நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 10, 2020

மகிழ்

 


துயருறு வாழ்வின் துணையே போற்றி..
தொழுபவர் நெஞ்சில் ஒளியே போற்றி!..
***

கடந்த சில நாட்களாகவே
மனம் சரியில்லை..

அடுத்தடுத்த
 நிகழ்வுகளால்
துயருற்றிருக்கின்றது..

வேலையிடத்திலும்
அளவுக்கு அதிகமான சுமை..
யாரிடத்தும் சொல்வதற்கான
சூழலும் இல்லை..

பதிவுகளில் கவனம்
செலுத்துவதற்கு இயலாதபடி
இருக்கிறது..

எல்லாம் வல்ல இறைவனின்
தனிப் பெருங்கருணையினால்
ஒவ்வொரு நாளும் நகர்ந்து
கொண்டிருக்கின்றது..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

  வாழ்வும் வளமும் பொலிந்திட வேண்டும்..
வான்பொழி கருணை நிறைந்திட வேண்டும்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

10 கருத்துகள்:

  1. துரை, உங்கள் இன்னல்கள் தீரப் பிரார்த்திக்கிறேன். இங்கேயும் அப்படித் தான். பற்பல நிகழ்வுகளாலும், சம்பவங்களாலும் மனம் பேதலித்துச் சில சமயம் என்ன செய்கிறோம்/சொல்கிறோம் என்பதே புரிவதில்லை. :( நேரம் ஒருத்தருக்கும் சரியில்லை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    உங்கள் மனக் கலக்கங்கள், மற்றும் வேலை பளுக்கள் அனைத்தும் தீர்ந்து, முன்பு போல் சுமூக நிலையடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    என்னவோ.. இந்த வருடம் பிறந்த நேரம் அனைவருக்குமே ஒரு வித இன்னல்களையும், மனக் குழப்பங்களையும் அடிக்கடி தருகிறது. இந்த தொற்று வந்து வேறு மிக மனச்சஞ்சலங்களை தினமும் தன் பங்குக்கு தருகிறது. இதில் நாட்கள் வேறு சொல்லிக் கொள்ளாமல் விரைவாக ஓடுவதும் ஒரு நல்ல விஷயந்தான்.. ஆனாலும் வரும் வருடம் நல்லபடியாக பிறந்து உலகம், உலக மக்கள் நல்ல முன்னேற்றம் அடைய அனைவருமே பிரார்த்திப்போம்.

    காணொளி மிகவும் நன்றாக உள்ளது. எங்கு எடுக்கப்பட்டது? அதைப் பார்த்து ரசிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தங்களது மனக்கவலை விரைவில் தீரட்டும் ஜி காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  4. மனக்கவலை விரைவில் தீர்ந்திடப் பிரார்த்திக்கிறேன்.  மனதின் காயங்களும் ஆற வேண்டுகிறேன்.  காணொளியை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. இந்தக் காணொளியை எப்படிக் காலை பார்க்காமல் இருந்தேன்? அருமை!

    பதிலளிநீக்கு
  6. // கடந்த சில நாட்களாகவே
    மனம் சரியில்லை.. //


    கோமதி அம்மா அவர்களின் துணையின் மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது... இதனால் அடைந்த துயரம் சொல்ல முடியாதது..

    மற்றும் .எனது சொந்த சிலவற்றும்...

    பதிலளிநீக்கு
  7. இன்னல்கள் எல்லாம்,

    மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும்

    என்பதுபோல மறைந்துவிடும். கவலை வேண்டாம்

    பதிலளிநீக்கு
  8. இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை''
    இப்போது இதுதான் நிஜம்.

    இன்னல்கள் தீர வேண்டும்.
    நல்ல நாள் பிறக்கட்டும்.

    அன்பு கோமதியின் துயருக்கு நாமெல்லாம்
    பேசித்தான் தணிக்க முயல வேண்டும்.

    உங்கள் சோகங்களும் விலக முருகன் அருள்
    கிடைக்கும். நம்பிக்கையுறுங்கள் அன்பு துரை.
    யானை காணொளி மிக மிக அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. உங்களின் மன வேதனையை உணரமுடிகிறது. உங்களுக்கு நாங்கள் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் மன திடத்தையும், எதையும் எதிர்கொள்ளும் பாங்கினையும் உங்கள் எழுத்துவழி நாங்கள் அறிவோம். நீங்கள் வணங்கும் இறைவன் என்றும் துணைநிற்பான். முடிந்தவரை எழுதுங்கள். பகிர்ந்துகொள்ளுங்கள். மனதின் பாரம் குறையும்.

    பதிலளிநீக்கு
  10. கவலைகள் விரைவில் தீரட்டும். நல்லதே நடக்கட்டும்.

    முடிந்த வரை எழுதவும். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..