நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
யானை வழித்தடத்தில்
கொடூரமான மின்வேலி அமைக்கப்பட்டிருப்பது பெருந்தவறு.. எனினும் பாதை மாற்றப்பட்ட ஜீவன்களுக்காகப் பதறித் துடிக்கும் தாய் மனம்..
தான் யாரென்று தெரிந்தும்
அன்பினில் இலங்கும் ஆண்டாள்..
சொன்ன சொல்லைக்
கேட்டு நடக்கின்ற
செல்வங்கள்..
இதுவும் அப்படியே..
தன்னை அழைப்பதைக்
கேட்டதும்
வந்து நிற்கின்ற லலிதா..
விபத்தினால் கால்கள் முறிந்த நிலையிலும்
மனம் தளராது பொதுத் தேர்வை எழுதியுள்ள சிந்து..
ஆனால்,
எந்த ஒழுங்கிலும்
சம்பந்தப்படாத
பிறவிகள்..
மேலே தினமலர் நாளிதழின்
செய்தித் துணுக்குகள்..
காணொளிகள்
Fb ல் வந்தவை..
விழி திறப்பதற்கும்
மனம் திருந்துதற்கும்
மது அழிவதற்கும்
வழி இருக்கின்றதா..
தெரியவில்லை..
ஆனாலும்,
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்!..
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
மின்வேலியை கவனமுடன் கடக்கும் யானைகள் அற்புதம். அவர்களுக்காக ம்மன்சாரத்தை நிறுத்திய உள்ளங்கள் வாழ்க. இன்றைய காணொளிகள் யாவுமே சிறப்பு.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
மகிழ்ச்சி.. நன்றி..
மனித நேயம் காப்போம்..
காணொளிகள் ஒவ்வொன்றாக பார்க்க வேண்டும். முதல் காணொளி பார்த்தேன். இரண்டாவது - ஆகா... எங்கள் ஊர் ஆண்டாள்!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நீக்குஅன்பின் வழி காப்போம்..
சிறப்பான காணொளிகள். ஆண்டாள் பற்றிய காணொளி இரண்டு ஆண்டுகள் முன்னர் வாட்சப்பில் சுற்றியது. பிராணிகளின் பெருந்தன்மை மனிதர்களுக்கு வராது.
பதிலளிநீக்குபிராணிகளின் பெருந்தன்மை மனிதர்களுக்கு வராது என்றாலும் நிறைய பேர் தங்களது அன்பினால் உயர்ந்து நிற்கின்றனர்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
காணொளிகள் சிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குபடங்களும், காணொளிகளும் சிறப்பு ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குஆனைகள் காணொளி அவை கடந்ததும், மக்கள் அவற்றிற்காகப் பரிதாபப்பட்டு பேசிக்கொள்ளும் உரையாடல்கள் மனதை நெகிழ்த்திவிட்டது. மனம் மகிழவும் செய்தது. இப்படியான நல்ல நெஞ்சங்கள் இருக்கிறார்கள் என்பது மனதை மிகவும் மகிழ்வித்தது. கடைசியில் அவற்றிற்குப் புரிகிறதோ இல்லையோ இஅவர்கள் இங்கிருந்து அவற்றிற்கு அப்படி இல்ல அங்க போகாத இங்கு ...என்று சொல்வது ஹையோ.....மனம் பதைபதைத்தது ஆனைச் செல்லங்கள் கடந்துவிட வேண்டும் என்று. மக்கள் வாழ்க!!!! குட்டியுடன் சென்ற விதம் கண்கொள்ளாக்க்காட்சி!!! ஒரு த்ரில்லர் பார்த்தது போன்று ஆனது!
பதிலளிநீக்குஇப்படி மின் வேலி அமைப்பார்களா ஹூம். ஆனைச்செல்லங்கள் பாவம்
கீதா
முதல் காணொளியைக் கண்டு என் மனமும் பரிதவித்தது.. ஆனைக் குடும்பம் அந்த வேலியைக் கடந்ததும் தான் நிம்மதி வந்தது..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
ஆண்டாள் செல்லக் குட்டி என்ன அழகு! அவள் பேசுவதை நான் ரசித்துப் பார்த்தேன். மீ ண்டும் பார்த்தேன். என்ன அழகாகப் பேசுகிறாள் தன் உணர்வை!! செல்லக் குட்டிக்குச் சுத்தி போடணும்!
பதிலளிநீக்குகீதா
ஆண்டாள் எப்போதுமே அழகி..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
முதல் படம் அழகு.... அந்த மாணவிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் சொல்வோம்.
பதிலளிநீக்குகூப்பிட்டதும் வரும் லலிதா குட்டி! ரசித்துப் பார்த்தேன் துரை அண்ணா.
மேலே உள்ளவற்றிற்கும் கீழே உள்ளவற்றிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்க!! என்ன சொல்ல!?
கீதா
மேலே உள்ளதற்கும் கீழே இருந்தவைகளுக்கும் இருந்த வித்தியாசங்கள் தான் இந்தப் பதிவுக்கு அடிப்படை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
காணொளிகள் அனைத்தும் ரசித்தேன். முதல் காணொளியில் மக்களின் பரிதவிப்பும், முதல் படங்கள், காணோளிகள் சொல்வதும், அதன் பின் வரும் செய்திகள் சொல்லுவதற்கும்தான் எத்தனை வேறுபாடுகள். ஒரே சமூகத்தில் அப்படியும் இப்படியும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
முதல் காணொளிதான் அருமை.. நெகிழ்ச்சி.. பரிதாபம் மேலிட்டது..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்...
காணொளிகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபேசும் தெய்வங்கள். பேஸ்சை புரிந்து கொண்டு பாதையை கடப்பது அருமை. லலிதா ஓடி வருவதும், ஆண்டாள் உரையாடுவதும் அருமை.
அந்த நாட்களில் எங்கள் வீட்டுப் பசுவும் இங்கே வா.. என்று குரல் கொடுத்ததும் ஓடி வரும்.. தனியாக பெயர் எல்லாம் கிடையாது.. பொதுவாக பானு..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
நல்லதை பாராட்டுவோம். வேண்டாத பழக்கத்திற்கு ஆட்பட்டு இருக்கும் குழந்தைகள் திருந்த பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஅப்படியே ஆகட்டும்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க நலமுடன்..