நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 27, 2020

மார்கழி முத்துக்கள் 12

 தமிழமுதம்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு..(075) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 12


கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
பனித் தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்..
  ***
தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ கோதண்டராமன் - குடந்தை

திறம்பாதென் நெஞ்சமே செங்கண்மால் கண்டாய்
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான் - புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதம்தான் வான்தானே
கண்டாய் கடைக்கட் பிடி..(2177)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருக்குடமூக்கு - கும்பகோணம்


இறைவன் - ஸ்ரீ கும்பேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை 

தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - காவிரி, மகாமகக்குளம்..



குடந்தையிலுள்ள பதிகம் பெற்ற
சிவாலயங்களுள் முதன்மையானது..

ஏனையவை
குடந்தைக் கீழ்க்கோட்டம் - ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்
குடந்தைக் காரோணம் - ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்..
*
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே..(3/59)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 13 - 14


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.. 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்... 14 


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
 ***

6 கருத்துகள்:

  1. சிவாய நம ஓம்.  நாராயணாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
  2. பெரும்பாலான கும்பகோணக் கோயில்கள் பார்த்திருந்தாலும் சோமேஸ்வரர் கோயிலுக்குப் போனதே இல்லை. தரிசனத்துக்கு நன்றி. "காதார் குழலாட" எனக்கு மிகவும் பிடித்த பதிகம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதல் படத்தின் அழகு மனதை மிகவும் ஈர்க்கிறது. காலையில் அருள் நிறைந்த தெய்வங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். மனதிற்கு மகிழ்வாக உள்ளது. திருப்பாவை, பாசுரங்கள் பாடல்கள் மிகவும் இனியதாக இருக்கிறது. அனைத்துப் பகிர்வினுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. திருவெம்பாவை பாடல் 14 மிகவும் பிடித்த ஒன்று. இங்கே படிக்கத் தந்தமைக்கு நன்றி ஐயா.

    படங்களும் சிறப்பு. தொடரட்டும் தமிழமுதம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..