நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 16, 2021

மங்கலப் பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
மூன்றாம் நாள்..
காணும் பொங்கல்..

கிராமங்களில்
இளையோருக்கான
குறிப்பாக
இளம்பெண்களுக்கான
திருநாள்..

ஊர் மந்தையில்
அல்லது
கோயில் வாசலில்
கோலாட்டம் கும்மி - என
குதுகலிக்கும் நன்னாள்.

கிராம தேவதையை அழைத்துப்
பொங்கலிடும் வழக்கம்
தஞ்சை கும்பகோணம்
பகுதிகளில்
இன்றும் நிகழ்கின்றது..
***
இன்றைய கவிதை
அன்பின் ஸ்ரீராம் அவர்கள்
எபியில் கொடுத்த
ஈற்றடிக்கானது..

அவர் தமக்கு நன்றி..


வேளை விடியல் என்று வெள்ளியன்று நீராடி
பாளைப் பனி முகத்தில்
புதுமஞ்சள் திலகமிட்டு
நாளை நமது என்று
நகர்வீதி நடந்துவந்தால்
காளைக்கும் வந்திடுமே காதல்..
***



பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடட்டும்..

பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. கொரோனா பயங்கள், கட்டுப்படுகள் இலலாதிருந்தால் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய திருநாள்...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தாமதத்திற்கு மன்னிக்க..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சும்மாவே கவிதைகளையும் செ(ம்)மையாய் பின்னுவீர்கள்.  ஈற்றடி கொடுத்தால் அதை மட்டும் விட்டு வைப்பீர்களா என்ன...   அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      இந்த ஈற்றடி தாங்கள் கொடுத்ததே..
      மறந்து விட்டீர்களா!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அதெப்படி மறக்கும்? நன்றாய் நினைவிருக்கிறது.

      நீக்கு
  3. அன்பான பொங்கல் வாழ்த்துகள். ஶ்ரீராம் எப்போ ஈற்றடி கொடுத்தார் எனத் தெரியலைனாலும் கவிதை அருமை. உங்களுக்குச் சொல்லணுமா? எப்போவும் போல் அழகான தமிழில் எழில் கொஞ்சும் கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      தாமதத்திற்கு மன்னிக்க...
      வாழ்த்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  4. அழகிய படங்கள்
    பொங்கலோ பொங்கல் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      தாமதத்திற்கு மன்னிக்கவும்...
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      தாமதத்திற்கு மன்னிக்க...
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. சிறப்பான பதிவு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    வரும் காலம் அனைவருக்கும் சிறப்பாகவே அமைந்திட பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      தாமதத்திற்கு மன்னிக்க...
      வாழ்த்துரைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி..

      அன்பின் நல்வாழ்த்துகளுடன்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..