நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 04, 2026

தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 புதன் கிழமை


தைப்பூசத்திற்கு
கோயிலுக்குச் செல்லலாம் என,  ஞாயிறன்று தஞ்சையில் இருந்து ரயில் வழியே திரு இடைமருதூரைச் சென்றடைந்தோம்... 

திருத்தேர்கள் அனைத்தும் நிலையில் நின்றிருந்தன..

முதல் நாள்  தேரோட்டம் நடந்திருந்தும் கூட்டம் குறையாதிருந்தது..

தஞ்சை மாவட்டத்தின் சீர் பெரும் விழாக்களில் திரு இடைமருதூர் தீர்த்தவாரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது...

பஞ்ச மூர்த்திகளும் சிறப்புற வீதியுலா எழுந்தருள ஆயிரக் கணக்கான மக்கள் இரண்டு கிமீ தொலைவில் உள்ள காவிரிக் கரையைச் சென்றடைந்தனர்...

மூட்டு வலியினால் நான் திருக் கோயிலிலேயே இருந்து கொண்டேன்.. மனைவியும் மகனும் சென்று வந்தனர்...

இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தார் அவர்களின் சீரிய பராமரிப்பில் உள்ளது..



பெரிய தேர்





 காணொளிகளுக்கு  நன்றி
சிவஸ்ரீகாந்த்

ஓம் நம சிவாய
***

6 கருத்துகள்:

  1. திருவிடைமருதூர்---  எங்கள் வீட்டில் சில உறவுகள் அடிக்கடி உச்சரிக்கும் பெயர்.  குலதெய்வமா, இல்லை  அவர்கள் சிலகாலம் இருந்த ஊரா நினைவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவிடைமருதூர் தமிழகத்தில் முக்தி தலங்கள் ஆறினுள் ஒன்று...

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. படங்களும் காணொளிகளும் சிறப்பு. காணொளிகள் பார்த்தேன். அம்மா.. எவ்வளவு உயரமான பெரிய தேர்...

    பதிலளிநீக்கு
  3. திருவிடை மருதூர் இறைவா வணங்குகிறோம்.

    தேர் வீதியுலா வரும் காட்சி அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..