நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று சனிக்கிழமை மாலை - காளியம்மனின்
உற்சவ திருமேனிக்கு சகல திரவியங்களுடன் அபிஷேகம் செய்து வைக்கும்படி ஆக்ஞை..
அபிஷேக வேளையிலேயே அலை அலையாய் நிலை கொள்ளாத நிலையில் அருள் வந்து இறங்கி விடும்.. அபிஷேகம் நிறைவு பெற்றதும் புதுச்சேலையும் பூமாலையும் சாற்றி - பூசாரியார் மற்றவற்றை முன்னெடுக்க அடுக்கு தீப ஆராதனையும் தொடர்ந்து ஸ்ரீவிநாயகர், நாகர், வேம்பு, மதுரை வீரன்,கருப்ப ஸ்வாமி, மூலஸ்தானம் - என, மலர் தூவி போற்றி வழிபாடு.. பஞ்ச தீப ஆராதனையுடன் விபூதி குங்குமம் வழங்கும் வேளையில் ஆங்காங்கே ஆவேசம் வந்து ஆடுபவர்களை ஆதரிக்க வேண்டும்..
இந்நிலையில் சிலரைக் கூப்பிட்டு வாக்கு சொல்வதும் குறையிரந்து நிற்பவர்களுக்கு பதில் கூறுவதுமாக அனைத்தையும் அன்னையின் அருளுடன் இனிதே செய்தாயிற்று..
அன்பர்களுக்கு மிளகுப் பொங்கலும் கதம்ப சாதமும் நிலக்கடலை சுண்டலும் வழங்கினோம்..
மக்களுக்கும் மகிழ்ச்சி.. ..
அம்பிகைக்கும்.ஆனந்தம்..
இருப்பினும் ஒரு சில படங்களைப் பதிவில் தந்துள்ளேன்..
அம்பாளின் பரிபூரண நல்லாசிகளுக்குப் பிரார்த்தனை..
ஆதியும் நீயே அந்தமும் நீயே
அருள் தரும் தாயே காளீஸ்வரி
நீதியும் நீயே ஜோதியும் நீயே
சர்வ காரணி காளீஸ்வரி..
பகை அது விலகிட
வருவாயே..
பிணி அது தொலைந்திட
அருள்வாயே..
பாசமும் நேசமும்
பரிவுடன் ஓங்கிட
திருவிழி காட்டி
திருவருள் கூட்டி
தினம் தினம் நல்லருள்
பொழிவாயே!..
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***
என்ன.. இது.. பத்து மணியாகியும் ஒருத்தரையும் காணவில்லை?..
பதிலளிநீக்குமிளகுப் பொங்கல், கதம்ப சாதம், நிலக்கடலை சுண்டல், பானகம் ஆகியவற்றை 'முடித்து' விட்டு வர தாமதம்...!
நீக்குமெதுவா வருவாங்க.. அவங்க அவங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கும்..
பதிலளிநீக்குகோயில் வேலயப் பாருங்க சாமீ!..
சில படங்களும் அருமை...
பதிலளிநீக்குஓம் சக்தி...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அம்மனின் அலங்கார படங்கள் நன்றாக இருக்கின்றன. பூஜை விபரங்கள் அறிந்து கொண்டேன். நல்லபடியாக தங்கள் வழிபாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தமைக்கு வீரமாகாளியம்மனுக்கு மனம் நிறைந்த நன்றிகள். அம்பாளின் பரிபூரண நல்லாசிகளுக்கு நானும் மனமுருகி பிராத்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏. பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்னையின் தரிசனம் அருமை. உங்கள் கவிதையும் அருமை.
பதிலளிநீக்குநீங்களும் அருள் வாக்கு சொன்னீர்களா?
பிரசாதங்கள் அருமை.
தாய் எல்லோர் குறைகளையும் நீக்கி அருள வேண்டும்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
அன்னையின் மலர் அலங்கார படங்கள் அருமை.
பதிலளிநீக்குஇப்படங்களே நிறைவைத் தந்தன அண்ணா. அழகான அலங்காரத்துடன் கூடிய அன்னையும் முகமும், முழுமையான படங்களும் அருமை,
பதிலளிநீக்குமிளகுப் பொங்கல், கதம்பசாதம், நிலக்கடலை சுண்டல், பானகம்!!! சுவை அன்னையின் பிரசாதமாய்..
கீதா
முதல் படத்திலேயே அம்மாவின் திருமுகம். அழகிய படங்கள். வாக்கு சொல்வது?
பதிலளிநீக்குஅழகிய அலங்காரங்களுடன் காட்சி தருகிறாள் அம்பிகை.
பதிலளிநீக்குஅம்பிகையின் அருளை வேண்டுவோம்.
அழகான படங்கள். அம்பிகை அனைவருக்கும் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்கு