சகோதரர்கள் இருவருக்கும் சரணம். முதல் படம் மிக அழகு ரசித்துப் பார்த்தேன், துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
முன்பெல்லாம் இப்படியான திருவுருவப்படங்களை வைத்திருக்கும் மரபு இருந்தது..
நீக்குஇப்போதெல்லாம் காண முடிவதில்லை..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ
ஆமாம் அண்ணா...தேடினால் அவுட் டேட்டட் என்று சொல்லிவிடுவார்கள்!!!
நீக்குகீதா
முருகன் துணை வாழ்க வையகம்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
அண்ணன் தம்பி இருவரின் பாதம் பணிந்தோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் .. கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகார்த்திகை, சங்கடஹர சதுர்த்தியில் நல்ல பதிவு. பாடலும் விளக்கமும் படித்து வணங்கி கொண்டேன். படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குகருத்துரைக்கு நன்றி..
ஐந்து கரத்து ஆனை முகத்தவனையும், மால்மயிலோனையும் துதிப்போம்.
பதிலளிநீக்குதுளசிதரன்