நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 19, 2020

மார்கழி முத்துக்கள் 04

 தமிழமுதம் 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.. (10)
***

அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை 
திருப்பாடல் 04 


ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழஉலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.

ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் - தஞ்சை
தித்திக்கும் திருப்பாசுரம்

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் 
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி 
அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான்கண்டு கொண்டேன் 
நாராயணா எனும் நாமம்..(953)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருமணஞ்சேரி


இறைவன் - ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்
அம்பிகை - கோகிலாம்பிகை


தல விருட்சம்
வன்னி, கொன்றை, கருஊமத்தை
தீர்த்தம் - சப்த சாகரம்

ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்

துன்னு வார்குழலாள் உமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின ஓயுமே!..(5/87)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய 
திருப்பள்ளியெழுச்சி 
திருப்பாடல் 04

ஸ்ரீ சங்கரநாராயண மூர்த்தி

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவ பெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

13 கருத்துகள்:

  1. கண்ணனையும் கல்யாணசுந்தரேஸ்வரரையும் தரிசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மார்கழிப் பதிவுகளை தரிசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நலமே விளையட்டும்.

    தொடரட்டும் மார்கழி சிறப்புப் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நரசிங்கப்பெருமாள் கோயில் தஞ்சையில் இருப்பதை இன்றே அறிந்தேன். நல்ல பாசுரங்கள் பகிர்வுக்கும் பதிகப் பகிர்வுக்கும் நன்றி. திருமணஞ்சேரி பல முறை போயிருக்கோம். அம்பிகையின் நாணம் எப்போதுமே மனதைக் கவரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை நகருக்குள் கீழவாசலில் இன்னொரு திருக்கோயிலும் உள்ளது..
      ஸ்ரீ யோக நரசிம்மர் என்பது திருப்பெயர்..
      தெற்கு நோக்கிய திருக்கோயில்..

      தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. ஓம் நம சிவாய...

    குறளை நீக்கா விட்டாலும் நலம்...

    மார்கழி ஆரம்ப பதிவிலிருந்து எதனால் குறள்...? என்பதையும் விளக்கலாம்... நன்றி ஐயா...

    முருகா...!@

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழை நினைவு கூர்கின்றேன்..
      தமிழமுதை நினைவு கூர்கின்றேன்..

      அன்பின் தனபாலன்..
      குறளமுதை மார்கழியில் இத்தளத்தில் பதிவதனால் தங்களுக்கு ஏதேனும் இழப்பு உண்டோ!?..

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..