நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை..
தனம், தான்யம், பசு,
அரசு, சந்தானம், தைரியம்,
வாகனம், சுற்றம்
- என்பனவாகிய
எட்டுப் பெருஞ்செல்வங்களையும்
வழங்குபவள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி..
மலரின் மேவு திருவே - உன் மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும் - தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன்..
-: மகாகவி பாரதியார் :-
யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
***
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:
ஃஃஃ
இதோ.. நேற்று மாலை முதல் வீடு பிஸியோ பிஸி... இன்றும் இதோ.. ஆரம்ப முஸ்தீபுகளுக்கு உதவி விட்டு நடுவில் வலைப்பக்கம் ஒதுங்கி இருக்கிறேன்.
பதிலளிநீக்குவரலக்ஷ்மி வரங்களனைத்தும் அருளட்டும்.
நல்ல செய்தி வந்திருக்கிறது போலவே...
பதிலளிநீக்குhttps://www.dinamalar.com/news_detail.asp?id=2826478
வரலட்சுமி அனைவர் இல்லங்களுக்கும் வருகை தந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மன நிறைவு , செல்வ வளம், மனபலம் அனைத்தும் அருள வேண்டும்.
பதிலளிநீக்குபாடல்களை பாடி அன்னையை வேண்டிக் கொண்டேன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்