நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 21, 2022

ஏழூர் விழா 4

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஏழூர் பல்லக்குகள் இன்றும் தொடர்கின்றன.. 
(விடாது கருப்பு!..  என்பது உண்மை தானோ!..)

என்ன செய்வது?... எல்லாப் படங்களையும் நீங்கள் பார்த்துத் தான் ஆக வேண்டும்!..













இன்றைய பதிவில்,
திருநெய்த்தானம் கோயிலுக்குள் பல்லக்குகள் கடைக் காலில் நிறுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்..














பல்லக்கு திருப் பாதந்தாங்கிகளைப் பதிவில் சேர்க்க இயலாமல் போனது மிகவும் வருத்தம்.. எதிர்வரும் காலத்தில் அவர்களையும் பதிவில் சேர்ப்பதற்கு ஐயாறப்பர் அருள் புரிய வேண்டும்...





நண்ணியொர் வடத்தி னிழல் நால்வர்முனி வர்க்கன்று
எண்ணிலி மறைப் பொருள் விரித்தவர் இடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்த கிலொடு உந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண் திருவையாறே.. 2/32/4..
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. படங்களை பெரிதாக்கிப் பார்க்கும்போதுதான் அதன் அருமை தெரியும்.  நான் அப்படித்தான் பார்க்கிறேன்.  படங்கள் யாவும் சிறப்பு.  ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
  2. தெளிவான படங்கள்...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் நல்ல தெளிவுடன் அழகாக உள்ளது. நான் ஒவ்வொரு படங்களையும் பெரிதாக்கிப் பார்க்கிறேன். ஒவ்வொரு பல்லக்கில் வீற்றிருக்கும் இறைவனை தரிசித்து கொண்டேன். ஒவ்வொரு பல்லக்குகளின் அழகும் மனதை கவர்கிறது. பக்கவாட்டில் இருக்கும் நால்வரின் ஓவியங்களும், வெண்சாமரம் வீசும் அழகான பெண்களின் பதுமைகளுமாக ஒவ்வொரு பல்லக்கும் அழகுடன் ஜொலிக்கிறது. இவை அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே பார்க்கத் தந்தமைக்கு நாங்கள்தான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் அருமை.
    பல்லக்கு அழகுதான். கடைசி படம் அருமை. கோபுரமும், பல்லக்கும். மாட்டு வண்டியில் வந்த பல்லக்கும் அழகு.
    நேரில் காணமுடியாதவர்களுக்கு நேரில் பார்த்த உணர்வை தருகிறது படங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஏழுர் பல்லக்கு விழா - தங்கள் தளம் வழி படங்கிளையாவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. எல்லாப் படங்களும் தெளிவாகவும் நன்றாக வந்திருக்கின்றன. திருவிழாவை நேரில் பார்க்க இயலாத என் போன்றோர் இப்படிப் பார்த்துத் தான் மகிழ்ச்சி அடைய வேண்டி இருக்கு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..