நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி நகருக்கு அருகில் இருக்கின்ற
இருக்கன்குடி திருத்தலத்தில்
கோயில் கொண்டுள்ள
ஸ்ரீ மாரியம்மனைத் துதித்து இரண்டு மாதங்களுக்கு
முன்பு எழுதப் பெற்ற பாடல்
இன்றைய பதிவில்...
பிறக்கும் உயிர்க்குப் பெருந்துணையே குணம்
சிறக்கும் மனிதர்க்கு வருந்துணையே
வெறுக்கும் வினைதனைச் செய்திடினும் மனம்
பொறுக்கும் தாயே மகமாயி...1
இருக்கன்குடி என்னும் தலத்தினளே அருள்
சுரக்கும் கற்பகத் திருவினளே..
இருகை ஏந்தி உன்னிடம் நின்றேன்
திருக்கண் நோக்கிப் பொழிந்திடுவாய்.. 2
நேர்வழி யதனில் நின்றறியேன் நித்தம்
நின்முகம் பார்த்துப் பணிந்த றியேன்..
சீர்கொண்டு உன்புகழ் பாடுதற்கு நல்ல
தென்தமிழ்ச் சொல்லும் நானறியேன்.. 3
அன்புடன் என்னையும் சிந்தை செய்து
அருள் தர அழைத்த அன்னையளே
உன்முக தரிசனம் முழு மதியாய் நன்மை
தந்திடக் கூடும் பெரு நிதியாய்.. 4
உறும் துயர் தீர்த்திட வரும் வகையாய்
நறுங் குழல் நாயகி என எழுந்தாய்..
கோமதி சங்கரி நாரணியாய்
குறை தீர்த்திட வரும் எழில் பூரணியாய்.. 5
இடுக்கண் தீர்க்கும் தன்மையளே
இருக்கன் குடியின் மகமாயி..
கடுக்கும் வேதனை தனைத் தீர்த்து
கொடுக்கும் கரங்களில் நலம் காட்டு.. 6
வலம் வந்து வணங்கிட நலம் தருவாய்
நலம் தந்து வளம் தந்து துணை வருவாய்
தவம் என்று அறியா மட மனதில்
சிவம் எனும் மங்கலம் தான் அருள்வாய்..7
உடற்பிணி யதுவும் நீங்கிடவே எந்தன்
உளம் உந்தன் வாசலில் தொழுதிடவே
வலி கொண்ட நெஞ்சுக்கு வழிகாட்டு எந்தன்
விழி தனில் ஆனந்த ஒளி கூட்டு.. 8
***
அனைவரது இல்லத்திலும்
நலம் ஓங்கிடுவதற்கு
அன்னை அருள் புரிவாளாக..
ஓம் சக்தி ஓம்..
கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ
வருந்துணையே என்பது வரும் துணை என்கிற பொருளிலா?
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
வரும் துணை - என்பதைத் தான் வருந்துணை - என்று எழுதியுள்ளேன்..
நன்றி..
அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் - வழக்கம் போல... அன்னையைப் பணிவோம் அகிலத்தின் துயர் துடைக்க.
பதிலளிநீக்குஅன்னை அகிலத்தின் துயர் துடைப்பாளாக..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறு வயதில் சிவகாசியில் இருக்கும் போது நிறைய தடவை போய் இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅப்புறம் விருதுநகர் போன போது என் கணவருடன் சென்று இருக்கிறேன். அம்மன் மிக சக்தி வாய்ந்தவர்.
அம்மன் மேல் நீங்கள் எழுதிய கவிதை அருமை.பாமலையை பாடி வணங்கி கொண்டேன்.
அன்னை நலம் தரட்டும்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
அன்னையின் அருள் என்ற ஆனந்த ஓளி எங்கும் பரவட்டும்.
பதிலளிநீக்குஅகிலம் எல்லாம் விளங்கும்
நீக்குஅம்மன் அருள்...
வாழ்க வையகம்.. வாழ்க.. வாழ்க..
இறையருளால் தீநுண்மி ஒழியட்டும், மனிதவாழ்வு மகிழட்டும்.
பதிலளிநீக்குஅன்புன் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமை அய்யா...
பதிலளிநீக்குஆன்மீகம் என்னும் போது உங்களிடமிருந்து அசத்தலாய் வரும் பதிவு... அது இதிலும் தொடர்கிறது.
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்லதொரு பாடல் ஐயா. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
விரைவில் தீநுண்மி அழியட்டும்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வழக்கம் போல அருமையா எழுதியிருக்கீங்க துரை அண்ணா. பாடலை ரசித்தேன். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீதா
அன்பின் சகோ..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மிக அருமை!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பாடல். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இருக்கன்குடி மாரியம்மன் உலக மக்கள் அனைவரையும் இந்த தொற்று அரக்கனிடமிருந்து காத்தருள வேண்டும். நானும் மனமாற அம்மனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஇறுக்கமான சூழ்நிலையைக் கடந்து வந்திருக்கின்றீர்கள்.. ஆறுதலையும் தேறுதலையும் அன்னை அருள்வாளாக...
தங்களது அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..