பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென்
உள்ளம் பரவச மிகவாகுதே!..
ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணனை நினைந்து இயற்றிய கீர்த்தனை அது!..
அந்த இனிய வரிகள் வடுவூர் வாழும் அழகனுக்கும் பொருந்தும்
தேடி வந்த திரவியமாக சக்ரவர்த்தித் திருமகன்..
வடுவூர் ஸ்ரீராமனின் திருமுகம் கண்டு மயங்காதவர் எவர்!?..
நேற்று வடுவூர் வடிவழகனின் தரிசனம்..
ஆடி மாத திருமஞ்சன வைபவம் (ஜேஷ்டாபிஷேகம்)..
கண்ணாரக் கண்டு மகிழ்ந்தது நெஞ்சம்...
ஆகஸ்ட் 2 முதல் செப்டம்பர் 7 வரை நிகழ்கின்றது
கண்ணாரக் கண்டு மகிழ்ந்தது நெஞ்சம்...
அபிஷேக நிகழ்வுகளைப் படமெடுக்க இயலவில்லை..
இன்றைய பதிவின் படங்கள் ஆலய தரிசனம்...
வானம் மேகமூட்டமாக இருந்தது.. ஆயினும் மழை வரவில்லை..
கீழுள்ள படங்கள் எனது கைவண்ணம்..
ஸ்ரீ ஹயக்கிரீவர் சந்நிதியில் முன்பாக திருமஞ்சனம் நிகழ்த்தப் பெற்றது..
அதனால் திருச் சுற்றில் எவரையும் அனுமதிக்கவில்லை..
செவலைப் பசுக்களுடன் கோசாலை விளங்குகின்றது..
திருக்கோயிலின் தல விருட்சம் மகிழ மரம்..
தீர்த்தம் - சரயு எனும் திருக்குளம்..
கடுங்கோடையில் நீரின்றிக் கிடக்கின்றது..
இந்தவேளையில் இயந்திரங்களைக் கொண்டு தூர் வாரிக் கொண்டிருக்கின்றார்கள்..
சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால் பூமி சற்றே நனைந்திட - குளத்தினில் கொஞ்சமாக தண்ணீர் நிற்கின்றது..
திருக்கோயிலின் கிழக்காக தேரடி..
அருகே ஸ்ரீராமபக்த ஹனுமான் தனி சந்நிதியில் விளங்குகின்றார்..
வடுவூர் ஸ்ரீராமனைப் பற்றிய முந்தைய பதிவு - இங்கே!..
உள்ளம் பரவச மிகவாகுதே!..
ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணனை நினைந்து இயற்றிய கீர்த்தனை அது!..
அந்த இனிய வரிகள் வடுவூர் வாழும் அழகனுக்கும் பொருந்தும்
தேடி வந்த திரவியமாக சக்ரவர்த்தித் திருமகன்..
வடுவூர் ஸ்ரீராமனின் திருமுகம் கண்டு மயங்காதவர் எவர்!?..
நன்றி - Fb |
ஆடி மாத திருமஞ்சன வைபவம் (ஜேஷ்டாபிஷேகம்)..
கண்ணாரக் கண்டு மகிழ்ந்தது நெஞ்சம்...
கண்ணாரக் கண்டு மகிழ்ந்தது நெஞ்சம்...
அபிஷேக நிகழ்வுகளைப் படமெடுக்க இயலவில்லை..
இன்றைய பதிவின் படங்கள் ஆலய தரிசனம்...
நன்றி - திருக்கோயில் பட்டர் |
கீழுள்ள படங்கள் எனது கைவண்ணம்..
ஸ்ரீ ஹயக்கிரீவர் சந்நிதியில் முன்பாக திருமஞ்சனம் நிகழ்த்தப் பெற்றது..
அதனால் திருச் சுற்றில் எவரையும் அனுமதிக்கவில்லை..
செவலைப் பசுக்களுடன் கோசாலை விளங்குகின்றது..
திருக்கோயிலின் தல விருட்சம் மகிழ மரம்..
தீர்த்தம் - சரயு எனும் திருக்குளம்..
கடுங்கோடையில் நீரின்றிக் கிடக்கின்றது..
இந்தவேளையில் இயந்திரங்களைக் கொண்டு தூர் வாரிக் கொண்டிருக்கின்றார்கள்..
சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால் பூமி சற்றே நனைந்திட - குளத்தினில் கொஞ்சமாக தண்ணீர் நிற்கின்றது..
திருக்கோயிலின் கிழக்காக தேரடி..
அருகே ஸ்ரீராமபக்த ஹனுமான் தனி சந்நிதியில் விளங்குகின்றார்..
வடுவூர் ஸ்ரீராமனைப் பற்றிய முந்தைய பதிவு - இங்கே!..
தஞ்சையிலிருந்து 20 கி.,மீ. தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ளது வடுவூர்.
புகழ்பெற்ற பறவைகளின் சரணாலயமான வடுவூர் ஏரி ஊருக்கு முன்பாக உள்ளது..
அந்த ஏரியும் கோடையின் கொடுமைக்குத் தப்பவில்லை..
நாளையோ அதற்கடுத்த நாளோ நீர் நிறைந்து ததும்பக்கூடும்..
வடுவூர் ஏரி பறந்து திரியும்
பறவைகளுக்குச் சரணாலயம்!..
வள்ளல் ஸ்ரீராமனின் பாதம்
வருந்துகின்ற உயிர்களுக்குச் சரணாலயம்!..
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வடுவூருக்கு நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மேலும்
புதிய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்குடி , திருத்துறைப்பூண்டி செல்லும் அனைத்து புறநகர் பேருந்துகளும் வடுவூரில் நின்று செல்கின்றன.
நெஞ்சம் எனும் கல் நெகிழ்ந்துருக
வேண்டுமாயின்
வேண்டுமாயின்
வடுவூருக்கு வாருங்கள்!..
வடிவழகைப் பாருங்கள்!..
கொங்குமலி கருங்குழலாள் கௌசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள் குலத்தின்னமுதே இராகவனே தாலேலோ!..(721)
- குலசேகராழ்வார் -
ஸ்ரீராம் ஜயராம்
ஜய ஜயராம்..
***
ஸ்ரீராம் ஜயராம்
ஜய ஜயராம்..
***
பல முறை வடுவூர் சென்றுள்ளேன். இன்று மறுபடியும் உங்கள் பதிவின் மூலமாக இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றேன். நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி
பதிலளிநீக்குதங்களது கைவண்ண புகைப்பட தரிசனம் நன்று வாழ்க நலம்.
வடுவூர் - எனது நண்பர் ஒருவரின் சொந்த ஊர். செல்ல வேண்டும்.
பதிலளிநீக்குதண்ணீர் இல்லாத குளம் - :(
அன்பின் வெங்கட்..
நீக்குஇந்த மழைக் காலத்தில் நிலைமை சீராக வேண்டுவோம்..
தங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..
பலமுறை வடுவூர் ஏரியைப் பார்த்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குதண்ணீர் இல்லா ஏரி மனதை வருந்தச் செய்கிறது
அன்புடையீர்..
நீக்குஇந்த மழைக் காலத்தில் நிலைமை சீராக வேண்டுவோம்..
தங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..
வடூவூர் அழகன் வெகு அழகுதான்.
பதிலளிநீக்குஅன்றலர்ந்த தாமரை போல் புன்னகை சிந்தும் முகம்.
பார்த்து வியந்து இருக்கிறேன்.
மீண்டும் உங்கள் தளத்தில் பார்த்தது மகிழ்ச்சி.
அன்புடையீர்..
நீக்குஸ்ரீராமனின் அழகே அழகு..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி நன்றி..
வேதனை தான் ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குஎதிர் வரும் மழைக்காலத்தில் நிலைமை சீராகும் என நம்புவோம்..
தங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..
படங்கள் அருமை என்றாலும் ஏரி வற்றிக் கிடக்கிறதே வேதனை.
பதிலளிநீக்குஎன் மாமியாரின் ஊர். எனவே பல முறை சென்றிருக்கிறோம். மாமனாரின் ஊர் வாங்கல்.
கீதா
அன்பின் துளசிதரன்..
நீக்குஇந்த மழைக் காலத்தில் ஏரியும் குளமும் நிறைந்திட வேண்டுவோம்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி நன்றி..
திருச்சியில் இருந்தபோது நண்பர் ஒருவர் அவரது ஊரான விடுவூருக்கு வருகை தர பலமுறை அழைத்திருக்கிறார் அப்போதெல்லாம் ஏதோ காரணத்தால் போக இயலவில்லை இப்போது தோன்றுகிறது ஆனால் இயலவில்லை
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..
தஞ்சையில் இருந்த காலங்களில் வடுவூர் என்ற பெயர் போட்ட பேருந்தைப் பார்த்திருக்கிறேன்! அவ்வளவுதான். போனதில்லை. உங்கள் தயவில் இனிய தரிசனம்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி நன்றி..
வடுவூர் ராமன் ..அழகிய பொலிவான புன்னகை ததும்பும் முகம்...அழகு...
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..