தமிழமுதம்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு..(072)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 11
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
***
ஓம் ஹரி ஓம்
***
சிவதரிசனம்
திருத்தலம்
திருக்கருகாவூர்
திருக்கருகாவூர்
இறைவன்
அருள்திரு முல்லைவனநாதர்
ஸ்ரீ மாதவி வனேஸ்வரர்
தல விருட்சம் - முல்லை
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 12
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 12
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
ஓம் ஸ்ரீ நாராயணாய நம. ஓம் நச்சிவாய.
பதிலளிநீக்குஅருமையான தரிசனம். வரதராஜரைச் சென்னையில்/அம்பத்தூரில் இருந்தவரை நினைச்சப்போப் போய்ப் பார்த்திருக்கோம். இங்கும் நல்ல தரிசனம். அதே போல் திருக்கருகாவூரும். பல முறை பலருக்காகப் போய் வேண்டிக் கொண்டு வந்திருக்கோம். கடைசியாக் குஞ்சுலுவுக்குப் பிரார்த்தனையை நிறைவேற்ற அழைத்துச் சென்றோம் 2018 ஆம் ஆண்டில். இங்கேயும் நல்ல தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குபாசுரங்கள், பதிகங்கள் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குமனதிற்கு நிறைவினைத் தருகின்ற பாடலின் அடிகள். நீங்கள் கூறியுள்ள தலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன்.
பதிலளிநீக்குஅழகிய தரிசனம் நன்று.
பதிலளிநீக்குதிருக்கருகாவூர் இறைவன் - இறைவி தரிசனம் நன்று. ஒரு முறை இத்தலத்திற்குச் சென்றிருக்கிறேன். அந்த நினைவு மனதில்.
பதிலளிநீக்குபடங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி. தொடரட்டும் பதிவுகள்.