நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 15, 2026

சமையல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


தினை கூட்டாஞ்சோறு

தேவையானவை

தினை அரிசி - 300 கி

பெரிய வெங்காயம், 
கேரட், குடமிளகாய் - ஒவ்வொன்றும் 
நடுத்தரமாக ஒன்று, 

பச்சைப் பட்டாணி - 100 கிராம்

கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ், 
மஞ்சள் தூள் சிறிது, கறிவேப்பிலை, 
கொத்தமல்லி தழை சிறிதளவு, 

நல்ல நெய், 
கல் உப்பு - தேவையான அளவு...

செய்முறை: 
பச்சைப் பட்டாணி புதிதாக உரித்தெடுக்கப்பட்டதாக இருத்தல் நலம்..

வெங்காயம், கேரட், குடமிளகாய் இவற்றை சுத்தம் செய்து மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 
காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து - வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கப்பட்ட கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.

அடுத்து - 
சரிக்கு சரியாக தண்ணீர் விட்டு
தினை அரிசியை 
 சற்று நேரம் வைக்கவும்..

இதனை வடித்து விட்டு - 
ஒரு பங்கு தினைக்கு இரு பங்கு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.. 10 நிமிடங்கள் கழித்து தினை அரிசி வெந்ததும் வதக்கியவற்றைச் சேர்த்துக் கிளறி,
மல்லித் தழை கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாறவும்...

கூட்டாஞ்சோறு ஆக்குவதில் வீட்டுக்கு வீடு வேறுபாடு இருக்கக் கூடும்..

வாழ்க நலம்
***

9 கருத்துகள்:

  1. கூட்டாஞ்சோறு செய்முறை எளிதாக இருக்கிறது. நான் தினை அரிசி எல்லாம் வாங்கியதே இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. நாம் விரும்பினால் வேறு சில காய்களும் சேர்த்துக் கொள்ளலாம்தானே?

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகள் கூட்டாஞ்சோறு செய்து விளையாடுவது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தினை அரிசியை வைத்து கூட்டாஞ்சோறு செய்முறை நன்றாக உள்ளது. இதையெல்லாம் இன்னும் நாங்களும் சமைப்பதேயில்லை. இப்போதெல்லாம் அரிசிக்குப் பதிலாக வேறு தானியங்கள் உடல் நலத்திற்கு நல்லதென தெரியும். ஆனால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்களா என்பது தெரியவில்லை. எங்களுக்காகவேனும் இப்படி செய்யலாம்தான்.! இப்படி ஒரு தடவை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

    வளர்ப்பின் மீது அன்னை மஹாலக்ஷ்மியின் படம் இயற்கை சூழலுடன் மிக அற்புதமாக இருந்தது.நிறைய நேரம் பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அட.....டா.....இங்கும் சத்துணவு பகிர்வு. நன்றி.

    தினை அரிசி கூட்டாஞ்சோறு நல்ல சமையல் குறிப்பு. செய்து பார்த்திடுவோம்.

    பதிலளிநீக்கு
  6. குறிப்பு நன்றாக இருக்கிறது.

    ஆமாம் துரை அண்ணா, கூட்டாஞ்சோறு செய்வதில் வேறுபாடுகள் உண்டு. நான் பெரும்பாலும் திருநெல்வேலி செய்முறைதான் அது சிறுதானியமாக இருந்தாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சிறுதானியங்களை திணை உட்பட ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். அப்போதுதான் அதன் சத்தும் கிடைக்கும் செரிமானமும் ஆகும்.

    பார்க்கப் போனால் 8 மணி நேரம் ஊறவைத்துச் சமைத்தால், அது இன்னமும் சிறப்பு.

    வேளாண் விஞ்ஞானி டாக்டர். Khader Vali), சிறுதானியங்களை 'சிரிதானியா' என்று அழைக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு, பாலிஷ் செய்யப்படாத 5 வகையான சிறுதானிய உணவுகளை மட்டுமே அவர் பரிந்துரைக்கிறார். திணை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி. பாலிஷ் செய்யப்படாத தானியம் என்றால் மிகவும் சிறப்பு. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உதவும்.

    அவர் சொல்வது குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஊற வைத்தல் மிகவும் அவசியம் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..