நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 12, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வெள்ளிக்கிழமை


திருநாவுக்கரசர்
தேவாரம்

தலம்
திருப்பேரெயில்

முன்னை யார்மயில்
  ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில்
  தானோர் தலைமகன்
என்னை யாளும்
  இறையவன் எம்பிரான்
பின்னை யாரவர்
  பேரெயி லாளரே..  5/16/7
**
ஏ மனமே...
பேரெயில் தலத்துள் திகழ்கின்ற பெருமான்
முன்னே முதற் பொருளாகத் தோன்றியதோடு - மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானின் தந்தையாகிய தனிப்பெரும் தலைமகன்..

 என்னையாளுகின்ற இறைவனும் எம்பிரானும் அவரே. முன்னைக்குப் பின் தோன்றிய புதியவரும் அவரே ..

 நன்றி
பன்னிரு திருமுறை
தஞ்சையம்பதி

ஓம் நம சிவாய
***

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருநாவுகரசரின் தேவாரம் பாடி இறைவனை, எம்பெருமானை துதித்து வணங்கிக் கொண்டேன். விளக்கம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ஓம் நமசிவாய.. 🙏. ஓம் நமசிவாய 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. நமச்சிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க.

    பதிலளிநீக்கு
  3. அருமையான திருப்பேரெயில் பதிகம்

    பதிலளிநீக்கு
  4. திருப்பேரெயில் இறைவா வணங்குகின்றோம்.

    சிவாயநமக.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..