கடந்த செவ்வாய்க்கிழமை முன்னிரவு ..
குறித்த நேரத்தில் -
தஞ்சையிலிருந்து உழவன் விரைவு ரயில் புறப்பட்டது..
அதிகாலையில் சற்றே தாமதத்துடன் - தாம்பரம்..
அங்கிருந்து திரிசூலத்திற்கு மாறி - இதோ சென்னை விமான நிலையம்..
காலை 9.25க்கு வானில் ஏறியது விமானம்..
அபுதாபி வழியாக குவைத்திற்குப் பயணம்..
Transit Flight ஆனதால் குவைத்திற்கு வந்தபோது இருட்டி விட்டது..
முன்னிரவுப் பொழுதில் -
குடியிருக்கும் வசந்த மாளிகையை நோக்கி விரைந்தால் -
அடுக்குமாடி குடியிருப்பு பூட்டப்பட்டுக் கிடந்தது..
என்ன இது சோதனை!?..
அரே..பாய்.. கட்டிடத்தைக் காலி செய்து ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆனால் எங்கே போயிருக்கிறான் என்று தெரியவில்லை!..
- என்று குரல் வந்தது - அருகிலிருந்த கடைக்குள்ளிருந்து...
குவைத்திலிருந்து ஊருக்குத் திரும்பினால் அவ்வளவு தான்..
இங்கிருப்பவர்களிடம் நான் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை...
அதனால் இருப்பிடம் மாறிய தகவல் தெரியவில்லை..
ஆனால் -
புதிய இருப்பிடத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும்
பழைய கட்டிடத்தின் முகப்பில் தெரியப்படுத்த வேண்டுமல்லவா!..
அப்படி எதையும் செய்யவில்லை..
அந்த அளவுக்கு அறிவாளிகள் இங்கே!..
திகைத்துப் போனேன்.. எங்கென்று தேடுவது?..
கைபேசி ஆழ்ந்த தூக்க நிலையில்!..
என்ன செய்வது?..
பழைய குடியிருப்பின் அருகில் உணவகம்.. நடத்துபவர் தஞ்சாவூர்க்காரர்..
அங்கே சென்று விசாரிக்க -
அது வெகு தூரம்.. இரவு இங்கே தங்கிக் கொள்ளுங்கள் .. நாளை காலையில் செல்லலாம்!.. - என்றார்கள்..
வேறு வழி ஏதும் இல்லை..
சரி!.. - என்று இசைந்தபோது அதிர்ஷ்டம்..
உடன் வேலை செய்யும் எகிப்து நாட்டுக்காரன் எதிரில் வந்தான்..
நலம் விசாரித்து விட்டு அவனுடன் டாக்ஸியில் பயணம்..
புதிய இருப்பிடத்திற்கு வந்து -
எங்கே எனது பொருட்கள்?.. எது எனது அறை?.. என்று கேட்டால்,
உங்களுக்கு அறை ஒதுக்கவில்லை!.. - என்றான் Camp In-charge..
ஏன்.. டா?.. - மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்...
உங்களுடைய பொருட்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றன.. தற்காலிகமாக நான்காவது தளத்தில் பதினைந்தாவது அறையில் தங்கிக் கொள்ளுங்கள்..
அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை...
பொருட்கள் என்ன கதியாகியிருக்கும்!..
மனத்திரையில் காட்சிகள் விரிந்தன..
மறுநாள் காலை..
பழைய இருப்பிடத்திலிருந்த பொருட்கள் (98 %) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன..
ஆனால் -
சமையலறையில் ஒரு மாதத்திற்கு சேர்த்து வைத்திருந்த அரிசி எண்ணெய் முதலான உணவுப் பொருட்களும் பாத்திரங்களும் எனக்குக் கிடைக்க வில்லை..
அவற்றின் கதி என்ன என்று தெரியவில்லை...
இவனுங்களுடைய சமையல் ஆகாது.. சமையல் செய்தே ஆகணும்!..
குவைத்தில் இன்னும் வெயில் அடங்கவில்லை..
ருத்துபா எனும் புழுக்கம்..
நீராவிக் குளியல் போன்று இருக்கும்..
அருகிலுள்ள பாஃஹீல் (Fahaheel ) நகருக்குச் சென்று
வெயிலோடு வெயிலாக அலைந்து பண்ட பாத்திரங்கள் வாங்கி வந்து
அலுப்பு தீர அமர்வதற்குள் மூன்று நாட்களாகி விட்டன..
தட்ப வெப்ப நிலையின் தடுமாற்றத்தினால் -
ஜலதோஷமும் கூடவே காய்ச்சலும் கூட்டு சேர்ந்து கொண்டன...
தற்காலிகமான தங்குமிடம் என்றுதான் எனக்கு சொல்லப்பட்டிருக்கின்றது..
என்றாலும் அறையில் முன்பே இருப்பவர்கள்
அறைக்குள் புதிய வரவாக கணினியைக் கண்டதும்
அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ!.. - என்று விழிக்கின்றார்கள்...
இன்று காலையில் தான் கணினியை ஒருங்கிணைத்து பதிவுகளை வாசித்தேன்..
கையில் Galaxy இருந்தாலும் பதிவுகளுக்கு கருத்துரைகள் இடவில்லை..
எல்லாம் இனிமேல் தான்..
ஒன்றரை மாதம் .. காற்றில் எழுந்த அன்னத்தின் தூவியாக பறந்து விட்டது..
விடுமுறை நாட்களின் செயல் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது..
அவற்றில் நிறைவேறியவை ஒரு சில மட்டுமே!..
எதிர்பாராத பயணங்கள் அதிகம்..
அன்புக்குரிய கில்லர் ஜி அவர்களைச் சந்திக்க தொடர்பு கொண்டேன்..
அப்போது அவர் கோவையில் இருந்து சென்னைக்கு பயணம்...
தொலைபேசியில் சில நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது..
ஆனால் அது கூட கிடைக்கவில்லை..
அன்புக்குரிய Dr. பா. ஜம்புலிங்கம் அவர்கள்
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
இருவரும் பொறுத்தருள வேண்டும்..
இரண்டு முறை முயன்றும் அவர்களைச் சந்திக்க இயலாமற்போனது..
என் பிழையே அன்றி வேறெதும் இல்லை...
அது சரி.. ஜி!.. உங்களுக்கென்று அறை ஒதுக்காமல் - தற்காலிக இருப்பிடம் கொடுத்திருக்கின்றார்களே ஏன்?..
கில்லர் ஜி அவர்கள் கேட்பது புரிகின்றது...
அந்த அளவிற்கு அவருக்கு இடைஞ்சல்களைச் செய்திருக்கின்றோம்..
அதனால் கடுப்பாகி - போங்கடா.. போங்க!.. - என்று, புறப்பட்டு விட்டார்..
இனி அவர் வருவதற்கில்லை.. ஊரிலேயே தங்கி விட்டார்!..
என்று, மனப்பால் குடித்திருக்கின்றார்கள்.. என்ன ஒரு வக்கிரம்!..
ஆனால் -
விடாது கருப்பு!.. - என்பது வீணர்களுக்குத் தெரியவில்லை..
அவர்கள் குடித்த பால் செரிக்காமல் போனது -
மீண்டும் என்னைக் கண்ட அதிர்ச்சியில்!..
குறித்த நேரத்தில் -
தஞ்சையிலிருந்து உழவன் விரைவு ரயில் புறப்பட்டது..
அதிகாலையில் சற்றே தாமதத்துடன் - தாம்பரம்..
அங்கிருந்து திரிசூலத்திற்கு மாறி - இதோ சென்னை விமான நிலையம்..
விமான நிலையத்தினுள் அழகுறும் சிற்பங்கள் |
கீழே சிங்காரச் சென்னை |
அபுதாபி வழியாக குவைத்திற்குப் பயணம்..
அபுதாபி - தரையிறங்குவதற்கு முன்பாக |
அபுதாபி விமான நிலையத்தில் |
அபுதாபி விமான நிலையத்தில் நமது தளம் |
குடியிருக்கும் வசந்த மாளிகையை நோக்கி விரைந்தால் -
அடுக்குமாடி குடியிருப்பு பூட்டப்பட்டுக் கிடந்தது..
என்ன இது சோதனை!?..
அரே..பாய்.. கட்டிடத்தைக் காலி செய்து ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆனால் எங்கே போயிருக்கிறான் என்று தெரியவில்லை!..
- என்று குரல் வந்தது - அருகிலிருந்த கடைக்குள்ளிருந்து...
குவைத்திலிருந்து ஊருக்குத் திரும்பினால் அவ்வளவு தான்..
இங்கிருப்பவர்களிடம் நான் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை...
அதனால் இருப்பிடம் மாறிய தகவல் தெரியவில்லை..
ஆனால் -
புதிய இருப்பிடத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும்
பழைய கட்டிடத்தின் முகப்பில் தெரியப்படுத்த வேண்டுமல்லவா!..
அப்படி எதையும் செய்யவில்லை..
அந்த அளவுக்கு அறிவாளிகள் இங்கே!..
திகைத்துப் போனேன்.. எங்கென்று தேடுவது?..
கைபேசி ஆழ்ந்த தூக்க நிலையில்!..
என்ன செய்வது?..
பழைய குடியிருப்பின் அருகில் உணவகம்.. நடத்துபவர் தஞ்சாவூர்க்காரர்..
அங்கே சென்று விசாரிக்க -
அது வெகு தூரம்.. இரவு இங்கே தங்கிக் கொள்ளுங்கள் .. நாளை காலையில் செல்லலாம்!.. - என்றார்கள்..
வேறு வழி ஏதும் இல்லை..
சரி!.. - என்று இசைந்தபோது அதிர்ஷ்டம்..
உடன் வேலை செய்யும் எகிப்து நாட்டுக்காரன் எதிரில் வந்தான்..
நலம் விசாரித்து விட்டு அவனுடன் டாக்ஸியில் பயணம்..
புதிய இருப்பிடத்திற்கு வந்து -
எங்கே எனது பொருட்கள்?.. எது எனது அறை?.. என்று கேட்டால்,
உங்களுக்கு அறை ஒதுக்கவில்லை!.. - என்றான் Camp In-charge..
ஏன்.. டா?.. - மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்...
உங்களுடைய பொருட்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றன.. தற்காலிகமாக நான்காவது தளத்தில் பதினைந்தாவது அறையில் தங்கிக் கொள்ளுங்கள்..
அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை...
பொருட்கள் என்ன கதியாகியிருக்கும்!..
மனத்திரையில் காட்சிகள் விரிந்தன..
மறுநாள் காலை..
பழைய இருப்பிடத்திலிருந்த பொருட்கள் (98 %) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன..
ஆனால் -
சமையலறையில் ஒரு மாதத்திற்கு சேர்த்து வைத்திருந்த அரிசி எண்ணெய் முதலான உணவுப் பொருட்களும் பாத்திரங்களும் எனக்குக் கிடைக்க வில்லை..
அவற்றின் கதி என்ன என்று தெரியவில்லை...
இவனுங்களுடைய சமையல் ஆகாது.. சமையல் செய்தே ஆகணும்!..
குவைத்தில் இன்னும் வெயில் அடங்கவில்லை..
ருத்துபா எனும் புழுக்கம்..
நீராவிக் குளியல் போன்று இருக்கும்..
அருகிலுள்ள பாஃஹீல் (Fahaheel ) நகருக்குச் சென்று
வெயிலோடு வெயிலாக அலைந்து பண்ட பாத்திரங்கள் வாங்கி வந்து
அலுப்பு தீர அமர்வதற்குள் மூன்று நாட்களாகி விட்டன..
தட்ப வெப்ப நிலையின் தடுமாற்றத்தினால் -
ஜலதோஷமும் கூடவே காய்ச்சலும் கூட்டு சேர்ந்து கொண்டன...
தற்காலிகமான தங்குமிடம் என்றுதான் எனக்கு சொல்லப்பட்டிருக்கின்றது..
என்றாலும் அறையில் முன்பே இருப்பவர்கள்
அறைக்குள் புதிய வரவாக கணினியைக் கண்டதும்
அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ!.. - என்று விழிக்கின்றார்கள்...
இன்று காலையில் தான் கணினியை ஒருங்கிணைத்து பதிவுகளை வாசித்தேன்..
கையில் Galaxy இருந்தாலும் பதிவுகளுக்கு கருத்துரைகள் இடவில்லை..
எல்லாம் இனிமேல் தான்..
ஒன்றரை மாதம் .. காற்றில் எழுந்த அன்னத்தின் தூவியாக பறந்து விட்டது..
விடுமுறை நாட்களின் செயல் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது..
அவற்றில் நிறைவேறியவை ஒரு சில மட்டுமே!..
எதிர்பாராத பயணங்கள் அதிகம்..
அன்புக்குரிய கில்லர் ஜி அவர்களைச் சந்திக்க தொடர்பு கொண்டேன்..
அப்போது அவர் கோவையில் இருந்து சென்னைக்கு பயணம்...
தொலைபேசியில் சில நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது..
ஆனால் அது கூட கிடைக்கவில்லை..
அன்புக்குரிய Dr. பா. ஜம்புலிங்கம் அவர்கள்
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
இருவரும் பொறுத்தருள வேண்டும்..
இரண்டு முறை முயன்றும் அவர்களைச் சந்திக்க இயலாமற்போனது..
என் பிழையே அன்றி வேறெதும் இல்லை...
அது சரி.. ஜி!.. உங்களுக்கென்று அறை ஒதுக்காமல் - தற்காலிக இருப்பிடம் கொடுத்திருக்கின்றார்களே ஏன்?..
கில்லர் ஜி அவர்கள் கேட்பது புரிகின்றது...
அந்த அளவிற்கு அவருக்கு இடைஞ்சல்களைச் செய்திருக்கின்றோம்..
அதனால் கடுப்பாகி - போங்கடா.. போங்க!.. - என்று, புறப்பட்டு விட்டார்..
இனி அவர் வருவதற்கில்லை.. ஊரிலேயே தங்கி விட்டார்!..
என்று, மனப்பால் குடித்திருக்கின்றார்கள்.. என்ன ஒரு வக்கிரம்!..
ஆனால் -
விடாது கருப்பு!.. - என்பது வீணர்களுக்குத் தெரியவில்லை..
அவர்கள் குடித்த பால் செரிக்காமல் போனது -
மீண்டும் என்னைக் கண்ட அதிர்ச்சியில்!..
சொல்லு!..
வந்துட்டேன்..ன்னு சொல்லு!..
திரும்பி வந்துட்டேன்..ன்னு சொல்லு!..
தீமைகள் வெருண்டு ஓடட்டும்..
திசைகளில் திருவருள் கூடட்டும்!..
ஓம் சக்தி ஓம்!..
***
எவ்வளவு இன்னல்கள் பிழைக்கச் சென்றிருக்கும் நாட்டில். எப்படி ஜி அப்படி குடியிருப்பைக் காலி செய்து கொண்டு போகின்றார்கள்? அதற்கு உரிமையாளர் இருப்பார் அல்லவா? அப்படி இருக்க அத்தனைபேரையுமா இப்படி மாற்றிவிட முடியும்? அறிவிப்பு எதுவுமில்லாமல்? மேன்ஷன் போன்றதா? குடும்பங்கள் இருக்காதோ? எவ்வளவு சிரமம் இல்லையா? எப்படி உங்கள் சாமான்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு போகிறார்கள்? ரொம்பவே வேதனையாக இருக்கிறது. மீண்டும் உங்களுக்கு வாங்க வேண்டிய நிலைமை...பொருள் நட்டம் மனதில் வேதனை...
பதிலளிநீக்குஎல்லாம் பனி போல விலகி உங்களுக்கு மகிழ்ச்சி பெருகிட பிரார்த்தனைகள்!
துளசிதரன், கீதா
அன்பின் துளசிதரன்..
நீக்குதங்களது கேள்விகளுக்கு தனிப்பதிவுதான் விடையாக அமையும்..
முயற்சிக்கிறேன்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி தங்களை சந்திக்க இயலாமல் போனதுற்கு வருந்துகிறேன்.
பதிலளிநீக்குமீண்டும் ஒருநாள் சந்திப்போம்.
முடிவில் அலப்பறை பண்ணி விட்டீர்கள் அருமையா புகைப்படத்துடன் வாழ்க நலம்.
விடாது கருப்பு.
நானும் இப்படித்தான் ஜி எந்த நாட்டுக்கு போனாலும் விமான நிலையத்தில் எனது தளத்தை திறந்து வைத்து விட்டு நகன்று விடுவேன்.
நீக்குஅன்பின் ஜி ..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
குடும்பத்துடன் இருந்துவிட்டு திரும்ப ஊர் செல்வதே கொடுமை. இதில் உடல்நிலை வேறு சரியில்லை என்றால் கஷ்டம்தான். அங்கே இருக்கும் புழுக்கம் (உடல் புழுக்கம், மனப்புழுக்கம் இரண்டும்தான்) பற்றி சொன்னது இங்கே வேர்க்கிறது. அப்படிக்கூடவா சொல்லாமல், பொருட்களை எடுக்காமல் செல்வார்கள்? உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் ..
நீக்குஅங்கும் இங்கும் மனிதர்கள் தானே - பெருந்தன்மைக்கு இடமில்லமல் போனது..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இனிமையான குடும்ப நினைவுகளுடன் சென்ற உங்களுக்கு இப்படி நேர்ந்தது கேடக் கஷ்டமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஉடன் இருந்தவர்கள் உங்கள் உடமைகளை எடுத்து போய் பத்திரபடுத்தி இருக்க வேண்டாமா? என்ன மனிதர்கள்!
உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.
விமான நிலைய படங்கள் அழகு.
அன்புடையீர் ..
நீக்குதங்கியிருந்த அறைக்குள் இருந்த பொருட்கள் ஓரளவுக்குக் கிடைத்து விட்டன..
சமையலறைச் சாதனங்கள் தான் காணாமல் போய்விட்டன..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ம்ம்ம்... இப்படியும் இன்னல்கள்... அனைத்தும் சரியாகட்டும்.....
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
அன்பின் வெங்கட் ..
நீக்குஅனைத்தும் சரியாகி விடும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வந்துட்டேன் என்ற தலைப்பினை நாங்கள் கிளம்பிவிட்டேன் என்றே படிப்போம். எங்களைப் பொறுத்தவரை உங்களின் தலைமையகம் இந்தியாதானே? நேற்றுகூட வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம், ஊருக்குச் செல்வதற்குள் தஞ்சாவூர் கீழவாசல் வருவீர்கள் என்று. இருக்கட்டும், அடுத்த முறை சந்திப்போம்.
பதிலளிநீக்குஅன்புடையீர் ..
நீக்குதங்களைச் சந்திக்க இயலாமற்போனதில் மிகவும் வருத்தம்..
என் பிழையே அன்றி வேறில்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
சென்னை விமான நிலைய படங்களும்....விமான படங்களும் அழகு...
பதிலளிநீக்குகஷ்டமான நேரமே....உடல் நிலையை கவனித்து பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...
அன்புடையீர் ..
நீக்குகாய்ச்சல் விட்டு விட்டது.. தற்சமயம் நலமே..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இப்போதும் ஒரு புதிய இடத்துக்கு வந்ததுபோல் உணர்கிறீர்களா
பதிலளிநீக்குஅன்பின் ஐயா ..
நீக்குஉண்மையில் புதிய இடத்திற்கு வந்ததைப் போலத்தான் இருக்கின்றது..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இன்டெரெஸ்டிங். கேம்ப் அடிக்கடி மாறும் வேலையா? சமையல் பாத்திரங்கள்... ஒருவேளை புதிதாக வாங்கும் வேளை வந்துவிட்டதோ என்னவோ... அதான், 'நல்லக விளக்கது நமசிவாயவே'தானே..
பதிலளிநீக்கு