நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

வந்தேமாதரம்..

இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்..
தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள்..
வாழ்க பாரதம்.. வெல்க பாரதம்!..

வந்தே மாதரம்!..

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்
வந்தே மாதரம்!..

ஸுப்ரஜ் யோத்ஸனா புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல ஸோபினிம்
ஸூஹாஸினீம் ஸூமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம் மாதரம்
வந்தே மாதரம்!..

கோடிகோடி கண்ட கலகல நி னாத கராலே
கோடிகோடி புஜைத்ருத கரகரவாலே 
அபலாகேனோ மா யேதோ பலே
பஹூபல தாரிணீம் நமாமி தாரீணீம் 
ரிபுதல வாரிணீம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா த்வம்ஹி ப்ராணா: சரீரே 
பாஹூதே துமி மா சக்தி 
ஹ்ருதயே துமி மா பக்தி 
தோமராயி ப்ரதிமாகடி மந்திரே மந்திரே!.. வந்தே மாதரம்!..

த்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரீணீம் 
கமலாம் கமல தள விஹாரிணீம் 
வாணீ வித்யா தாயினீம் 
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம் 
சுஜலாம் சுபலாம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

ஸ்யாமளாம் ஸரளாம் 
ஸூஸ்மிதாம் பூஷிதாம் 
தரணீம் பரணீம் மாதரம்!.. 
வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..


வந்தே மாதரம்!.. 

தேசத்தின் சுதந்திரப்போராட்ட வேள்வியின் மந்திரம் -  வந்தே மாதரம்!..

ஆங்கிலேய அரசின் அடிமைத் தளையிலிருந்து நாட்டை மீட்டெடுத்த
வீர  முழக்கம் வந்தே மாதரம்!..

வங்காளத்தின் ஸ்ரீபங்கிம் சந்திர சட்டர்ஜி (1838 - 1984) அவர்கள் எழுதி தாய்த் திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்த இந்த திருப்பாடலில் இருந்தே பிறந்தது.

வந்தே மாதரம் பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட நிகழ்ச்சி -
1896ல் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாடு

இப்பாடலைக் குழுவினருடன் இணைந்து பாடியவர் - ரவீந்த்ரநாத் தாகூர் 

அரசின்  அடக்கு முறையையும் மீறி - பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில்
வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் -  ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி.

இவர் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களின் அன்பு மருமகள். 

மகான் ஸ்ரீ அரவிந்தர் ஆகஸ்டு 7, 1906 அன்று துவக்கிய நாளிதழின் பெயர் -  வந்தே மாதரம்!.. 

பஞ்சாப் சிங்கம்  லாலா லஜபதி ராய் 1906ல்  லாஹூரில்  ஆரம்பித்த சஞ்சிகைக்குப் பெயர்  -  வந்தே மாதரம்!..

1906  மார்ச் மாதம் வங்காள  தேசத்தில் பரிசால் என்ற இடத்தில் நடந்த பரிசால் பரிஷத் ஊர்வலத்தினுள்

ஆங்கிலேய அரசு கூட்டத்தினுள் புகுந்து தடியடி நடத்தியது..

கொடூரமான தாக்குதல்.. தொண்டர்கள் மண்டை உடைபட்டு விழுந்தனர்..  ஊர்வலம் பாதியிலே  நின்று போனது. 

இதற்குக் காரணம்  மக்கள் முழங்கிய  - வந்தே மாதரம்!..


மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) அவர்களும் அவர் தம் நண்பர்களும் 1905 ல்  கொடி ஒன்றினை வடிவமைத்து  ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் (1907) மாநாட்டில் பறக்க விட்டனர். 

அது - மேலே பச்சையும் இடையே காவியும் கீழே சிவப்பும் கொண்டிருந்தது.

அந்த மூவர்ணக் கொடியின் நடுவில் திகழ்ந்த சொல் -  வந்தே மாதரம்!..

தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் (1943-1945) அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 

அக்காலத்தில்  சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது..

வந்தே மாதரம்!.. - என்று முழங்கியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுள் - 

இன்னும் நம் கண்முன்னே திகழ்பவர் - கொடி காத்த குமரன்!..

( நன்றி - விக்கி பீடியா )


சுதந்திரப் போராட்டத்தில் 
தமது இன்னுயிரை ஈந்த தியாக சீலர்களை 
மனதார நினைந்து வணங்குவோம்!..


அனைவருக்கும் 
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..
* * *

17 கருத்துகள்:

  1. சுதந்திரத்திற்குப் பாடுபட்ட வீரர்களைச் சொல்லி வந்தேமாதரம் எப்படி அவர்களின் குருதியில் கலந்து வெளிப்பட்டது என்பதை இறுதியில் நம் கொடிகாத்த குமரனையும் சொல்லி முடித்த விதம் அழகு!

    இனிய சுதந்திரதின நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      பள்ளிநாட்களில் இருந்தே விடியற்காலையில் - வந்தேமாதரம் பாடலின் முதல் நான்கு வரிகளைப் பாடும் வழக்கம்..

      வீர சுதந்திரம் வேண்டி நின்றவர் விரும்பிக் கேட்பது வேறல்ல..

      அன்பின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வந்தே மாதரம் பாடல் முழுமையும் அருமை! காட்சிகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி
    எவ்வளவு வரலாற்ரு செய்திகள் அறிந்தேன் முன்னோர்களுக்கு நினைவுகூறல் மிகவும் அருமை காணொளி பிறகு காண்பேன் நன்றி (நெட் ஸ்லோவ்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அன்பின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வந்தே மாதரம்.....

    வந்தே மாதரம்....

    அரிய செய்திகளும்..உரம்மிகு வார்த்தைகளும்....கொண்ட அருமையான பகிர்வு....



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான செய்திகள். சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வந்தே மாதரம் சுதந்திரப் போராளிகளை இணைத்த தாரக மந்திரம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்களுக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்../

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அனைத்து விவரங்களும் அருமை.
    இப்போது உள்ள குழந்தைகளுக்கு தெரிய வேண்டிய பதிவு.
    பாடல் பகிர்வு, படங்கல் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..