நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 26, 2020

மார்கழி முத்துக்கள் 11

 தமிழமுதம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு..(072)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 11


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே 
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!..  
***

தித்திக்கும் திருப்பாசுரம்

காஞ்சி ஸ்ரீ வரதராஜப்பெருமாள்

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு..(2169)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்

திருத்தலம்
திருக்கருகாவூர்


இறைவன்
அருள்திரு முல்லைவனநாதர்
ஸ்ரீ மாதவி வனேஸ்வரர்  


அம்பிகை
அருள்தரு கரு காத்த நாயகி
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை

தல விருட்சம் - முல்லை 
தீர்த்தம் - க்ஷீர தீர்த்தம்

ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை
அம்பிகையின் பேரருளைக் 
கண்முன்னே காணலாம்..

உள்ளங்கை நெல்லிக்கனி என, 
உண்மையை உணரலாம்..

தஞ்சை பாபநாசத்திற்கு அருகில் உள்ள தலம்
தஞ்சையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும்
பேருந்து வசதிகள் உள்ளன..
*

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாம்
சீலனாஞ் சேர்ந்தார் இடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடியாம் வானோர் தங்கட் கெல்லாம்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூர் எந்தை தானே..(6/15) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 11 - 12


 மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 12

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. ஓம் ஸ்ரீ நாராயணாய நம.  ஓம் நச்சிவாய.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தரிசனம். வரதராஜரைச் சென்னையில்/அம்பத்தூரில் இருந்தவரை நினைச்சப்போப் போய்ப் பார்த்திருக்கோம். இங்கும் நல்ல தரிசனம். அதே போல் திருக்கருகாவூரும். பல முறை பலருக்காகப் போய் வேண்டிக் கொண்டு வந்திருக்கோம். கடைசியாக் குஞ்சுலுவுக்குப் பிரார்த்தனையை நிறைவேற்ற அழைத்துச் சென்றோம் 2018 ஆம் ஆண்டில். இங்கேயும் நல்ல தரிசனம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  3. பாசுரங்கள், பதிகங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மனதிற்கு நிறைவினைத் தருகின்ற பாடலின் அடிகள். நீங்கள் கூறியுள்ள தலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  5. திருக்கருகாவூர் இறைவன் - இறைவி தரிசனம் நன்று. ஒரு முறை இத்தலத்திற்குச் சென்றிருக்கிறேன். அந்த நினைவு மனதில்.

    படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..