நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 17
செவ்வாய்க் கிழமை
ஸ்ரீ சரஸ்வதி பூஜை..
அனைவருக்கும்
அன்பின் இனிய
நல்வாழ்த்துகள்
**
இன்றைய பதிவில்
ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள்
அருளிச்செய்த
சகல கலாவல்லி மாலை
இன்று
சகலகலாவல்லி மாலையின் பத்துப் பாடல்களையும் பாடி, ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட அன்னையின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை…
வெண்தாமரைக்கு அன்றி நின் பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ
சகமேழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.. 1
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.. 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ உளங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.. 3
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்த ருள்வாய் வட நூற் கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர் செந்நாவில் நின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.. 4
பஞ்சப்பி இதந்தரு செய்யபொற் பாதபங் கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் சகல கலாவல்லியே.. 5
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலும் அன்பர்
கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.. 6
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும் என்பாற்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய் உளங் கொண்டு தொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதந் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே.. 7
சொல்விற் பனமும் அவதான முங்கவி சொல்ல வல்ல
நல்வித்தை யுந்தந்து அடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ் செல்வப் பேறே சகல கலாவல்லியே.. 8
சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.. 10
இத்துடன்
கம்பர் அருளிச்செய்த
சரஸ்வதி அந்தாதியின்
பாடல்கள் சில..
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை –தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா(து) இடர்.
படிகநிறமும் பவளச் செவ் வாயும்
கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி.
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல்
தார்தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதியும் போருகத் தாளை வணங்குதுமே.. 1
வணங்கும் சிலைநுத லும்கழைத் தோளும் வன முலைமேல்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமனன்பால்
உணங்கும் திருமுன்றி லாய்மறை நான்கும் உரைப்பவளே.. 2
இயலா னதுகொண்டு நின்திரு நாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின் றேன் இந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமக ளேநின் திருவருளுக்(கு)
அயலா விடாமல் அடியேனை யும்உவந்(து) ஆண்டருளே.. 4
அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத்(து) அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோது நாதனும் தானுமெப் போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண்மல ராள்என்னை யாளும் மடமயிலே.. 5
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா..
***
கல்விச்செல்வங்களை அள்ளி அள்ளி தரட்டும் சரஸ்வதி தேவி. இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
சகலகலாவல்லி மாலையை இன்றுதான் படிக்கிறேன். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடவேண்டும்.
பதிலளிநீக்குபடங்கள் அருமை. சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி நெல்லை..
வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநல்வாழ்த்துகளுடன்
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குஅன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
சகலகலாவல்லி பாடலையும், சரஸ்வதி அந்தாதியும் படித்து வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குசரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவும் பாடலும் அருமை. தங்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். இனிய பாடல்களை பாடி சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
// சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொண்டேன்.//
பதிலளிநீக்குஅன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
முன்னெல்லாம் சகலகலாவல்லி மாலையைக் கட்டாயமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் நினைப்போடு சரி! :( இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குசகலகலாவல்லி மாலை நவராத்திரி காலத்தில் பாடசாலையில் படிக்கும் போது அனைவரும் சேர்த்து ஓதுவோம்..
பதிலளிநீக்கு